மின்மினி பூச்சிகள்

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்


மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். Fly என்பது ஈக்கள் வகையைக் குறிக்கும். அவை Diptera என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால் மின்மினி பூச்சிகள் ஆங்கிலத்தில் Firefly எனப்பட்ட போதிலும், உண்மையில் அவை ஈக்கள் வகை அல்ல. மாறாக, அவை Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில், உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.

மின்மினி பூச்சிகள் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்ிடு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விிடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்யேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிிடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். சுமார் 10-20 புழுக்களைப் பிடித்து ஒரு கண்ணாடிக் குழாயில் வைத்தால், நாம் தெளிவாகப் படிக்க முடியும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.

கன்னல் என்னும் கருங்குருவி

ககன மழைக்காற்றாமல்

மின்னல் என்னும் புழுவெடுத்து

விளக்கேற்றும் கார்காலம்

என்ற பாடலில், மின்னல் என்னும் புழுவென்று மின்மினி பூச்சிகளையே குறிப்பிிடுகின்றனர்.

பிறகு எல்லாப் புழுக்களும் கூட்டுப்புழுவாகி, குறிப்பிட்ட காலக்கெடுவின் முடிவில், முழு வண்டுகளாக வெளியில் வரும். அவ்வாறு வந்தவுடன், அந்த வண்டுகளும் அடிவயிற்றின் முடிவில் உள்ள மின்னும் விளக்குகளை ஒளிரத்தொடங்கிவிிடும். ஏனெனில், அவற்றின் இனப்பெருக்க சூட்சுமமே இதில்தான் இருக்கிறது.

அது சரி, விளக்கு ஒளிர மின்சாரம் எப்படி தயாரிக்கிறது என முதலில் பார்ப்போம்.

மின்மினி பூச்சிகள் மின்சாரம் தயாரிப்பது, ஒளிச்சேர்க்கைக்கு நேர்மாறான செயல் ஆகும். அதாவது, ஒளிச்சேர்க்கையின்போது, ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படும். மாறாக, மின்மினி பூச்சிகளின் மின்சார தயாரிப்பில் வேதி ஆற்றல் ஒளி ஆற்றலாக மாற்றப்படும். இதற்குப் பயன்படும் வேதிப்பொருள் லுசிஃபெரின் எனப்படும். மேலும், ஒளிச்சேர்க்கையின்போது CO2 வாயு எடுத்துக்கொள்ளப்பட்டு O2 வாயு வெளியில் விடப்படும். ஆனால், இங்கு O2 வாயு எடுத்துக்கொள்ளப்பட்டு CO2 வாயு வெளியில் விடப்படும். லுசிஃபெரின், ஒரு ATP மூலக்கூறுடன் சேர்ந்து, லுசிஃபெரேஸ் என்ற நொதியால் தூண்டப்பட்டு லுசிஃபெரில் அடினைலேட் ஆக மாறும். இந்த லுசிஃபெரில் அடினைலேட், பின்னர் ஒரு மூலக்கூறு O2 உடன் சேர்ந்து, oxidative decarboxylation மூலம் ஆக்சிலுசிஃபெரின் ஆக மாறும். இந்த நிகழ்வின்போது, ஒளி உமிழப்படுகிறது. அதுதான் நம் கண்களுக்கு தெரியும் ஒளி விளக்கு. இந்த ஆக்சிலுசிஃபெரின் சிதைந்து மீண்டும் லுசிஃபெரின் மற்றும் O2 ஆக மாறிவிடும். இந்த லுசிஃபெரின் மீண்டும் இன்னொரு சுற்று வினையைத் தொடங்கிவிிடும். எனவே மீண்டும் மீண்டும் ஒளி உற்பத்தி செய்யப்பட்டு, மின்மினி பூச்சிகள் விட்டுவிட்டு ஒளிர்கின்றன.

அது சரி, ஒரு மின்விளக்கு எரியும்போது மிக அதிகமாக சுடுகிறதே! அப்படியானால் ஒளி உற்பத்தி செய்யும் மின்மினி பூச்சிக்கு சுடாதா ? மின்விளக்கு எரியும்போது, சுமார் 10 சதவீதம் மட்டுமே ஒளி ஆற்றல். மற்ற 90 சதவீதம் வெப்ப ஆற்றலாகப் போய்விடும். ஆனால் மின்மினி பூச்சிகளில் 100 சதவீதமும் ஒளி ஆற்றலே! எனவே கொஞ்சம்கூட சூடே இருக்காது. ஆகவே இது Cold light எனப்படும்.

இந்த ஒளி உற்பத்தி எதற்குத் தெரியுமா ? Just இனப்பெருக்கம்தான். அதாவது, ஒவ்வொரு சிற்றினத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஒளிரும் முறை (Flash pattern) உண்டு. அதன் அடிப்படையில் ஆண்பூச்சி, பெண்பூச்சியை அடையாளம் கண்டு கொண்டு கலவி செய்யும்…. அவ்வளவே!!!

அது சரி, ஒரு பூச்சி ஏ.சிி. வைத்து, வாழ்க்கை நடத்துகிறதே!!!

அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா ? …. அடுத்த வாரம்!!

—-

amrasca@yahoo.com

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்