மானுடம் வெல்லும்!

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

பிரியா ஆர்.சி.


வாகன நெரிசல் மிகுந்த சாலை
கடக்கையில் தானாய் அருகிருக்கும் நபர் பற்றும் கை
மொழி விளங்காத மழலைப் பேச்சு
கேட்கையில் தானாய் முகத்தில் வரும் மலர்ச்சி
மரண பயத்திலும் மழலை மொழியிலும்
பார்ப்பதில்லை நாம் சாதி மதம்!

தொடக்கத்திலும் அடக்கத்திலும் இல்லாத ஒன்று
இடைப்பட்ட காலத்தில் எதற்கு ?

வேற்றுமையை விடுங்கள் வருத்தங்கள் குறையும்
சகோதரராய் நினையுங்கள் சந்தோஷம் பெருகும்
மனிதராய் மதியுங்கள் மானுடம் வெல்லும்!

***
rcpriya@yahoo.com

***

Series Navigation

பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...