மழை நாள்

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

எல்கே


காற்றோடு
மழையும் சேர தொடங்கியது
கூட்டணி ஆட்சி – சில
சமயம் பொருந்தா
கூட்டணியாய் வலுவிழந்து
போனாலும் இன்று
காட்டியது அதன் சர்வாதிகாரத்தை !!!

இடி முழக்கம்
பின்னணி இசை
அமைக்க – தவளைகள்
கானம் பாட – காற்றின்
தாளத்துக்கு மரங்கள் ஆட – இயற்கை
அன்னையின் தாண்டவம் !!!

இயற்கையோட கூட்டணி
அமைக்க மின்சாரமும்
சென்று விட – ஜன்னலோரம்
அமர்ந்தேன் – ரசித்துக்
கொண்டே படிக்கத் துவங்கினேன்
வெகு
நாட்களாய் தொடாமல்
இருந்த புத்தகத்தை – நன்றி
சொல்ல வேண்டும் மழைக்கு
இதற்காகவாது !!!
– எல்கே

Series Navigation

எல்கே

எல்கே