ரசனை

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்



அந்த எழுபது வயது
வாத நோயாளி
சக்கர நாற்காலியில்

புகைப்படம் ஒன்று
உள்ளங்கையில்
ரசிக்கிறார் விழிகளால்

இருபது வயதில் அவர்
ஒலிம்பிக் வென்ற
அந்த புகைப்படமும்
அவரைப் பார்த்து
ரசித்தது

Series Navigation

ரசனை

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

றஞ்சினி



மரங்களுடன் காற்று
சங்கீதம் இசைக்க
கருமுகிலும் வானமும்
கலந்து கரைய
வெள்ளித்துகள்களாய்
வந்து விழுகிறது
என்னுடன் மழைக்கு
என்ன ஒரு மோகமோ
ஜன்னலில் தட்டி
எழுப்புகிறது கவிதையுடன்
வண்ணங்களைகாட்டி
மயக்கியமாலையை
இப்போதைக்கு மறந்துவிடுகிறேன்
அவசர வாழ்வில் அலைகிற
எனக்குள்ளும் ரசிப்பதற்காக
சிலநிமிடங்களேனும் ..
மனிதம் என்னுள் மறைந்திட
இல்லை என்பதில் மகிழ்ச்சிதான்.


shanranjini@yahoo.com

Series Navigation