முகத்தைத் தேடி

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

எடமேலையூர் சரவணன்- சிங்கப்பூர்.


ஒவ்வொன்றிலும் சில வித்தியாசங்கள்
ஒன்றுபோல் ஏழாம் உலகில்!
ஆதாரமில்லாத அதிசயம்தான்,
அழகென்றும், அழகில்லாததென்றும்,
ஆளாளுக்கு விமர்சனங்கள்;
பார்க்கப்படும் முகமெல்லாம்
அழகுதான்!
பார்க்கும் அந்த முகம்
அழகென்றால்!!
கிடைத்ததைத் தொலைத்து,
தொலைந்ததைத் தேடி
எனக்குள்ளேயே தொலைந்தது
என் முகம்!

அருகிலுள்ள முகங்களோ
அன்னியமாய்…
இருந்தும் தேடுகிறேன்,
எனக்கான முகத்தை..
தொலைத்தாலும் தொலைந்து போகாத
அந்த ஒரு முகத்தை…!

—-
saravanan6347@hotmail.com

Series Navigation