‘மின்தமிழ்’ உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள்

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

அறிவிப்பு


வணக்கம்

‘மின்தமிழ்’ உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள் – மின்தமிழ்.

தமிழில் இதுவரை இல்லாதிருந்த சொற்பிழைத் திருத்தி, சொற்பிழைச் சுட்டி, தமிழ் இலக்கணச் சுட்டி(எழுத்ததிகாரம்) ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரே தமிழ் மென்பொருள் மின்தமிழ் மென்பொருள் ஆகும்.

23 இலட்சம் தமிழ் வார்த்தைத் தொகுப்புகள் உள்ளடங்கியது.
அனைத்து வகை எழுத்துருக்களிலும் சொற்பிழைகளைக் கண்டறியும் வசதி கொண்டது.
அனைத்து வகை விசைப்பலகைகளையும் ஆதரிக்கும்.
தட்டச்சு செய்யும் போதே சொற்பிழை மற்றும் இலக்கணப்பிழைகளைக் கண்டறிந்து அதற்கான சரியான (அ) நிகரான தமிழ் சொற்களைக் காட்டும் வசதி.
தட்டச்சு செய்து முடித்தவுடன், அதுவரை தட்டச்சு செய்ததில் நிகழ்ந்த சொற்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் அறிக்கையாக பார்த்து திருத்திக் கொள்ளும் வசதி.
ஒரு நொடிக்கு 80 முதல் 120 வார்த்தைகள் வரை சொற்பிழை கண்டறிதல்,இலக்கணப் பிழை கண்டறிதல், சொற்பிழைக்கான திருத்தங்களை காண்பித்தல் ஆகிய பணிகளை வேகமாக முடிக்கும் கட்டமைப்பு கொண்டது.
அனைத்து மென்பொருள்களிலும் பணி செய்யும் வகையில் கட்டமைக்கப் பட்டது. (உதா: Microsoft Office Word, Microsoft Office Excel, Microsoft PowerPoint, Micorosoft Office FrontPage,Adobe PageMaker,Adobe Photoshop, Adobe inDesign, Adobe Illustrator, Corel Draw, Microsoft Internet Explorer, Mozilla FireFox, Apple Safari, Opera, MSN Messenger, Yahoo Messenger, Corel WordPerfect போன்ற அனைத்து வகை மென்பொருள்களிலும் நேரடியாக பணிபுரியும்.
மேலும் விபரங்களுக்கு: Http://Tamil.Sarma.co.in/

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு