மாண்டு விட்ட கனவுகள்….

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

தினேசுவரி, மலேசியா


வெப்பம்
தாளாமல்
மாண்டு
கொண்டிருந்த
என் கனவுகளை
பத்திரப்படுத்த
நகரத்தை விட்டு
ஓடிக்கொண்டிருந்தேன்
ஒரு விடியல்
பொழுதில்…

தன் இறுதி
நேரத்தை
கண்ணீர்
துளிகளில்
நிரப்பிக்
கொண்டிருந்த
என் கனவுகளோடு
நானும் அழுது
வைத்தேன்
செய்வதரியாது…

நகரம்
வேண்டாம்
என
எதனையோ
முறை முறையிட்ட
என் கனவுகளுக்கு
நான் செவி
சாய்த்ததில்லை
ஒருபோதும்…

நகரம்
சொல்லும்
வேதங்களை
மட்டுமே
கண்டு கனவுகளைக்
கொன்றேன்..

நகர
விளும்பில்
என் தாயைத்
தொலைத்து
இறுதி சடங்கில்
போய்
சேர்ந்த
நினைவுகள்
அரித்துக்
கொண்டிருந்தன
கனவுகள்
முனகும்
இத்தருவாயில்…

இருந்தும் நகரத்தில்
சேர்த்த
பணத்தைக்
கொண்டு
நிவர்தி
செய்துக்
கொண்டேன்
‘கருமாதி’ யில்…

என்னுள்
தெளிவு
என்
கனவுகள்
இறப்பதற்கு
முன்பாகவே
புதைத்து விட்டு
நடந்தேன்
நகரத்தை நோக்கி…..
தினேசுவரி, மலேசியா

salthana82@yahoo.com.my

Series Navigation

தினேசுவரி,மலேசியா

தினேசுவரி,மலேசியா