மெட்டாபிக்சனின் ஆழ அகலங்கள்

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


தமிழ் புனைக்கதைப் பரப்புக்குள் ஒற்றை நிலைமாதிரியாக வரலாற்றுக்கதை,

விஞ்ஞானக்கதை,சமூகக்கதை,துப்பறியும்கதை,மர்மகதை,திகில்கதை,இலக்கியதரமிக்க கதைகள் போன்ற பலவும் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் புனைக்கதையின் சாத்தியப்பாடுகள் பலவும் முயன்று பார்க்கப்படுகிறது.தமிழ் இலக்கியத்தில் வெகுஜனப் பரப்பை தாண்டியே பல சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

சிறுப்பத்திரிக்கைகளில் பரிச்சயமுடையவர்கள் பல இலக்கியகோட்பாடுகளையும் இலக்கிய இயக்க போக்குகளையும் பிரதானப்படுத்தி இயங்கி வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயமே.அமைப்பியல் முக்கிய கோட்பாடாக இருந்த காலத்திலேயே புனைக்கதையின் தன்மைகள் மாறத்துவங்கியது.பின்நவீனத்துவம் செல்வாக்கு செலுத்தும் கடந்த பதிற்றாண்டுகளாக அவ்வப்போது மெட்டாபிக்சன் என்று பேசி வருவதும் தெரிந்த விசயமே.தமிழவன்,அ.மார்க்ஸ்,சாரு நிவேதிதா,ரமேஷ்,பிரேம் போன்ற தீவிர இலக்கியவாதிகளெல்லாம் பலதளங்களில் இது குறித்து விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையாகும்.பலர் முயன்று பார்த்துக்கொண்டிருக்கும் மெட்டாபிக்சனை வைத்து பார்க்கும் போது மீண்டும் அதுபற்றி பேசவேண்டியிருப்பதாகவே தோன்றுகிறது.

மெட்டாபிக்சனை தமிழில் அப்பாலைபுனைக்கதை என்றழைப்பது பொருத்தமாக இருக்கிறது.இதனை புனைவு மறுக்கும் புனைவு என்றும் புரிந்து கொள்ளலாம்.புனைவு மறுப்பு என்பது புனைவின் குணாம்சம் ஒற்றை நிலையிலானது என்பதை குறிக்கிறது.அதாவது கதைஎன்பதுஎதார்த்தவாதமாகவோ,வரலாற்றுகதையாகவோ,

அறிவியல் கதையாகவோ,மாயமந்திரகதையாகவோ தான் இருக்கும் என்ற ஒற்றை நிலைப்பாட்டை மறுத்து வெளிவரும் கதையை அப்பாலைகதை என்று விளங்கிக்

கொள்ளலாம்.அதன் இரண்டாவது குணம் என்பது கதைகளை தனித்தனியே பிரித்து பார்கும் பார்வையை கேலி செய்கிறது.அறிவியல் கதை அறிவியலை மட்டும் தான் பேசவேண்டும் என்பதும், சரித்திர கதை சரித்திரசம்பவங்களின் பின்னணியில் தான் இருக்கவேண்டும் என்ற நிலை அப்பாலைகதையில் இருப்பதில்லை.

கதைகளை பிரிவினைகளாக மாத்திரம் பார்த்து இவற்றுக்கிடையில்எவ்வித சம்பந்தமோ,சார்போ இருப்பதில்லை என்றும் கதைகள் தனித்தனியானவை,சாஸ்வதமானவை அவற்றை கடக்க முடியாது என்ற நிலையை மாற்றி எழுதும் கதை அப்பாலைகதையாகும்.அதுபோல கதைகள் ஒன்றோடொன்று வேறுபாடனவை மாத்திரமல்ல ஒன்றுக்கொன்று எதிரானவை என்ற நிலைபாட்டை அப்பாலைகதை மாற்றிவிடுகிறது. அறிவியல்கதைக்கு சரித்திர கதை முரண்பட்டது,துப்பறியும் கதைக்கு மாயமந்திர கதை முரண்பட்டது என்ற நிலை அப்பாலைகதையில் கிடையாது.அதுபோல ஒற்றைநிலை கதை அல்லது நிகழ்வு பன்முகநிலைப்பாட்டுடன் ஒரே நிகழ்வு பல விஷயங்களை சொல்லுவதாக நிகழ்வு வேறு,விஷயம் வேறு என்ற வேறுபாடுகளை கடந்து புனைவுக்கும் உண்மைக்குமான வேறுபாட்டை கடக்க எத்தனிக்கிறது.உம்பர்டோ ஈகோவின் நேம் ஆப் த ரோஸ் நாவலை அப்பாலைகதையாக கணக்கிடலாம்.இந்த நாவலில்சரித்திர பிண்ணணியில் துப்பறியும் கதையும் அத்துடன் திகில்கதையும் கலந்த கலவையாக வாசகர்களை கவருவதாக அமைத்திருப்பார்.

மேற்குலகில் மார்க்கூரி,ஆன் ஜெபர்சன்,லிண்ட ஹட்சன்,பேற்றீசியா வாக்,மேக்காப்ரி,எலிசபெத் டிப்பிள்,வின்சி ஓமுண்டன்சன்,ராபர்ட் ஸ்கால்ஸ்,ஜான் பார்த் போன்ற முன்னணி இலக்கியவாதிகள் எண்பதுகளின் துவக்கத்திலிருந்தே பேசியும்,எழுதியும் வருகிறார்கள்.பல்வேறு நூல்கள் இது பற்றி மிகவிரிவாக பேசுகிறது.பின்நவீன பிக்சனாக முக்கிய இடம் பெறுகின்ற மெட்டாபிக்சனை பற்றி எளிமையாக புரிந்து கொள்வோம். 1970ஆம் ஆண்டு நவலாசிரியர் வில்லியம் ஹாஸ் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையில் மெட்டாபிக்சன் என்பது சுயபிரதிபலிப்புமிக்க புனைவெழுத்தாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாவலின் மரணம் என்று பேசப்பட்ட உயர்நவீனத்துவ இலக்கிய போக்கில் மெட்டபிசனின் வருகையை பிரதானபடுத்தியே இப்படி சொல்லப்பட்டது.சிறப்புமிக்க விளக்கங்களை விளக்குவதுதான் நாவலின் தன்மையாகும் என்று மெட்டாபிசனை பற்றி வாஹ் குறிப்பிட்டுள்ளார். தற்கால மெட்டாபிசனின் கூறுகள் உண்மைக்கும்,வரலாறுக்குமான பிரதேசத்தில் புனைவுகளாக கட்டமைக்கப்படுகின்றன.நவீனத்துவத்தின் பிரக்ஞையையும்,உண்மையையும் அது கேள்விக்குள்ளாக்கிறது.சுயபிரக்ஞையுடைய,சுயாதீனமான,சுயபிரதிபலிப்பு பார்வையுடைய புனைவெழுத்தை மெட்டாபிசன் என்றழைக்கலாம்.இருபதாம் நூற்றாண்டில் நிறைய வளர்ந்துவிட்ட மெட்டாபிசனின் கூறுகள் பதினைந்தாம் நூற்றாண்டை சார்ந்த மைகேல் சர்வெடேயின் டான் குயிசாட்டிலும் ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்டிலும்,ஜேன் ஆஸ்டினின் நார்த்தங்கர் அபேயிலும் இருப்பதாக கருதப்படுகிறது.லிண்டா ஹட்சனின் கூற்றில் மெட்டாபிசன் என்பது மொழியியல் கூறுகள்,புனைவெழுத்தின் தன்மைகள் மறைமுகமாகவோ அல்லது மீறுவதாக அமைந்து சுயபிரதிபலிப்புமிக்க எழுத்துருமாற்றமாக அதன் சவால்மிக்க விவரணைகள் இன்பம் தருவதாக அமையும் பட்சத்தில் வாசக அனுபவத்தை ஒத்திசைவு கொண்டிருக்கிறது.நவீன எழுத்தாக கருதப்படும் இப்பதம் மயக்கம் தரவல்லதாக சுயபிரதிபலிப்புமிக்கதாக கருதப்பட்டது.வாஹ்கின் மெட்டாபிசன் புனைக்கதை கோட்பாடும் செயலாக்கமும்(1984) என்ற நூல் பற்றிய மதிப்புரையில் ஆன் ஜெபர்சன் கூறும்போது தற்கால சமூக பண்பாட்டு நோக்கில் புனைக்கதையின் இயல்புகளை மெட்டாபிசனாக மாற்றும் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வாஹ் அவிபிராயபடுவது கவனபடுத்தவேண்டிய முக்கிய விஷயமாகும்.ஜான் பார்த் கூறும்போது நாவல் என்பது நாவலை செய்யவேண்டுமே ஒழிய எதார்த்த உலகை அல்ல என்கிறார்.

நவீன காலத்தில் மெட்டாபிக்சன் சுயபிரதிபலிப்பு மிக்கதாக இருண்மையை தீவிரமாக செயல்பட்டதுடன் விவரணையில் தற்கால சமூக,கலாச்சார பார்வைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது என்று ஆன் ஜெபர்சன் கூறுகிறார்.பத்ரீசியா வாஹின் கருத்து வேறுமாதிரி இருக்கிறது.அதாவது கதைஎழுத்து என்பது சுய பிரக்ஞையுடன் தொடர்வரிசையாக புனைவுக்கும் உண்மைக்குமான உறவை கேள்வி கேட்பது மெட்டாபிக்சனாகும்.மெட்டாபிசனை விளக்கும் போது வின்சே இப்படி கூறுகிறார்

Metafiction is, literally, fiction about fiction. It is generally used to indicate fiction including any self-referential element. Metafiction typically involves games in which levels of narrative reality (and the reader ‘s perception of them) are confused, or in which traditional realist conventions governing the separation of ‘mimetic ‘ and ‘diegetic ‘ elements are flouted and thwarted.

தமிழில் அறிமுகமாகியுள்ள மெட்டாபிக்சனை மேற்கில் செய்தவர்களையும்,அவர்கள்தம் நூல்களின் பட்டியலை விரிவாக பார்ப்போம்.

ஃ Douglas Adams , The Hitchhiker ‘s Guide to the Galaxy

ஃ Richard Adams , The Plague Dogs

ஃ Rabih Alameddine , I, the Divine

ஃ Felipe Alfau , Locos: A Comedy of Gestures

ஃ Martin Amis , Money , Time ‘s Arrow, The Information

ஃ Isaac Asimov , Murder at the ABA

ஃ Paul Auster , City of Glass

ஃ Nicholson Baker , The Mezzanine

ஃ John Barnes , One for the Morning Glory

ஃ John Barnes , Gaudeamus

ஃ Julian Barnes , Flaubert ‘s Parrot

ஃ John Barth , Lost in the Funhouse

ஃ Samuel Beckett , Watt

ஃ Thomas Bernhard , Wittgensteins Neffe

ஃ Jorge Luis Borges , ‘The Garden of Forking Paths ‘, ‘Tlய்n, Uqbar, Orbis Tertius

ஃ Berke Breathed , Bloom County

ஃ Michel Butor , La Modification

ஃ Richard Brautigan , Sombrero Fallout

ஃ Guillermo Cabrera Infante , Tres tristes tigres

ஃ Italo Calvino , If On a Winter ‘s Night a Traveler

ஃ Peter Carey , Illywhacker

ஃ Miguel de Cervantes , Don Quixote

ஃ Joseph Conrad , Heart of Darkness

ஃ Douglas Cooper , Amnesia, Delirium

ஃ Some of Wyllis Cooper ‘s Quiet, Please scripts

ஃ Julio Cortazar , Hopscotch

ஃ John Crowley , Little, Big

ஃ Mark Z. Danielewski , House of Leaves

ஃ Peter David , Young Justice , Sir Apropos of Nothing

ஃ Samuel R. Delany , The Einstein Intersection, the Nevளூryon series

ஃ Philip K. Dick , VALIS

ஃ Dave Eggers , A Heartbreaking Work of Staggering Genius

ஃ Bret Easton Ellis , Lunar Park

ஃ Michael Ende , The Neverending Story

ஃ Steve Erickson , ‘Arc d ‘X ‘, ‘The Sea Came in at Midnight

ஃ Raymond Federman , Twofold Vibration, Smiles on Washington Square, Take It Or Leave It

ஃ Jasper Fforde , The Eyre Affair , Lost in a Good Book , The Well of Lost Plots , Something Rotten

ஃ Henry Fielding , The History of the Adventures of Joseph Andrews, and of his Friend Mr Abraham Adams

ஃ Jonathan Safran Foer , Everything is Illuminated

ஃ Jostein Gaarder , Sophie ‘s World

ஃ Alex Garland , The Beach

ஃ William H. Gass , The Tunnel

ஃ Andre Gide , The Counterfeiters

ஃ William Goldman , The Princess Bride

ஃ Alasdair Gray , Lanark

ஃ Daniel Handler , A Series of Unfortunate Events

ஃ Larry Heinemann , Paco ‘s Story

ஃ Robert A Heinlein , The Number of the Beast and Glory Road , at least.

ஃ Douglas Hofstadter , dialogues in Gய்del, Escher, Bach

ஃ Nick Hornby , Fever Pitch

ஃ William Hurlbut and James Whale screenplay for The Bride of Frankenstien

ஃ John Irving , The World According to Garp

ஃ Charlie Kaufman , screenplay for Adaptation

ஃ Stephen King , The Dark Tower

ஃ Milan Kundera , ‘The Book of Laughter and Forgetting

ஃ The Chuck Jones -directed Daffy Duck short, ‘Duck Amuck ‘.

ஃ Doris Lessing , The Golden Notebook

ஃ Penelope Lively , Moon Tiger

ஃ David Lodge (author) , Therapy

ஃ Baz Luhrmann and Craig Pearce , screenplay for Moulin Rouge!

ஃ Barry N. Malzberg , Herovit ‘s World

ஃ Yann Martell , Life of Pi

ஃ Grant Morrison , Animal Man

ஃ Vladimir Nabokov , Pale Fire , The Gift , Speak, Memory

ஃ George Nolfi , screenplay for Ocean ‘s Twelve

ஃ Flann O ‘Brien , At Swim-Two-Birds

ஃ Tim O ‘Brien , ‘The Things They Carried

ஃ Michael Ondaatje , Running in the Family

ஃ Milorad Pavic ‘s novels.

ஃ Penny Arcade frequently features metafiction, particularly their fantasy setting Epic Legends of the Hierarchs: The Elemenstor Saga,

ஃ Daniel Pellizzari , Dedo Negro Com Unha

ஃ Terry Pratchett , several of the Discworld books

ஃ Robert Pulcini and Shari Springer Berman , screenplay for American Splendor

ஃ Alain Robbe-Grillet , La Jalousie, La maison de rendez-vous

ஃ Josளூ Carlos Samoza , The Athenian Murders

ஃ Josளூ Saramago , Ensaio sobre a Cegueira, A Caverna, O Homem Duplicado

ஃ Robert Sheckley , Options

ஃ Mary Shelley , Frankenstein

ஃ Gilbert Sorrentino , Mulligan Stew

ஃ Laurence Sterne , Tristram Shandy

ஃ Tom Stoppard , Rosencrantz & Guildenstern Are Dead

ஃ Aritha van Herk , Restlessness

ஃ Kurt Vonnegut , Breakfast of Champions , Slaughterhouse-Five , Bluebeard

ஃ David Foster Wallace , Brief Interviews with Hideous Men

ஃ Robert Anton Wilson and Robert Shea , The Illuminatus! Trilogy

ஃ Jeanette Winterson , Sexing the Cherry

ஃ Gene Wolfe , The Fifth Head of Cerberus

ஃ Virginia Woolf , Orlando: A Biography

மார்க் கூரி சொல்லும்போது எல்லையோர சொல்லாடல்களை கொண்டு புனைவுக்கும் விமர்சனத்துக்குமான உறவாக தன்னிலையின் மேல் கட்டுவது மெட்டாபிசனில் உள்ளதாகும் என்பார். Metafiction: The Theory and Practice of Self-Conscious Fiction, Patricia Waugh defines “metafiction” this way:

a term given to fictional writing which self-consciously and systematically draws attention to its status as an artefact [sic] in order to pose questions about the relationship between fiction and reality. In providing a critique of their own methods of construction, such writings not only examine the fundamental structures of narrative fiction, they also explore the possible fictionality of the world outside the literary fictional text.

விமர்சகர்கள் மெட்டாபிசனின் தன்மைகளை பலவிதங்களில் சொல்லிபார்கிறனர்.

வாஹின் கருத்துப்படி தற்காலமெட்டாபிசன் மூன்றுவிதமாக இருக்கிறது.ஜான் பவுளின் த பிரஞ்ச் லெப்டினண்ட்ஸ் வுமன்(1969) எனும் நாவல் கதைச்சொல்லியின் பங்குடன் நகரும் விதம் முதல் வகையாக இருக்கிறது.இரண்டவது வகையானது புனைவு மொழியில் ஒன்றை இன்னொன்றாக பகடி செய்வதாகும்.ஜான் பவுளின் மன்றீஸா(1982) எனும் நாவல் இவ்வகைப்பட்டதாகும்.மூன்றாவது வகை மாற்று மொழியியல் அமைப்பு மூலம் அல்லது மரபார்ந்த வடிவங்களில் நாவலை உருவாக்குவதாகும்.இதற்கு ரிசர்டு ப்ரவுடிகனின் டோரட் பிஸ்ஸிங் இன் அமெரிக்கா எனும் நாவலை குறிப்பிடலாம்.தமிழில் காணப்படும் மெட்டாபிக்ஸன் புனைக்கதைகளை பார்க்கவேண்டியிருக்கிறது.

ஃ சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி

ஃ ஜெயமோகனின் விஷ்ணுபுரம்

ஃ ரமேஷ்-பிரேமின் சொல் என்றொரு சொல்,புதைக்கப்பட்ட பிரதிகளும்….

ஃ கோணங்கியின் பிதிரா,பாழி

ஃ எம்.ஜி.சுரேஷின் முப்பத்தேழு,அட்லாண்டிஸ் மனிதன்….

ஃ தமிழவனின் ஜி.கே எழுதிய மர்ம நாவல்

ஃ எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

ஃ பா.வெங்கடேஷனின் ராஜன் மகள்

ஃ அஜயன் பாலாவின் மயில்வாகனன் மற்றும் கதைகள்

ஃ கெளதம சித்தார்த்தனின் கதைகள்

ஃ சோபாசக்தியின் கொரில்லா

ஃ சு.ராவின் சில கதைகள்

ஃ யுவனின் குள்ளசித்தன்சரித்திரம்

ஃ சுரேஷ் குமார இந்திரஜித்தின் சில கதைகள்

ஃ லக்சுமி மணிவண்ணனின் சில கதைகள்

ஃ ஆதவன் தீட்சண்யாவின் சிலகதைகள்

ஃ குமார செல்வாவின் உக்கிலு

ஃ கோபிகிருஷ்ணனின் சிலகதைகள்

ஃ சில்வியாவின் சிலகதைகள்

ஃ பாவண்ணனின் சிலகதைகள்

ஃ ந.முத்துசாமியின் சிலகதைகள்

ஃ நகுலனின் நிழல்கள்

ஃ பிரபஞ்சனின் சிலகதைகள்

ஃ ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி

ஃ லா.ச.ராவின் சிலகதைகள்

ஃ கல்கியின் கள்வனின் காதலி

ஃ ஜே.ஆர்.ரங்கராஜுவின் சந்திரகாந்தா

ஃ ஆரணி குப்புசாமியின் கற்கோட்டை

ஃ கு.ப.ராவின் சிலகதைகள்

ஃ புதுமைபித்தனின் சிலகதைகள்

ஃ மறைமலையடிகளின் கோகிலாம்பாள் கடிதங்கள்

ஃ நடேச சாஸ்திரியின் தீனதாயாளு

ஃ வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம்

தமிழில் மெட்டாபிசனும்,மெட்டாபிசன் கூறுகளும் உடைய பலபுனைகதகள்

இருக்கவே செய்கிறது.பொதுவாக மெட்டாபிசன் சிலகூறுகளை கொண்டிருக்கிறது.வின்சே ஓமுண்டன்சனின் இக்கருத்துகளை வைத்து தான் மெட்டாபிசனின் கூறுகள் பழைய நாவல்களில் இருப்பது காணபட்டிருக்கிறது.

அ) பொதுவான உருவக தளத்தில் கதை அமையும்

ஆ) பாலில் நடவடிக்கை பதிலியனாக இருந்து புனைவை உருவாக்கும்

இ) புனைவு தளத்தில் அமைந்த விளையாட்டு அமைப்புகள் குறியீடாக அமைந்து

கதையை இயக்கும்.

ஈ) பொதுவான பதிலியன் வாசகனை துப்பறியும் தன்மையோடு இணைக்கிறது.

மேலும் மெட்டாபிசனின் குணாம்சங்களை அவர் குறிப்பிடும் போது ஊடிழைபிரதியின் தன்மையுடன் இருக்கும் இவை

ஃ புனைவு அமைப்பை பரிசோதனை ஆக்குகிறது

ஃ கோட்பாட்டிற்கும்,விமர்சனத்துக்கும் ஒருங்கிணைவை உருவாக்குகிறது

ஃ கற்பனை எழுத்தாளர்களின் சுயவரலாறு படைக்கப்படுகிறது

ஃ கற்பனை பாத்திரங்கள் குறித்து புனைக்கதையில் விவாதம் மேற்க்கொள்ளப்படுகிறது

ஃ எழுத்தைப்பற்றிய வியாக்கியானம் செய்யப்படுகிறது

ஃ புனைவுப்பாத்திரங்களாக எழுத்தாளர் கதையில் ஊடாடுவார்

ஃ வாசகனை நேரடியாக நோக்கி கதை சொல்லப்படுகிறது

ஃ நேரடியாக சொல்லப்படும் விதம் கேள்விகுறியாக்கப்பட்டு எதார்த்தத்தையோ அல்லது ஒற்றை உண்மை/அர்த்தமோ கடைசியில் மெய்பிக்கப்படமாட்டாது.

ஃ மரபார்ந்த தளத்தை மறுக்கிறது

ஃ எதார்த்த வாழ்வை பிரதிபலிபதை மறுக்கிறது

ஃ எதார்த்தம் என்பதை சந்தேகபடும் விதம் கதை உருமாற்றம் பெறுகிறது

ஃ சுயபிரதிபலிப்பு முதன்மைபடுத்தப்படுகிறது

இவ்வாறாக இயங்கும் மெட்டாபிக்சனுக்கு எதாவது இலக்கு உள்ளதா என்று பார்கிறபோது புனைவு சட்டகத்தை புனைவுமீறிய தளத்தில் சுயநோக்குடன் சொல்லப்படுவது பல பலன்களை அளிக்கிறது.

பொதுவான மெட்டாபிக்சனின் அடையாளங்கள்

புனைவும் எதார்த்தமும் அடையாளங்களும் உதாரணங்களும்

ஃ வரலாறுபுனைவாகிறது.எதார்த்தம் புரிதலை தக்கவைப்பதில்லை மேல் கதைக்கூறானது மர்மமான முறையில் வரலாற்றை வெளிபடுத்தும் அல்லது பன்முக விளக்கங்கள் காணப்படும்.கீழ் கதை கூறானது மொழி/தொடர்பு/மொழிவிளையாட்டு செயல்பாடற்றிருக்கும்.

ஃ மொழி சுழலும் அமைப்பைக்கொண்டது Tristram Shandy என்ற நாவலில் கருப்பு பக்கவடிவமைப்பில் அட்டவணை அடையாளங்கள் காணப்படுகிறது ‘Lost in the Funhouse ‘ ல் சுழலும் தன்மை காணப்படும் மங்கலான தீ Breakfast of Champion மற்றும்Slaughterhouse-V ல் படங்கள் காணப்படுகிறது

ஃ எழுத்தாளனின் அதிகாரம் சட்டகத்தில் காணப்படுவதில்லை The French Lieutenant ‘s Woman ல் எழுத்தாளர் தோன்றுகிறார் The Magus ல் கடவுளின் விளையாட்டுகள் ஆசிரியனின் பிடியை மீறி பாத்திரங்கள் செயல் படும் விதம் ஆசிரியருக்கும்,வாசகனுக்கும் இடைவெளி Stephen King ‘s Mystery & Rushdie ‘s Midnight ‘s Children

ஃ முந்தளத்தில் கதைபற்றிய கதையாகவும் எதார்த்துடனும் காணப்படும் புனைவுபாத்திரங்களும்,வரலாற்று நிகழ்வுகளும் எதிரிடையாக செயல்படும். எழுத்து உத்தி பற்றிய விவாதம் சட்டகங்களை பயன்படுத்துவது.

ஃ ஊடிழைப்பிரதியியல் Midnight ‘s Children ல் எதார்த்த பிரதிகள்/வரலாறு பகடி செய்யப்படுகிறது. Tristram Shandy மற்றும் Tin Drum போன்றவை intertexts ஆக Midnight ‘s Children லிருக்கிறது.

மெட்டாபிக்சனை பொறுத்தவரை சுயபிரக்ஞையுடன் சொல்லுவது மாத்திரமல்லாது சில டிவைசஸ்களை முன்னிறுத்துகின்றனர்.அவை என்ன என்று பார்ப்போம்.

ஃ நாவலைப் பற்றி ஒரு ஆள் நாவலை எழுதுவது

ஃ நாவலில் ஒருவர் நாவலை வாசிப்பது

ஃ கதையை கதையாக சொல்லுவதற்க்கு தலைப்பு,விளக்கங்கள்,தளங்களை

பயன்படுத்துவதும்,குறிபிடும் படியான அட்டவணை,படங்கள் போன்றவற்றை பயன்படுத்துவது.

ஃ ஒரு நாண்லீலியர் நாவல் என்பது வேறு சில வரிசைகளிலும் இயங்கும்

ஃ விளக்கவுரை குறிப்புகள் அடிக்குறிப்புடன் சொல்லப்படும்.

ஃ கதையானது வாசக எதிவினையைப் பொறுத்து நகரும் தன்மைகொண்டது.

ஃ ஆசிரியரோ,வாசகரோ கதாப்பாத்திரங்களாக இருக்கலாம்.

ஃ கதையை யாரும் தீர்மானிக்க முடியாத வகையில் பாத்திரங்கள் இருக்கும்.

ஃ பாத்திரங்கள் கதையை பற்றிய பிரக்ஞையுடையவராக இருப்பார்கள்.

மெட்டாபிக்சனை “self-reflexive fiction” (Robert Scholes), “surfiction” (Raymond Federman), “self-conscious fiction” (Robert Alter), “introverted fiction” (John Fletcher and Malcolm Bradbury), “narcissistic fiction” (Linda Hutcheon), “parafiction” (James Rother) என்றெல்லாம் அழைத்துக்கொண்டனர்.மெட்டாபிக்சனல் வகை எழுத்து

முன்பே பரிசோதனை செய்யப்பட்ட போதிலும் உயர்நவீன,பின்நவீன நிலையில்

ஒரு நிகழ்வாக மாறியது.

பின்நவீன தளத்தில் பெருங்கதையாடல்களின் தகர்வு மெட்டாபிக்சனை முண்ண்ணி செயல்திட்டமாக மாற்றியது.மரபார்ந்த கருத்தாக்கங்களான அடையாளம்,எதார்த்தம்,அர்த்தம் போன்றவை சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டதால்

பிராந்திய கூறுகள் முன்தளத்தில் வந்ததால் புதுமுன்மாதிரிகள் உருவாக்கப்பட்டது.மொழிக்கும்,பண்பாட்டிற்க்கும்,எதார்த்திற்க்கும் உள்ள உறவு

உண்மையானதல்ல என்ற மொழியில்சிந்தனைகள் புதுதிசைகளை காட்டியது.புறவமான எதார்த்தம் மொழி நிர்ணயம் செய்கிற எதார்த்தத்துக்கு மாறுபாடானதாக திகழ்வதால் மெட்டாபிக்சனல் வகையான எழுத்துக்கள் மொழிசுழலாக மாறியது.Ronald Sukenick ன் பின் எதார்த்தவாத நாவலான(post-realistic novel) The Death of the Novel and Other Stories (1969) முக்கியத்துவம் பெற்றது.

புனைக்கதையைப்பற்றி அவர் கூறும் போது

“constitutes a way of looking at the world. […] Realistic fiction presupposed chronological time as the medium of a plotted narrative, an irreducible individual psyche as the subject of its characterization, and, above all, the ultimate, concrete reality of things as the object and rationale of its description. In the world of post-realism, however, all of these absolutes have become absolutely problematic. The contemporary writer – the writer who is acutely in touch with the life of which he is part – is forced to start from scratch: Reality doesn ‘t exist, time doesn ‘t exist, personality doesn ‘t exist”

பின் நவீனத்துவம் எல்லாவகை தத்துவாதாரங்களை கேள்விக்கு உட்படுத்திய போது எதார்த்தவாதத்தின் தத்துவ நெருக்கடியும் மரபார்ந்த பார்வைகளின் போதாமையும் மனித கற்பனைவளத்தை குறுகிய ஒற்றை பார்வையில் தொடர்பறாதவாறு சொல்லும் முறையும் எதார்த்தவாதத்தின் தோல்விகளாக கணக்கிலெடுக்கப்பட்டது.சுகனிக் போன்ற அ-புனைவு கதையாசிரியர்கள் புனைவு எதார்த்தத்தில் சுதந்திரத்தை வலியுறுத்தி இவ்வகையான கதைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தனர்.Robert Alter ‘s Partial Magic: The Novel as Self-Conscious Genre (1975) நூலில் தற்கால மனோபாவம் சுபிரக்ஞையான கதைசொல்லலை விரும்புகிறது என்று ஆய்வு அடிப்படையில் நிரூபித்தார்.சுயபிரக்ஞையான புனைக்கதை எழுத்து என்ன என்று சொல்லும் போது..

“novel that systematically flaunts its own condition of artifice and that by so doing probes into the problematic relationship between real-seeming artifice and reality” புனைவையும் எதார்த்தத்தையும் விலக்கி பார்க்க தேவையில்லை என்பது பெரும்பான்மையான கதாசிரியர்களிம் கருத்தாக இருக்கிறது.

ON THE POETICS OF POSTMODERN FICTION

ஃ Barr, Marleen. FEMINIST FABULATION.

ஃ Carmello, Charles. SILVERLESS MIRRORS: BOOK, SELF, AND POSTMODERN AMERICAN FICTION.

ஃ Couturier, Maurice. REPRESENTATION AND PERFORMANCE IN POSTMODERN FICTION.

ஃ Currie, Mark. POSTMODERN NARRATIVE THEORY.

ஃ Dipple, Elizabeth. THE UNRESOLVABLE PLOT: READING CONTEMPORARY FICTION.

ஃ Fokkema, Douwe, ed. LITERARY HISTORY, MODERNISM, POSTMODERNISM.

ஃ — & Hans Berten, eds. APPROACHING POSTMODERNISM.

ஃ Foster, Hal, ed. THE ANTI-AESTHETIC.

ஃ Fox, Robert. CONSCIENTIOUS SORCERERS: BLACK POSTMODERNIST FICTION.

ஃ Hassan, Ihab. THE DISMEMBERMENT OF ORPHEUS.

ஃ Hutcheon, Linda. NARCISSISTIC NARRATIVE: THE METAFICTIONAL PARADOX.

ஃ —. A POETICS OF POSTMODERNISM.

ஃ Klinkowitz, Jerome. LITERARY DISRUPTIONS.

ஃ Leitch, Vicent. POSTMODERNISM: LOCAL EFFECTS, GLOBAL FLOWS

ஃ Lynn, Aldon. BLACK CHANT: LANGUAGES OF AFRICAN_AMERICAN POSTMODERNISM

ஃ Maltby, Paul. DISSIDENT POSTMODERNISTS: BARTHELME, COOVER, PYNCHON.

ஃ McCaffery, Larry. THE METAFICTIONAL MUSE: THE WORKS OF ROBERT COOVER, DONALD BARTHELME, AND WILLIAM H. GASS.

ஃ —. POSTMODERN FICTION: A BIO-BIBLIOGRAPHY.

ஃ McCaffery, Larry, ed. ACROSS THE WOUNDED GALAXIES: INTERVIEWS WITH CONTEMPORARY AMERICAN SCIENCE FICTION WRITERS (Includes interviews with Burroughs, Gibson and Delany.)

ஃ —, ed. STORMING THE REALITY STUDIO: A CASEBOOK ON CYBERPUNK AND POSTMODERN SCIENCE FICTION.

ஃ McCraacken, Ellen. New Latina Narrative: The Feminine Space of Postmodern Ethnicity

ஃ McHale, Brian. CONSTRUCTING POSTMODERNISM.

ஃ —. POSTMODERNIST FICTION.

ஃ Putz, Manfred & Peter Freese, eds. POSTMODERNISM IN AMERICAN LITERATURE: A CRITICAL ANTHOLOGY.

ஃ Raval. Suresh. METACRITICISM.

ஃ Scholes, Robert. FABULATION AND METAFICTION.

ஃ Tabbi, Joseph. POSTMODERN SUBLIME.

ஃ Thiher, Allen. WORDS IN REFLECTION: MODERN LANGUAGE THEORY AND POSTMODERN FICTION.

ஃ Varsava, Jerry. CONTINGENT MEANINGS.

ஃ Vizenor, Gerald, ed. NARRATIVE CHANCE: POSTMODERN DISCOURSE ON THE NATIVE AMERICAN NOVEL

ஃ Walder, Dennis. POST-COLONIAL LITERATURES IN ENGLISH: HISTORY< LANGUAGE, THEORY.

ஃ Waugh, Patricia. FEMININE FICTIONS: REVISITING THE POSTMODERN.

ஃ —. METAFICTION.

ஃ Weisenburger, Steven. FABLES OF SUBVERSION.

ஃ Ziegler, Heidi, ed. THE END OF POSTMODERNISM: NEW DIRECTIONS

WORKS CITED

Bawer, Bruce. ‘Confession or Fiction ? Stories from Vietnam. ‘ Wall Street Journal 215, 23 Mar 1990: A13.

Beidler, Philip D. American Literature and the Experience of Vietnam. Athens: U of Georgia P, 1982.

Christensen, Inger. The Meaning of Metafiction. Bergen: Universitetsforlaget, 1981.

Herr, Michael. Dispatches. New York: Vintage, 1977.

Lyons, Gene. ‘No More Bugles, No More Drums. ‘ Entertainment Weekly 23 Feb. 1990: 50-52.

Mehren, Elizabeth. ‘Short War Stories. ‘ Los Angeles Times 11 Mar. 1990: E1, E12.

Melmoth, John, ‘Muck and Bullets. ‘ The Sunday Times (London) 20 May 1990: H6.

Naparsteck, Martin. ‘An Interview with Tim O ‘Brien. ‘ Contemporary Literature 32 (Spring 1991): 1-11.

O ‘Brien, Tim. The Things They Carried. New York: Houghton, 1990.

Scholes, Robert. Fabulation and Metafiction. Urbana: U of Illinois P, 1983.

Schroeder, Eric James. ‘Two Interviews: Talks With Tim O ‘Brien and Robert Stone. ‘ Modern Fiction Studies 30 (Spring 1984): 135-64.

Waugh, Patricia. Metafiction: The Theory and Practice of Self-Conscious Fiction. New York: Methuen, 1984

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்