This entry is in the series 20070405_Issue

பாண்டித்துரை



பெருமூச்சு சப்தங்கள்
பெரியவள் ஆனபின்பு

ஒன்றும் தெரியாது!
போகுமிடத்தில்
வாங்கிக் கட்டிக்க என்று

ஏச்சுக்களும்
பேச்சுக்களும்
எதிர்மறையாய்

எல்லாம் முடிந்தது
மூன்று முடிச்சில்

கொஞ்சம் கொஞ்சமாய்
என்னின் ஆழுகை
எதிர் கூடாரத்தில்

ஒன்றும் தெரியாதவளாய்
ஒதுங்கிச் செல்லாமல்

ஆழுமை
அரவணைப்பு
என

ஒவ்வொன்றாய்
தொட்டுச் செல்ல

தாய்மையடையும்
தருணத்தில்
முழுமையடைகிறேன்!


ஆக்கம்: பாண்டித்துரை
pandiidurai@rediffmail.com

Series Navigation