மொழிபெயர்ப்பு கவிதை : D 54 அறை

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

தமிழ் மொழியில் : பா.அ.சிவம்


உறைந்து போன
இயற்கையின் முகத்தை
D 54 அறையிலிருந்து
காண்கிறேன் …

கனக்கொடுமை சுமைகளை
ஏந்திக் கொண்டு
மருந்திடா அன்பை
அவமானத்துடன்
இழுத்துக் கொண்டு வருகிறது
மேகக் கூட்டம் …

முகத்தைத் திருப்பிக் கொண்ட
நிலவும் தெரிகிறது
அதன் வண்ணம்
அடிப்பட்ட அன்பை
சோகத்தை
நிரப்புகிறது என்னுள் …

நகரின் விளக்குகள்
ஒளியிழந்து மங்குகின்றன
நேர்மையற்ற காதலைத் தவிர
வேறெதனை
D 54 அறை
காண்பித்திருக்கின்றது ?

நாளை எதுவும்
நிச்சயம் இல்லை
என்பதைத்தான் …

பறந்து செல்லும்
கரிய நிறப் பறவையும்
சொல்லி விட்டு
மறைகிறது …


sivam_balan@yahoo.com

Series Navigation