மிச்சமிருக்கிறாய்..

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

கற்பகம் இளங்கோவன்


—-
நான் காண்கின்ற அத்தனையிலும் நீ மிச்சமிருக்கிறாய்..
உன்னைப் போன்றே உயரத்தில் ஒருவர் கடந்து போகையில்.
அதே போன்ற தலைமுடியோடு யாரோ விரைந்து போகையில்.
எதையோ நினைவுபடுத்தும் உரையாடல்கள்.
அதே போன்று மனதைத் தைக்கும் புன்முறுவல்கள்.
ஒரு சில வார்த்தைகள்
ஏதோ ஒரு செய்தி
ஒரு பழைய கடிதம்.
உனக்குப் பிடித்த நிறம்
நீ விரும்பி உண்ணும் உணவு.
நீ நின்ற இடம்
உனது தோற்றம்…
அந்த பார்வை
மூச்சின் ஈரம்…
கையசைப்பும்
அரவணைப்பும்.
பகல் வெயிலில் நம்முடன் நடந்த நிழல்களிலும்
எட்டிப்போகும் ஒவ்வொரு நிமிடத்திலும்…
நான் காண்கின்ற அத்தனையிலும் நீ மிச்சமிருக்கிறாய்.
எனக்குள்ளே இன்னும் உன்னை விட்டுவைத்திருக்கிறாய்.
—-
karpagamelangovan@yahoo.com

Series Navigation