மீயுசிக் மசாலா இசைவட்டு வெளீயீடு – பாடல்ஆசிரியர்கள் இருட்டடிப்பு

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

பாண்டித்துரை


மீயுசிக் மசாலா இசைவட்டு வெளீயீடு- நடிகர் சரத்குமார் விவேக் ஜஸ் அசோக் குஸ்பு கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழாவில் பாடல்கள் எழுதிய பாடல்ஆசிரியர்கள் இருட்டடிப்பு.

சிங்கப்பூரில் அமைந்துள்ள செம்பாங் சமூகமன்றத்தில் 24.03.2007 அன்று நடைபெற்ற இவ்விழாவில் எதிர் பார்ததற்கு மேல் பொதுமக்கள் வந்து சிறப்பித்தனர். காரணம் சினிமா பிரபலங்கள. நடிகர் சரத்குமார் விவேக் ஜஸ் அசோக் குஸ்பு கலந்து கொண்டு சிறப்பித்ததே.

சூப்பர் சுபா மற்றும் ஆசிரியர் புரவலன் நிகழ்சியினை தொகுத்து வழங்க சிந்து அச்சுதனின் பரதநாட்டியத்துடன் விழா இனிதே தொடங்கியது. எல்லோரையும் கவர்ந்த அம்சம் சீன கலைஞர்கள் இந்திய பாரம்பரிய இசை கருவிகளான தபேலா மற்றும் சிதார் வாசித்தது. மற்றும் ஒருசிறப்பம்சம் இவர்களின் பெயர் கோவிந்த்; மற்றம் கிருஸ்ணா. நம் பாரம்பரிய இசையை விட நம் மொழியை பிற இனத்தவர் பேச கேட்டால் மிகவும் இனியதாக இருக்கும் என்றார் புரவலன் (ஜயா அதான் இப்ப நாமல்லாம் தமிழ் பேசறது இல்லையா!) பின் ராஜஸ்தானி நடனம் சிறு நாடகம் ராப் பாடல் என பல உள்ளுர் கலைஞர்கள் திறமைகளை வெளிக்காட்ட களமாக இந்நதிகழ்வு அமைந்தது. பின் சரத்குமார் இசைதட்டினை வெளிட்டார். இவ்ஆல்பத்தில் இருந்து பனசை நடராஜன் எழுதிய பாடலும் மற்றும் ஒரு பாடலும் நடன வடிவில் அரங்கேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

பாடல்கள் எழுதிய சிங்கப்பூர் கவிஞர் பனசை நடராஜன் மற்றும் யுகபாரதியை தவிர்த்து மற்ற எல்லோரையும் அறிமுகபடுத்தி நினைவுபரிசு வழங்கினர்.

பின் பேசிய நடிகை குஸ்புவின் பேச்சு அடக்கமாக இருந்தது. சிங்கப்பூரை அவரது இரண்டாவது வீடாக கருதுகிறார். அந்த அளவுக்கு பிடித்தநாடாம். மேலும் இவ்ஆல்பத்திலிரு;து ஒரு பாடலை அடுத்து தயாரிக்கவிருக்கும் தனது படத்தில் இணைக்கவிருப்பதாகவும் சிங்கப்பூர் மக்கள் தமிழ்திரைஉலகம் வருவதையும் வரவேற்று பேசினார் .

விவேக்கின் பேச்சு எப்பவும் போல நகைச்சுவையாக அமைந்தது. மேலும் சரத்குமாரின் 15வருடமாக ஆட்டோகிராப் போடும்போது உழைப்பே உயர்வு என்று எழுதுவதை ஞாபகபடுத்தி ஏப்ரலில் சிவாஜி மே யில் சொல்லியடிப்பேன் (ரஜினிக்கு தெரியும்மா) என்று தனது கதாநாயக நடிப்பு பற்றி பேசினார். விவேக் மேடையேருவதற்கு முன்பு அவரிடம் பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்யப்படவில்லை சின்ன கலைவாணன் ஆகிய தாங்கள் மேடையில் பேச வேண்டும் என்று எழுதி கொடுத்தேன். ஆனால் திருவாளர் விவேக் இதுபற்றி பேசாமல் உரையை முடிக்க விளைந்தார். பேச்சின் போது ரசிகர்கள் பகுதியில் பாடல் எழுதிய பாடலாசிரியர்களை அறிமுக படுத்தவில்லை என்ற சலசலப்பு எற்பட்டது. அதற்கு விவேக் பேட்டா நோட்டா என்று எண்ணணம்மோ சொல்லி மழுப்ப பார்த்தார் (இது எல்லாம் சினிமா அரசியலில் சகஜம் என்றா?) பின் சிங்கப்பூர் கவிஞர் பனசை நடராஜினை மேடையிலிருந்த யாரோ கேட்டுகொண்டதற்கிணங்க அறிமுகபடுத்தபட்டார். (சொல்லவேயில்ல உங்களுக்கு அம்னிசியாவா திரைபட பாடல் ஆசிரியர் யுகபாரதியை மறந்திட்டிங்களே) பனசை நடராஜன் கும்பகோணத்து காரர் நன்றாக வருவார் ஆனால் பனசை பழசை அதாவது சிங்கப்பூரை மறக்க கூடாது என்று குறிப்பிட்டு உரையை முடித்தார். சின்ன கலைவான் சார் ஒரு சந்கேதகம். கலைவாணர் என்.எஸ்.கே இப்படித்தான் பொது வாழ்க்கையிலும் இருந்தாரா. ஓளி ஓவியர் தங்கர் பச்சான் நகைச்சுவை நடிகர்கள் பற்றி அறிக்கை விட்டப்ப நகைச்சுவை நடிகர்கழுக்கு ஆதரவா கொதிச்சு எழுந்திங்களே. ஓ நீங்களும் நகைச்சுவை நடிகர் என்பதாலா . நடிகர் வையாபுரி ஒரு அறிக்கை விட்டப்ப நீங்களும் மறு அறிக்கை விட்டிங்க ஞாபம் இருக்கா. அப்ப ஒங்களுக்கு ஒன்னுனாதான் குரல் குடுப்பிகளோ. ஜஸ் அசோக் உடன் நடித்த படத்தின் பிரபலமடைந்த காமெடி வசனத்தை எப்படியிருந்த நான் இப்படியாகிவிட்டேன் சொல்லி கலகலப்பூட்டினார் (ஆமா சார் எப்படியிருந்த நீங்க இப்படி ஆகிட்டிங்க சககலைஞனை கை தூக்கி விட்டுவிடகூடாது அவனுக்கு கிடைக்க கூடிய அங்கிகாரத்தையும் குழிதோண்டி புதைத்து விட வேண்டும்). (என்ன பண்றதுப்பா வயசாயிடிச்சுலோ பின்னாடி திரும்பி பார்க்க முடியலைப்பா)
.

பின் வந்து பேசிய சரத் முயற்சிகளை பாராட்டி பேசி மாயக்கண்ணாடி படத்தில் நடித்தபோது அசோக் ஞாபம் வந்தது என்றும் திருட்டு விசிடியை தடுக்கவேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.(தோடா தீர்ப்ப தெரிஞ்சுகிட்டே எங்ஙகிட்ட வேண்டுகோள் விடுறத பாரேன் – பாரின் ரைட்சை நிப்பாட்ட முயற்சி பண்ணுங்க நாட்டாம அப்பத்தான் திருட்டு விசிடியை தடைபண்ணலாம்) ஜயா ஆட்டோகிராப் போடும்போது உழைப்பே உயர்வு என்று தான் போடுறிகளாமே விவேக் சொல்லித்தான் எனக்கு இல்ல விழாவல் இருந்த பலருக்கு தெரியும். நீங்க பேசுன மேடையிலே உழைத்ததற்கான உயர்வு கிடைக்கலியே ( நாட்டாமை ஆட்டோகிராப்ப மாத்திப் போடு)

மூவரின் பேச்சிலும் ஜஸ் அசோக் (இந்த இசை தட்டின் தாயரிப்பாளர்களில் ஒருவர்) பற்றி அதிகமாகவும் ஒரு சில இடங்களில் இசைஅமைத்த சிவரஞ்சனி பற்றியும் பேசினர். ஆனால் ஒருவரும் பாடல் எழுதிய திரைப்பட பாடலாசிரியார் யுகபாரதி மற்றும் சிங்கப்ப+ர் கவிஞர் பனசை நடராஜன் பற்றி துளியளவும் பேசவில்லை. நிகழ்ச்சியின் கடைசியாக பனசை நடராஜனுக்கு மேடையில் இருந்தவர்களில் யாரோ ஒருவர் கேட்டு கொண்டதற்கிணங்க நடிகர் சரத்குமார் பொன்னாடை போர்த்தி நினைவுபரிசு வழங்கி கவுரவித்தார்.

இந்த இசை தட்டு விரைவில் தமிழகத்திலும் வெளியட படுகிறது. (அப்பவும் பாடல் எழுதிய திரைப்பட பாடல் ஆசிரியர் யுகபாரதியை மறந்துடுவிங்கதானே!)

தனி மனிதர் துதி பாடல் எழுதிய பாடல்ஆசிரியர்கள் இருட்டடிப்பு என்ற மிகவும் சிறப்புமிகு நிகழ்வுகள் நடந்தாலும் சீன கலைஞர்களை கவுரவித்தது புதுமுங்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களின் திறன் அறிய வாய்பாக அமைந்தமையால் இசைதட்டு தாயரிப்பதாளரையும் விழா குழுவினரையும் மனம் பாராட்டவே விளை கிறது. மசாலா மனக்கட்டும்.

எழுத்து: பாண்டித்துரை


pandiidurai@rediffmail.com

Series Navigation

பாண்டித்துரை

பாண்டித்துரை