முடிவுகளல்ல ஆரம்பங்கள்

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

திலகபாமா சிவகாசி


முன்னேற்பாடுகள் ஏதுமின்றி

மணலில் போட்டு வைத்த கட்டங்கள்

தூக்கி எறிந்த செல்லாக்குகள்

தீர்மானித்திருந்த கட்டங்களில்

விழுந்திருந்தும்

எல்லையைத் தொட

அடித்த நொண்டிகளில்

எகிறிப் போய் விழ

மூடிய இமைகளோடு தேடிய

செல்லாக்குகள் கிடைத்த பின்பு

வென்று விட்ட படிகள்

தடங்களாய் குறித்து விட்டு

திரும்பவும் எறியப் படும்

எல்லைகளாகும் செல்லாக்குகள்

முடிவுகளல்ல ஆரம்பங்கள்

எல்லைகள் எனமுன்னிறுத்தும்

mahend-2k@eth.net

Series Navigation