ரம்…ரம்மி…ரம்யா

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

கே ஆர் விஜய்


டே, கார்த்திக்! வாடா ஒரு கை குறையுது.

நான் நிஷா வீட்டு வரை போகணும்.

எதுக்கு ?

அவ என்னோட கெமிஸ்ட்ரி நோட்ஸ் கேட்டிருந்தா.

போடா வெண்ணை! அதெல்லாம் நாளைக்கு குடுத்துக்கலாம். வந்து உட்காரு. ஒரு கை குறையுதுன்னா இப்ப தான் இவரு அப்படியே படிச்சி… வாயில அசிங்கமா வருது …

சரி எனக்கும் ஒரு கை போடுங்க.

ஆட்டம் ஐஞ்சு ரூவா ?

ம்ம்ம்.. சரி.. ஆனா ரெண்டு மணி நேரம் தான்.. அப்புறம் எங்கப்பா வந்துடுவாரு.. வந்து உங்க half-yearly மார்க்ஸ் கேட்க ஆரம்பிச்சிடுவாரு. ஸோ.. அதுக்குள்ள ஜீட் வுட்டுருங்க…

கூல் மச்சி…

சரி எந்த கேம் ?

ரம்மி

***

கார்த்திக், பாஸ் த பால் டு மீ!

கம் திஸ் ஸைட்!

தட் ஸ் இட்! கூல் பேபி!

வாவ்! க்ரேட்!

கோல்!

வி ஹேவ் வொன் த கேம்!

கலக்கிட்ட மச்சி!

மச்சான் இன்னைக்கு இதை கிராண்டா செலிபிரேட் பண்ணனும்.

எப்படி ?

தண்ணி பார்ட்டி.

கமான் ? லெட்ஸ் கால் எவ்ரி ஒன்!

டே! அந்த சோதா காலேஜ் தடியங்க நாலு பேர் வர்ராங்க ?

வரட்டும்…. அவங்க 4 பேரு. நம்ம 12 பேர்.. நம்ம மூத்திரம் பேஞ்சா அவங்க மூழ்கிப் போயிடுவானுங்க.

ஹ..ஹ..ஹா…

டே சோதாஸ், அடுத்த தடவையாவது ஜெயிக்க ட்ரை பண்ணுங்க ?

எங்க காலேஜ் வாங்க ஜெயிச்சுக் காட்டுவோம்.

ஏன்! எங்களோட விளையாட பொண்ணுங்களை அனுப்புவீங்களா ?

ஹி.. ஹி..ஹி..

போடாங்க…

***

சியர்ஸ்!

அது சரி! இந்த சியர்ஸ் எதுக்கு ?

நம்ம காலேஜ் டாம் புட்பால்-ல வின் பண்ணதுக்கு ?

டே! நம்ம கோச் இதைக் கேட்டனா ரொம்ப சந்தோஷப் படுவாண்டா ?

ம்ம்.

டே! இந்த நேரத்துல கோச், ப்ரபொஸர்ன்னு எவண்டா அது – எதாவது பிகர் பத்தி பேசுங்கடா.

எப்பவுமே பொண்ணுங்க தானா ?

அப்புறம் வேற என்ன ?

எமினெம் என்ன சொல்றான் தெரியுமா – don ‘t just give a ….

நிறுத்துடா உன் எமினெம் புராணத்தை – அவன் பாடுறானா பேசுறானான்னு…

தட் ஈஸ் ராப் மச்சி – காதலன் படத்துல வருமே பேட்டை ராப்.. அது மாதிரி

கமான்! சியர்ஸ் பார் த செகண்ட் ரவுண்ட்.

மச்சான் கார்த்திக்! நீ எங்க இருக்க ? ஓ.. இங்க இருக்கியா – என்ன சரக்குடா jack danielங்றது – old monk ரம் தான் சரி! எனக்கு இதோட போதும். நீங்க கிளப்புங்க!

டே! அந்த சிகார் இங்க பாஸ் பண்ணு!

ரெண்டே ரெண்டு இழு அவ்ளோ தான்! இரு தர்றேன்.

எந்த சிகார் ?

க்யூபன் சிகார் மச்சி! க்யூபன் அழகிங்க தொடை-ல உருட்டித் தயாரிச்ச் சிகார்!

அதான் இவ்ளோ புகை வருது. ஸ்மகல்ட் குட்ஸ்(smuggled goods) – 60 ரூபா

அங்க பார்! கார்த்திக் அதைக் கடிக்கிறான்.

அடங்குங்கடா!

சியர்ஸ்!

****

ரம்யா! ஐ லவ் யூ!

கார்த்திக்! இட் லுக்ஸ் சில்லி.

கமான்! ஐ அம் சீயிங் சம்திங் இன் யூ! மோர் தேன் அ ப்ரண்ட்!

கார்த்திக் !!! என்ன ஆச்சு திடார்ன்னு. ரொம்ப குடிச்சிருக்கயா ?

இல்லை ரம்யா! ஐ ட்ரூலி ..

ஷட் அப்! ஜஸ்ட் டான்ஸ்!

ரம்யா இனிமே இந்த டிஸ்க் வர வேணாம். என்ன மியூசிக் போடுறானுங்க.. ஒரே மியூசிக் திரும்ப திரும்ப. தேஞ்ச ரிக்கார்ட் மாதிரி!

ஓ.கே

ரம்ஸ்… உனக்கு இந்த D L J (Dangerously Low Jeans) ரொம்ப நல்லா இருக்கு.. ஆனா பத்திரமா பிடிச்சிக்கிட்டே நட… எனக்கு பயமாயிருக்கு!

சில்லி…

இதுல நீ பிரிட்னி மாதிரியிருக்கே… படு செக்ஸி..

சரி! வீட்டுக்குப் போலாமா ?

யார் வீட்டுக்கு!

உன் வீட்டுக்கு தான்.

ஓ.கே கமான்! லெட்ஸ் மேக் எ மூவ்!

***

ரம்யா! நான் குடிச்சிட்டு உளருறேன்னு நினைக்காதா! ஐ லவ் யூ!

தேங்க்ஸ்! நானும் உன்னை ரொம்ப லவ் பண்றேன். நம்ம லவ், லஸ்ட் எல்லாம் நாளைக்குக் காலைல பார்த்துக்கலாம். இப்ப தூங்கு.

நான் குடிச்சிட்டு உளர்ரேன்னு நினைக்கிற இல்ல நீ!

ஆமா

சரி எதாவது கேளேன். என்ன வேணா கேளு 25 ஸ்கொயர் 625 – நெல்லோட தாவரவியல் பெயர் ஒரைசா சடைவா – எதில் ஆல்கஹால் – எத்தனால் – வானாகி வளியாகி.. ஊனாகி…

ஷட் அப் கார்த்திக்!

ஐ லவ் யூ சொல்லு ?

ஐ லவ் யூ ! ஐ லவ் யூ! ஐ லவ் யூ! போதுமா ? ஐ லவ் யூ பவர் இன்பினிட்டி..

தேங்க்ஸ். ஒரு கிஸ் ?

எங்க ? உதட்டுல வேணுமா ?

கன்னத்துல போதும்.

ப்ச்ச்.

ஓ.கே கார்த்திக்! நான் கிளம்புறேன். உன் ரூம் மேட் தடியன் எங்க போயிட்டான் ? சி யூ டுமாரோ! அது வரை உயிரோட இரு.

ரம்யா! நீ என்னை விட்டுப் போகாத ? கவிதா மாதிரி நீயும் என்னை டிச்(ditch) பண்ணிடாத.

வாட் ?

ஒண்ணுமில்லை.

யார் அந்தக் கவிதா ?

****

vijaygct@yahoo.com

Series Navigation

கே ஆர் விஜய்

கே ஆர் விஜய்