முதன் முதலாய்

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

சுபா பாலாஜி


காலையில் எழுந்ததிலிருந்தே குமரேசனுக்கு படபடப்பாய் இருந்தது….ரகு சொல்வதை கேட்பதா,வேண்டாமா….அவன் ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே ரம்பிச்சுட்டானாம்.

‘இங்க பாரு….நாங்க எல்லாரும் அம்மா வயத்துல இருக்கும்போதேவா ப்ளான் பண்ணிக்கிட்டு வந்து பிறந்தோம்….எல்லாம் இந்த வயசுல அனுபவிக்கணும்டா குமாரு….நாற்பது வயசுல இந்த த்ரில் கிடைக்காதுடா….அப்ப பெண்டாட்டி,புள்ளக்குட்டி ‘னு டென்ஷன் தான்டா மச்சி…. ‘,அட்வைஸ் மழை பொழிந்தது குமரேசன் மீது.

பல் துலக்கிக்கொண்டிருக்கும்போதே அண்ணன் வந்து எட்டிப்பார்த்தான்.

‘என்னடா பேஸ்து அடிச்சிருக்கு மூஞ்சி….ஏதாவது முக்கியமான விஷயமா ?….காலேஜ் முதல் செமஸ்டர் முடிஞ்சாச்சே….இன்னுமா ராகிங் பிரச்சினை இருக்கு…. ‘, என்றான் அண்ணன் அக்கறையாய்.

வெளி ஸ்டாண்டில் மாட்டியிருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்தபடி, ‘அதெல்லாம் ஒண்ணுமில்லைண்ணே….வண்டி ‘பங்சர் ‘ யிடுச்சு நேத்து…. இப்ப ஒட்டிட்டு போணும்னா லேட்டாயிடும்…. அதான்,என்ன பண்ணலாம் ‘னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்…. ‘,என்றான் குமரேசன்.

காலையில் எழுந்து முதன் முதலில் பேசுவதே பொய்….சகுனமே சரியில்லாததாய் பட்டது அவனுக்கு….

‘கண்ணு, நேத்து கரண்ட் போயிடுச்சில்ல….அதான் மாவாட்டமுடியல்ல….உப்புமாதான் கிண்டியிருக்கேன்….இன்னிக்கு ஒரு நாள் ‘அட்ஜஸ்ட் ‘ பண்ணிக்கோ ராசா…., ‘யா சமையலறையில் அப்பாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

மாமா பெண்ணின் வளைகாப்பில் கலந்துக் கொள்வதற்காக அம்மா மாயவரம் போயிருப்பதே அப்போதுதான் குமரேசனின் நினைவிற்கு வந்தது.

‘என்னடா….மூஞ்சே சரியில்ல….வயித்தால,கியத்தால போவுதா ?…. உங்காத்தாகிட்ட அப்பவே சொன்னேன்….ரொம்ப நாள் இந்த கிளவி கையில மாட்டிவிடாதே ‘னு….என்னிக்கு எம்பேச்சைக் கேட்டிருக்கா அவ…., ‘என்றபடியே இவனது பதிலைகூட எதிர்பாராது குளியலறைக்குள் நுழைந்து விட்டார் அப்பா.அவ்வளவு பட்டவர்த்தமாய் தெரிகிறதா தனது பயம் என்று குமரேசனுக்கு படபடப்பு அதிகமானது.

அப்பாவின் முதல் எதிரி உப்புமாதான்.

‘மாம்டா….இன்னிக்கு இந்த ‘கிளவி ‘ கையால சாப்பிட்டா கசக்குதா….கல்யாணத்துக்கு முந்தி உங்கப்பனுக்கு ஏதாவது வியாதி,கீதி ‘னு படுக்க விட்டிருப்பனான்னு கேளு….உங்காத்தாகாரி நல்லா ‘வாய ‘ வளத்துவிட்டிருக்கா…. ‘.

அம்மாவின் முன் யாவின் குரல் சற்று அடங்கிதான் ஒலிக்கும்…. அம்மா வீட்டில் இல்லையென்றால் யா பேசுவதை கேட்கவே முடியாது….

னால் அக்கம்,பக்கத்து வம்பு பேசும்போது மட்டும் மாமியாரும்,மருமவளும் செமகூட்டாயிருவாங்க….

அதற்குள் அப்பாவும் குளித்துவிட்டு விபூதி மணம் வீச பூஜையறைக்குள் நுழைய அவரது குரல் மட்டும் ஒலிக்க வீடே அமைதியானது. தனது ‘டிக்டிக் ‘ சத்தம் வெளியில் தெளிவாய் கேட்பதாய் பட்டது குமரேசனுக்கு.

வழக்கமான காலை நேர பரபரப்புதான் என்றாலும் இவனுக்கு மட்டும் இது புதுகாலையாய் தோன்றியது….பள்ளிபடிப்பு முடியும்வரை பள்ளி,படிப்பு,குறுகிய நண்பர் வட்டம்….என்று அதிகம் டென்ஷன் இல்லாத சாதரண வாழ்க்கைதான் இவனது.

‘இரண்டாவது பொண்ணா பொறக்கணும் ‘னு சைபட்டே ‘ல….உன் சின்னபய ‘குமாரு ‘ எவ்வளோ அடக்கமா இருக்கான்னு பாரு….இந்த காலத்துல இப்படி ஒரு தங்கமான புள்ளய பாக்கமுடியுமா….கொடுத்து வச்ச மகராசி…. ‘,என்று உறவினர்கள் சொல்லும்போது அம்மாவின் முகத்தில் பெருமை நிலைக்கொள்ளாது அலைபாயும். அப்பாவை பார்த்து வெட்கமாய் ஒரு சிரிப்பு உதிர்ப்பாள்.

திரும்ப,திரும்ப யோசித்தான் குமரேசன்….ரகு சொன்ன தப்பை பண்ணத்தான் வேண்டுமா ?….குளியலறைக்குள் நுழைந்தவன் தண்ணீரை மொண்டு,மொண்டு உடம்பில் ஊற்றிக்கொண்டான்.

‘அட….நாளைக்கு ஒரு நாள்தான….என்னடா,இப்படி பொம்பளையாட்டமா பயந்துகிட்டு…. நீ ‘ம்பளை ‘டா குமார்….வண்டிய ஏதாவது சாக்கு சொல்லி வீட்டுல போட்டுட்டு வந்துடு….ஒரு நாள் எங்க கூட வந்து பாரு….செம ‘ஜமா ‘வா இருக்கும்டா….அப்புறம் பாரு….வண்டிய தொடக்கூட மாட்ட…. ‘, ரகுவின் குரல் காதில் ஒலித்து நன்கு தூண்டிவிட்டது குமரேசனை.

‘பேசாமல் வயித்து வலி ‘னு சொல்லி மட்டம் போட்டிருவோமா ‘ என்று சொல்லும் மனதை அதட்டி அடக்கிவிட்டு,தட்டில் இருப்பதை சரியாக கூட கவனிக்காது விடு,விடு ‘வென சாப்பிட்டுவிட்டு கிளம்பி பஸ்ஸ்டாண்ட் சென்றதும்தான் மூச்சு விட்டான்.

‘என்னா….ஒரு பயலையும் காணோம்….பேசாமல் திரும்பி வீட்டுக்கு போய் அண்ணணோட வண்டிய வாங்கிகிட்டு கிளம்பிடலாமா ‘, என யோசித்திக்கொண்டிருக்கும்போதே, ‘பாருங்கடா…. நேத்திக்கு ‘இதெல்லாம் சரியாடா ‘னு டயலாக் விட்டுட்டு இப்போ முதல் ளாய் வந்து நிக்கிறான்…. ‘, ‘ஒ ‘வென்று கத்தியபடியே நண்பர் கூட்டம் வந்து அவனது மனதை மாற்றியது.

தூரத்தில் புள்ளியாய் தெரிந்து,பக்கத்தில் பிரமாண்டமாய் வந்து நின்றது பஸ். ஏறாமல் சற்று ஒதுங்கி நின்றவனை நெண்டி தள்ளியவனாய் சொன்னான் ரகு.

‘மச்சி….மீன்கார கூடைக்கு நடுவிலேயே பிரயாணம் செய்யணுமா உனக்கு….இந்த பஸ்ஸை உட்டா அடுத்து ஒரே கிழவிங்க கூட்டமா ஏறும்டா….இரண்டுத்தையும் சமாளிக்கறது கஷ்டமப்பா…. ‘, குமரேசனை பிடித்து தள்ளி ஏறினான் ரகு.

பட,படப்பு அதிகமாகிவிட்டது குமரேசனுக்கு. கூட்டமாய் பெண்கள் வந்து ஏற சற்றே வழிவிட்டு நின்றவனை பார்த்து தலையிலடித்துக் கொண்டான் நண்பனொருவன்.

அட…. இந்த காலத்திலும் தாவணியில் ஒரு பெண்.

கண்டக்டர் அருகில் போய் நின்றவனைப் பார்த்து இன்னுமொரு நண்பன் சொன்னான்.

‘இது வேலைக்கு வாது ராசா….வாழ்க்கையில நீ படிக்கவேண்டியது நிறைய இருக்குதுடா மச்சி…. போ…போயி அந்த புல்லுக்கட்டுக்கு பக்கத்தில நில்லு…. ‘, எனவும் குமரேசனின் முகம் மாறியது.

‘புல்லுக்கட்டா….எங்கடா…. அதுல பூச்சி,கீச்சி இருந்து கடிச்சுட போகுதுடா….எனக்கு சட்டு ‘னு அலர்ஜியாயிடும்…. ‘,என்றவனை பார்த்து ‘கொல் ‘லென சிரித்தது நண்பர் கூட்டம்.

‘ஐய….அங்குன பாரு….பச்சை கலர் ‘ல டிரெஸ் போட்டுருக்கில்ல….அங்கின போய் நிக்க சொன்னம்….டேய்….இவனுக்கு ‘அ ‘ன ‘ ‘வன்னாலேருந்து தொடங்கணும் ‘ டோய், ‘ எனவும் மீண்டும் பெரிய சிரிப்பு சத்தம் நண்பர்கள் பக்கமிருந்து.

‘ஏய்…. யாருப்பா அது…. ‘ஃபுட்போர்ட் ‘ ல தொங்கறது….அப்பனே…. வருங்கால மன்னா, ஒரு காலோட ட்சி புரியற மாதிரி யிடுமப்பா….உள்ளார வா சாமீயோவ்….உன்னோட சேர்ந்து இன்னும் இரண்டு குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துடும் நீயி மேல ஏறி வரலையின்னா…. ‘,கண்டக்டர் கத்தினதும் அப்பையன் சற்றே மேலேறி வந்தான்.

குமரேசனுக்கு நிஜம்மாகவே வயிற்றை கலக்கியது. தலை சுற்றுவது போல ஒரு ஃபீலிங்….எல்லோரும் இவனையே உற்றுப் பார்ப்பதுபோலவும் தோன்றியது.

பேசாம அடுத்த ஸ்டாப்பிங் ‘கில் இறங்கிவிட வேண்டியதுதான். வாழ்க்கையில இனி இந்த பசங்களோட சேரக்கூடாது.இப்படி டென்ஷன் வுறதுக்கு பேசாம நடந்தே போகலாம்.

‘ஏண்டா இந்த முழி முழிக்கற…. காஷுவலா இருடா….எவனாவது பிக்பாக்கெட் அடிச்சாகூட பழி உன் பேர்ல வந்துடும் போல இருக்கு….இதெல்லாம் ஒரு திரில்’டா மச்சி….40 வயசு ‘ல அனுபவிக்க முடியுமா சொல்லு…. ‘, ‘தேரோட்டி ‘ போல் நண்பர்கள் ‘ அட்வைஸ் ‘ மழை பொழிய அர்ச்சுனன் னான் குமரேசன்

இன்னும் 4 ஸ்டாப்பு தாண்டியாக வேண்டும். நடுவில் சிக்னலுக்காக பஸ் நின்றபோதெல்லாம் இரத்த அழுத்தம் எகிறியது இவனுக்கு. மனதை திடப்படுத்திக் கொண்டு ‘புல்லுக்கட்டை ‘ நோக்கி நகரத்தொடங்கும்போதுதான் அந்த குரல் கேட்டது.

‘என்ன தம்பி இன்னிக்கு பஸ் ‘ல வர்றாப்பல இருக்கு….எப்பவும் வண்டி ‘ல தான போவீங்க…. ‘,சத்தமாய் கேட்ட குரலுக்கு சொந்த காரரை சட்டென அடையாளம் தெரிந்துக் கொண்டான் குமரேசன்.

மூக்கையன் மாமா….

அப்பாவின் தோஸ்து….போச்சு….இன்னைக்கு ‘னு பார்த்தா இந்த பஸ் ‘ல வரணும்….இவருக்கு நேரே மானம் போக போகுது….வீட்டில் உடனே தெரிஞ்சு போக போகுது….

பல விபரீத கற்பனைகள் இவன் மனதில் ஊசலாட அவரைப் பார்த்து அசடு வழிந்தபடி, ‘மாங்க மாமா….வண்டி பங்சர்….அதான்… நீங்க எங்க….கடைக்கு போறிங்களாக்கும்…. ‘,என்றவனுக்கு பட,படப்பு இன்னும் குறையவே இல்லை. அவர் சொன்னது எதுவும் இவனது மனதில் பதியவேயில்லை.

‘புல்லுக்கட்டை ‘ விட்டு சற்று தள்ளி பாதுகாப்பான தூரத்தில் நின்றுக் கொண்டான்.

‘குமரேசா….அடுத்த ஸ்டாப்பிங் ‘ல இறங்கணும்….முன்னேறிப்போய் மாமா பக்கத்துல நில்லு….இல்லாங்காட்டி இறங்கறத்துகுள்ள தாவு தீர்ந்துடும்…. ‘, என்றான் ரகு காதருகில்.

‘உனக்கும் மூக்கையன் மாமாவை தெரியுமாடா…. எப்படிடா ? ‘ என்றவனை வினோதமாக பார்த்தான் ரகு.

‘இவன் எவண்டா…. மூக்கையன்,நாக்கையன் ‘னு சொல்லிக்கிட்டு…. நான் டிரைவர் மாமாவை சொன்னேன் ‘டா…. ‘,என்றவனிடம்

‘ஒ….இந்த டிரைவர் உனக்கு மாமாவா….சொல்லவே இல்லையே நீ…. எப்படிடா இவளோ தைரியமா வர்ர….மாட்டிகிட்டா வீட்டுல சொல்லிட மாட்டாரா ?…. ‘, என்று குமரேசன் வினவவும் தலையிலடித்துக் கொண்ட ரகு சொன்னான்.

‘தெய்வமே…. இன்னியோட சரிடா ராசா உன்னோட பஸ் ‘ல வர்றது…. உனக்கு பெரிய கும்பிடுடா சாமி….ளை விடு…. இறங்கு…. நம்ம ஸ்டாப் வந்தாச்சு…. ‘,என்றபடி எல்லோரும் இறங்கவும் கூடவே இறங்கினான் குமரேசன்.

சற்றே யோசித்தவன் பின் திடமான குரலில், ‘மாடா….இனிமே நானும் உங்ககூட இந்த விளையாட்டுக்கெல்லாம் வரல்லப்பா…. ஒருநாள் பண்ற தப்புதான் பலநாள் தொடரவும் வாய்ப்பு கொடுக்குது…. இப்படித்தான் நாம பண்ற எல்லா தப்பும் ரம்பிக்குது…. பாரு,இன்னிக்கு டிக்கெட் வாங்காம தப்பிச்சுட்டோம்….

முதல் தடவைங்கிறதால எனக்கு படபடப்பா இருந்தது…. னா,பத்து நாள் கழிச்சு இது சாதாரணமா யிடும்…. என்னிக்காவது ஒரு நாள் மாட்டிக்குவோம்…. அப்படியே மாட்டிக்காமயே ‘லக் ‘ அடிக்குது ‘னு வை…. அரசியல்வாதிகளையோ,மத்தவங்களையோ தப்பு பண்றாங்க ‘னு சொல்ற அருகதை நமக்கு கிடையாது…. அவுங்க நம்ம வரிப்பணத்தை கொள்ளையடிச்சா பார்த்துக்கிட்டு சும்மாதான் இருக்கணும்…. இனி நான் என் பைக் ‘லயே காலேஜுக்கு வந்துகிறேன்…. என்னிக்காவது பஸ் ‘ல வரணும் ‘னா டிக்கெட் வாங்கிட்டு வந்துக்கறேன்…. எனக்கு எந்த பட்டபெயர் கொடுத்தாலும் சரி….கிளாஸ் ‘ல மீட் பண்ணுவோம் ‘டா….பை…. ‘, அமைதியாய் சொல்லிவிட்டு கல்லூரிக்குள் நுழையும் குமரேசனையே பார்த்தபடி நின்ற ரகு யோசிக்க தொடங்கியிருந்தான்.

—-

Series Navigation