மவுனம் பயணிக்கும் தூரம்
Published April 25, 2010 • By
ரசிகன்
ரசிகன்

விரல்களின்
இடுக்குகளில் ஊடுறுவியவாறு
கடந்து செல்கிறது சாலை…
ஒருபுறம் அவளும்
மறுபுறம் நாணமுமென
வாய் மொழிகளுக்கு வழி கொடுக்காது
அடைத்து செல்ல முயன்றபடி காதல்!
விழிகளின் பார்வைகளினூடு
புரிதலும் புணர்தலும்
பக்குவப்பட்டு பேசிக்கொள்ள
ஒரு வழியாய்
பற்றிக்கொண்டாள்
அழுத்தமாய் ஐவிரல்களை…!
மஞ்சம் அடைந்த மிகுதியிலும்
பேச வார்த்தை கிடைக்காது
மௌனம் மட்டுமே பயணிக்கிறது
விரல்கள் விடுபடும் தூரம் வரையில்!!
-ரசிகன்
பாண்டிச்சேரி