மும்பையனுக்கு மும்பாதேவி

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

மும்பாதேவி


மும்பையனுக்கு மும்பாதேவி
எழுதிக்கொள்ளும்
சுகச்செய்தி கடிதாசி.
நேற்று சாயந்தரமா நம்ம
வீட்டு “திண்ணை”யில் நீங்க
பேசினத அடுக்களையில்
அன்னபூர்னா
சப்பாத்தி ஆட்டாவை
பிசைந்து
கொண்டே நானும்
கேட்டேனுங்க.

மும்பையன் மீசையில் மண்
ஒட்டினா எல்லோருக்கும்
ஷேமமாயிருக்கும்.

உங்களுக்குத் தெரியுமோ..
அவர்
முதல் ஓட்டப்பந்தயம்
“சுடுகாடு வரைக்கும்”
மக்கள் காட்சியில் அவர்
சொன்னபடி செய்துபுட்டாரு.
ஆனா அப்புறமா என்னாச்சுனா
5000
வன்னியர்கள் பட்டாளி
மக்கள்
கட்சியிலிருந்து கட்சி
மாறி
திராவிடக் கட்சிகளில்
ஐக்கியமாகிட்டாங்க.

சொல்றப்டியெலாம்
செய்யறதுக்கு மருத்துவரை
என்ன தமிழர்களின்
மனோதத்துவம் அறியாத
மடையன் என்று
நினைத்தீர்களா?

ஆனா அவரோட இந்தக் கிச்சு
கிச்சு சண்டை கவுண்டமணி
செந்தில் ரேஞ்சுக்கு
ரசனையாக இருக்கு
யாரு கவுண்டமணி யாரு
செந்தில்னு யோசிச்சு
முடிவு
பண்ர உரிமையை உங்களுக்கு
மறுக்காமல் தந்திருக்கும்,

மும்பாதேவி.


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

மும்பாதேவி

மும்பாதேவி