முடிவிலடங்கும் தொடக்கம்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

மண்ணாந்தை


உள்ளிருந்து பீறிடும் ஆனந்தத்தின்
நடனம்
எதனுள்ளிருந்து
நடனத்தின் உச்சத்தில்
நடந்திடும் தாவல்
எவ்வெளிதனிலது
தாவலின் தருணத்தில்
நின்றிடும் காலம்
நின்றது
எங்கோடும் பாம்பின்
நெளிவு

காலத்தின் இதயத்தில்
பாதம் பதித்திடும்
இப்பெரு நடனமதில்
விநாடி
முடிவிலியாகப்
பிளந்த
அசைவொன்றாக
பிரபஞ்சமனைத்தும்
எனினும்
பிரபஞ்சத்தின்
ஏதோ ஓர் மூலையில்
சிறு நீலக்கோளமொன்றில்
சில நூறு கோடி ஆண்டுகள்
பகடையாட்டங்களில்
எழுந்த பிரக்ஞையில்
பின் அது
எரிந்த சுடுகளத்தின்
பாழ்வெளியில்
உள்ளிருந்து பீறிடும் ஆனந்தத்தின்
நடனம்
அனைத்துமாக
அனைத்தின்
அனைத்தியக்கங்களுமாக
அனைத்தினுள்ளும்
அனைத்திற்கப்பாலும்
என்னுள்ளும்
பின்
என்னைப் பிழிந்தழித்து
உள்ளிருந்து பீறிடும் ஆனந்தத்தின்
நடனம்…
-மண்ணாந்தை

Series Navigation