முதல் சந்திப்பு

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

இளந்திரையன் கீதவாணி – கனடா


கண்ணிமை மூடுவதற்குள் – ஒரு
புன்னகை மலர்வதற்குள்

விரலின் நடுக்கம் உணர்வதற்குள்
விருட்டென்று பயம்
ஒட்டிக்கொளகிறது

எல்லாக் கண்களும்
எங்களையே பார்ப்பது போல

இருந்த போதும்
என்னுள் ஏதோ
இடம் மாறிப்போய் விட்டது

Series Navigation