மானுட பிம்பங்கள்
ஷம்மி முத்துவேல்

உருகி
கரைந்து
ஒழுகியது
வாழ்க்கைத் திரவம்
வருடங்களின் பின்னணியில்
அலட்டலாய் பயணம்
பின்னூட்டமாய்
அலுப்பும் சலிப்பும்
வரையறுக்கப்பட்ட நியதிகளின்
கோட்பாடு வல்லூற்றின் பார்வை கொண்டு
விதிகளாய் திணிக்கப்பட்ட
இருட்டுத் தத்துவம்
காற்றின் திசை மாற்றப்பட
லயம் தப்பிச் சுழன்றது
பூமிப் பந்து
நழுவிய தரையில்
நட்சத்திரங்கள் மிதி பட
எரிகோள்கள் சீற்றம் கொண்டன
திரவம் பற்றி எரிந்தது
தீ நாக்குகள் வெளியேற்றியது
பல்வேறு
மானுட பிம்பங்களை