மாலை
சுமதி ரூபன்

கூட்டத்தின் நடுவே
கழுத்தோடு கைகொழுவி
முதுகோடு முகம் சாய்த்து
மோகித் துவழ
மெல்லக் கை விலக்கி
வெகுதுாரம்
அகன்று
விழி
தவிர்த்து
பல மணிகள்
வீணே தொலைய
கனக்கும் நெஞ்சை
வாஞ்சையுடன் கடிந்து
கண்ணீர் துளியை
வரிந்து உள்ளடக்கி
துாரப்புள்ளியாய்
உன் உருவம்
தேடி
களைத்து
வெறுமனே விழ
இன்னுமொரு மாலையில்
உன் மேல் பொதியான
காதுக்குள்
முணுமுணுத்தாய்
‘வீணாய் எதற்காக ?
அவலாய் அரைபடுவோம் ‘
சுமதி ரூபன் கனடா
—-
ssmith@ieccan.com