This entry is in the series 20020505_Issue


தேவையான பொருட்கள்

1/2 கோப்பை வெங்காயம் வெட்டியது

2 பூண்டு பற்கள் நசுக்கியது

1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்

1/2 கோப்பை சிவப்பு குடமிளகாய் வெட்டியது

1 1/2 கோப்பை சாதம்

2 தேக்கரண்டி தக்காளி விழுது

3 தேக்கரண்டி எண்ணெய்

1/2 தேக்கரண்டி மிளகு

1/4 கோப்பை கொத்துமல்லி

வெஜிடபிள் ஸ்டாக், அல்லது தண்ணீர் 1/4 கோப்பை

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டு ஆகியவற்றை வதக்கவும்.

மிளகாய்த்தூள், குடமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்

இத்துடன் வெஜிடபிள் ஸ்டாக், தக்காளி விழுது, மிளகுத்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து அடுப்பில் வைக்கவும். (வெஜிடபிள் ஸ்டாக்கில் சிறிதளவு உப்பு இருக்கும்)

இந்த கலவை சிறிது கெட்டியானதும், சாதத்தை போட்டு பிரட்டவும்

இதன் மீது கொத்துமல்லி சேர்த்து பறிமாறவும்.

இதன் மீது பச்சைத்தக்காளியை நீளத்துண்டுகளாக நறுக்கி அலங்கரிக்கலாம்.

Series Navigation