முயற்சி

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

சிவசங்கரன்


பாறை புரட்டி
பாதை அமைத்து
எதிர்ப்பவை அழித்து
கடல் தேடும் காட்டாறு

காளையொன்றை கன்றாக்க
காட்டாற்றை நதியாக்க
கால்கட்டாம் கல்யாணம் !!

இயல்பதனை இழந்தபின்
இன்பம் வந்து சேருமோ ?
கட்டறுத்தல் இயல்பென்றால்
கட்டுண்ட பின்னாலே
காதல் தான் மலருமோ ?

இருப்பதை இருமடங்காக்கி
இயல்பினால் வெல்லச் செய்ய
இணையொன்று கிட்டிவிட்டால்
இறையும் புவியும் உன்வசம் …

Series Navigation

சிவசங்கரன்

சிவசங்கரன்

முயற்சி

This entry is part [part not set] of 14 in the series 20010623_Issue

கோகுல கிருஷ்ணன்


நாக்கை வளைத்து
நுழைத்து
நிரடிப் பார்த்தாயிற்று;
விரல் நுழைத்து
நகத்தின் துணையுடன்
நோண்டியாகிவிட்டது;
குண்டூசி கொண்டு
குத்தியும் பார்த்தாயிற்று.
எத்தனை முயற்சித்தும்
வெளியேற மறுக்கிறது
பல்லிடுக்கில் சிக்கிக்கொண்ட
உணவுத்துணுக்கு
மனசுக்குள் நுழைந்துவிட்ட
உன்னைப் போல.

Series Navigation

கோகுல கிருஷ்ணன்.

கோகுல கிருஷ்ணன்.