மெட்டாபிலிம் (Metafilm)

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


மெட்டாபிலிம் அல்லது மெட்டாமுவீ அல்லது மெட்டாசினிமா என்பது தற்சுட்டு (self-referential) திரைப்படம் ஆகும்.மெட்டாபிக்ஸன் என்பது வாசகர்கள் நூலை வாசிக்கிறார்கள் என்ற உணர்வை மறக்கடிக்கச் செய்யாமல் இருப்பதை போல மெட்டாபிலிம் பார்வையாளனை தாங்கள் படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை மூழ்கடித்து விடாமல் தாங்கள் தியேட்டரில் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதை மறக்கடித்துவிடாமல் செய்கிறது.சினிமாவில் சினிமாவை பற்றிச்சொல்லும் முறைகூட இந்த வகைப்பட்டதாகும்.தமிழைப் பொறுத்தவரை சினிமாவும்,சினிமா கதாப்பாத்திரங்களும் சினிமாவில் பங்கெடுத்துக்கொண்ட பல படங்கள் உள்ளன.உதாரணமாக அன்புள்ள ரஜினிகாந்த் படம் மெட்டாபிலிம் வகைப்பட்டதாகும். மெட்டாபிக்ஸன் என்பது தற்கால புனைகதை பாணியாக இருக்கிறது. புனைகதையில் உத்திதிட்டத்தை சொல்லுவது மெட்டாபிக்ஸன் ஆகும்.
தற்சுட்டு /சுய குறிப்புரை (self-reference) மெட்டாபிலிம்,மெட்டாபிக்ஸனில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.தற்சுட்டு என்பது ஒரு அறிவிப்பை அதுதானே சொல்லுவது என்பதாகும்.குறிப்புரை (reference) என்பது இரண்டு தர்க்க அளவுகளை கொண்டது. ஒன்று ஒரு தளம் மற்றது பெருந்தளம் என்பனவாகும்.அது பொதுவாக கணிதம்,தத்துவம்,கணிணி நிரல்,மொழியியல் என்ற பயன்பாடுடையதாகும்.தற்சுட்டு அறிவிப்பு என்பது முரண்பாடு போல தோன்றும் மெய்யுரையாகும்.ஆனால் எதிர்பதம் வரையறைகளுக்கு உட்பட்டு முக்கியத்துவம் கருதி பயன்படுத்தப்படும்.உதாரணமாக ரமேஷ்-பிரேமின் முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன எனும் கதையில் வரும் வரிகளை பார்ப்போம்.
”எந்த ஒன்றாலும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாத அந்த வாடை முதன் முதலில் தனது அறையின் நிலைக் கண்ணாடியிலிருந்தே வெளிப்பட்டு தன்னையும் தனது கிராமத்தையும் சுற்றி வளைத்ததின் நினைவுகளில் புதைந்து போனான்.”
அது போல எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை நூலில் வரும் ‘கனவுகளை வரைந்து பார்த்த கனவியல்வாதி’ எனும் இக்கதையில் தலைப்பே தற்சுட்டு தன்மையை கொண்டதாகும்.
“கனவுகளைக் கொண்டு தைத்த ஆடைகள் அந்தத் தையலகத்தில் நிறைய தொங்கிக் கொண்டிருந்தன.”
மெட்டாபிக்ஸன் கதை தன்மை கூட தமிழ் கதை மரபில் காணக்கிடக்கிறது.கதைக்குக் காலுண்டா கையுண்டா என்பது தற்சுட்டு வாக்கிய அமைப்பாகும்.கதையை பார்ப்போம்.
“ஒருத்தனுடைய வீட்டுக்காரிக்கி ஒரு கதை தெரியும்.அவளுக்கு ஒரு பாட்டும் தெரியும்; ஆனா அவ யாருக்கிட்டயும் சொல்லவுமில்லே, பாடவுமில்லே”.
அவளுக்குள்ளேயே செறப்பட்டுக் கிடந்த அந்தக் கதையும் பாட்டும் விடுதலை அடைய விரும்பின.; அவளெ விட்டு ஓடணன்னு நெனெசுச்சுக. ஒரு நா(ள்) கதெ எப்படியோ அவளைவிட்டு வெளியேறி தப்பிச்சி ரெண்டு செருப்புகளா வடிவெடுத்து வீட்டுக்கு வெளியே உக்கார்ந்துக்கிடிச்சு.பாட்டு ஒரு கோட்டாக மாறி வீட்டுக்குள்ளே ஒரு ஆணியிலே தொங்குச்சு.
வீட்டுக்கு வந்த புருஷன் கோட்டையும் செருப்பையும் பார்த்துக்கிட்டு யாரு வந்ததுன்னு கேட்டான்?.
யாரும் வரல்லேயே ன்னா அவ.அவனுக்குத் திருப்தியில்லே. அவனுக்கு சந்தேகம் வந்திருச்சு. அவங்க ரெண்டு பேரும் சண்டைப்போட்டுக் கிட்டு அவன் அனுமாரு கோவிலுல ஒரு போர்வய எடுத்துக்கிட்டு போய் படுத்துக்கிட்டான்.
பொண்டாட்டிக்கி என்ன நடக்குதுண்ணு ஒண்ணுமே புரியல. அண்ணக்கி ராத்திரி அவ தனியா படுத்துக்கிட்டு யோசிச்சா. நெடு நேரம் தூங்கலே. யாரு கோட்டு யாரு செருப்புண்ணு திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டா.பதிலில்லே.வெளக்க அணச்சிக்கிட்டு தூங்கப் போனா.
அணச்ச பெறகு வெளக்குக (சுடர்கள்) எல்லாம் அனுமாரு கோவிலுக்கு வந்து சேருறது வழக்கம். ஒரேயொரு வீட்டு வெளக்கத் தவிர மத்ததெல்லாம் வந்து சேந்துருச்சு. அது மட்டும் பிந்தி வந்துச்சு. மத்தெல்லாம்,
இண்ணைக்கு மட்டும் நீயேன் ரொம்ப பிந்தி வர்றேண்ணு? கேட்டுச்சுக.
எங்க ஊட்டுல புருஷன் பொண்டாட்டி சண்ட போட்டுக்கிட்டாங்கன்னு சுடர் சொல்லிச்சு.
ஏன் சண்ட போட்டாங்க?
நடந்த எல்லா வெவெரங்களயும் அது சொல்லிச்சு. கதையும் பாட்டும் தான் கோட்டாட்டும் செருப்பாட்டும் மாறுனத சொல்லிச்சு.
போத்திக்கிட்டு படுத்துருந்த புருஷன்காரன் அத கேட்டுகிட்டிருந்தான்.அவன் சந்தேகம் தீந்திருச்சு. விடிஞ்ச பொறவு வீட்டுக்கு போனான். எல்லாவிஷயத்தையும் பொண்டாட்டிக்கிட்ட சொன்னான். அந்த கதயும் பாட்டும் அவளுக்கு மறந்து போச்சுங்கிறதே அவ அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டா.

தற்ச்சுட்டு சூழல் என்பது இலக்கியத்தில் ஆசிரியன் தனது நூலை தாமே சூழக்கு தக்கன பயன்படுத்தலாகும்.உதாரணமாக ஆறு கதாப்பாத்திரங்கள் ஆசிரியனை தேடியலைவது போன்ற டென்னிஸ் டிடேரட்டின் கதையை சொல்லாம்.இது நான்காவது சுவர் கருத்தாக்கதை ஒட்டியது ஆகும்.
உதாரணங்கள்:
1.ஒரு வார்த்தை தன்னைதானே விவரிப்பது
2.பழமொழி கசக்கும்.பின்னால இனிக்கும்.இது பழமொழி பற்றிய கருவி மொழியாகும்.
3.ஒரு கட்டுரை அதற்க்காக பல தொடர்புகளை கொண்டிருந்தால் அவை சுய தொடர்பு என்றழைக்கப்படுகிறது.
4.சட்டகம் என்கிற அமைப்பு வழியாக தற்சுட்டு சாத்தியப்படுகிறது.
மெட்டா சுட்டு (Meta-reference)
அ-சுட்டு என்பது ஒரு சூழல் ஊடகத்தின் வடிவாக இருக்கும் போது புனைவு பாத்திரங்கள் விழிப்புணர்வுடன் தம்மை வெளிப்படுத்தும் நிலையை குறிக்கிறது. சினிமாவில் சினிமா எடுக்கப்பட்ட விதம் பற்றிச் சொல்லுவது மெட்டா ரெபரன்ஸ் ஆகும்.சிம்சன் என்பவரது மெட்டா ரெபரண்ஸ் பற்றிய மேற்கோள் புகழ்மிக்கதாகும்.அதாவது கார்டூன் படத்தில் வரும் ஒரு பாத்திரம் குறுக்கு சந்தில் ஓடும் போது ஒரு கைவந்து உடனடியாக அந்த பாத்திரத்தின் உடலை சிறிதாக்குகிறது.அதன் பின்னர் அது ஓடுகிறது. ஒரு பாத்திரத்தை எந்த சூழலிலும் நான் மாற்றிக்காட்டுவேன் என்ற ஒரு கார்டூன் சித்திரக்காரனின் கதை இது. என்பதே அந்த மேற்கோள்.
உதாரணங்கள்:
1.சௌத் பார்க் என்ற அமெரிக்க டி.வி.நிகழ்ச்சியொன்றில் ரேட்டிங் தரவரிசை செய்து கொண்டிருந்த ஒருவர் நடித்த அடுத்த புரோகிராமில் சௌத் பார்க் நிகழ்ச்சியை பற்றிச்சொல்லி தரவரிசையில் முக்கியமான ஒரு செய்தியை மறந்துவிட்டதாக சொல்வது அ சுட்டு வகையாகும்.
2.பிரபல காமிக்ஸ் இதழில் வெளிவந்த பியானோ என்ற தொடரை பற்றி அந்த தொடரில் வந்த கதாபாத்திரங்கள் விமர்சனம் செய்து பியானோ இதழ் படித்துக்கொண்டிருப்பது அ சுட்டு வகையாகும்.
3.இடலோ கால்வினோவின் குளிர்கால இரவில் ஒரு பயணி என்ற நாவலில் அந்த பயணி வந்த டிரைனில் இருந்து வந்த புகை முதல் அத்தியாயம் முதல் வரியில் வந்து உங்களை திக்குமுக்காடச் செய்தது என்று சொல்லும் முறை அ சுட்டு வகையாகும்.
4.தமிழ் சினிமா ஒன்றில் டைரக்டராக வரும் கதாபாத்திரம் அந்த படத்தின் கதாபாத்திரத்தோடு பேசும் போது நீங்கள் எடுத்த சில படங்கள் படங்களின் பெயரைகூறி பேசுவது அ சுட்டு வகையாகும்.
தமிழ் சினிமாவில் சினிமாவை பற்றிய சினிமா காட்சிகள் நிறைய இருக்கிறது.ஆனால் இந்த நிலையும் தாண்டி ஒரு கதையை இன்னொரு கதையால் சொல்லுவதும் மெட்டாபிலிம் வகையாகும்.தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் நடித்த தளபதி படம் மெட்டாபிலிம் ஆகும்.அந்த படத்தின் கதை மகாபாரதத்தை மறு உருவாக்கம் செய்ததாகும்.ரஜினியின் பாத்திரம் கர்ணனின் பாத்திரத்தை நினைவூட்டுகிறது.அண்மையில் வெளிவந்த ரஜினியின் சந்திரமுகி படம் பின் நவீன வகையிலுள்ளதாகும்.ஊடிழை பிரதியாக்கம் அப்படத்தில் சந்திரமுகி என்ற வரலாற்று கதையை நிகழ்த்தியிருக்கிறது. பழமையின் பூரிப்பு என்பதும் புராதன மாந்திரீகத்தின் உளவியல் நிலைகளை துல்லியபடுத்தியிருக்கிறது.மெட்டாபிலிமில் கதைபற்றிய கதை,கதைக்குள் கதை,சினிமா பற்றிய சினிமா,சினிமாவுக்குள் சினிமா என்ற பல்வேறு நிலைபாடுகள் காணப்படுகிறது.
மெட்டாபிலிம் பற்றிய நூல்கள்
1.Six Characters in Search of an Author—-Luigi Pirandello
2. The Lickerish Quartet — Radley Metzger
3. Teorema — Pier paolo pasolini
4. Sitcom — Francois Ozon

Reflexivity in film and literature: From Don Quixote to Jean-Luc Godard (1985) – Robert Stam

சில மெட்டாபிலிம்கள்
1.La Nuit amளூricaine/Day for Night (1973) – Franவூois Truffaut

2.Sex is Comedy (2002) – Catherine Breillat

3.C’est Arrivளூ Pres de Chez Vous/Man Bites Dog (1992) – Rளூmy Belvaux Andrளூ Bonzel, …

4.Medium Cool (1969) – Haskell Wexler

5.Cinema Paradiso (1989) – Giuseppe Tornatore

6.Film-within-a-film

7.A Postmodern Cinema (2002) – Mary Alemany-Galway

8.Close Up 1927-1933: Cinema and Modernism (1998) – James Donald, Anne Friedberg, Laura Marcus
மெட்டாபிலிமுக்கும்,பின் நவீன சினிமாவுக்கும் அதிகம் வித்தியாசம் ஒன்றும் இல்லை. தற்சமயம் வெளிவரும் தமிழ் படங்களில் மெட்டாபிலிமுக்கான தன்மைகள் இல்லை என்று சொல்லமுடியும்.ஆனால் தமிழில் இப்போது மொழிமாற்றம் செய்யப்பட்ட அநேக ஆங்கில படங்களை நாம் பின் நவீனத்துக்குரியதாகவும், மெட்டாபிலிமாகவும் இருப்பதை காணமுடியும்.
———————————
எச்.முஜீப் ரஹ்மான்.

Series Navigation