மாமா ஞாபகங்களுக்காக

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

அலறி


நீ ஒளியிழந்தபோது
ஒரு கோடி நட்சத்திரங்கள் உதிா;ந்தன
உன் தோப்புக் குயில்கள்
குரலொடிந்தன.

கடலெனக் கிடந்தாய்
செல்வங்கள் கொட்டி
சமுத்திரமென பறந்தாய்
உன்னை நம்பிய
எங்கள் ஓடங்கள் கரை சோ;ந்தன
குடும்பக் குயில்கள் பாட்டிசைத்தன.

அதிகாலை போலவே
அன்றும் நீ
சிாித்துக் கொண்டுதான்
கடல் வாய்க்குள் போனாய்
கயல்மீன்கள் தேடி
திரும்பாத சேதி தொியாமல்

அந்திக் கருக்கல் வரைக்கும்
உன் குளத்துக் கொக்குகள்
ஒற்றைக் காலில் நின்றன.

நீ
உயிருடன் திரும்புவாயென
ஆறு கடல் நீந்திக் கடந்தவன்
ஏழு மலைகள் ஏறிக்குதித்தவன்
நீயென்பதால்.

உச்சிவெயில் கொழுத்திய
மறுபொழுது
நீ மீட்கப்பட்டாய்
ஓடைக்குள்ளிருந்து
கொடுகிய கோழி;க்குஞ்சுபோல
உன்வெற்றுடல் கண்டு
செம்பூக்கள் கதறின
வண்ணாத்தி பூச்சிகளும் பதறின.

ஆழிப்பேரலைக்குள் அகப்பட்டு
மூச்சடங்கும்போதும்
கண்ணுக்குள் வைத்து
காக்கச் சொன்னாய்
கண்மணி மகளையல்லவா
மாமா!

அலறி, இலங்கை

Series Navigation

அலறி

அலறி