மறு வாசிப்பில் திருப்புகழ்

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

மாலதி


____

ஏழு எட்டு வயதுகளில் நான் திருப்புகழ் வகுப்புகளுக்குப் போகலானேன். மற்ற பசங்களைப் பெற்றோர் கொண்டுவந்து சேர்ப்பார்கள். நான் சுயம்பு. லிங்கிச்செட்டித்தெருவில் ஒரு இருட்டு வீட்டில் கந்த ச ?டிக் கொண்டாட்டத்துக்குப் போய் ,எந்த நிமிடமும் விழுந்து விடுவது போலிருந்த , மயில் ஊஞ்சல் முருகனுக்காகக் கவலைப்பட்டு, அங்கு கிடைத்த பிரசாதக் கூறுகளாலும் ரமணி அய்யரின் பாசாங்கு களைந்த லெளகீகத் தன்மைகளாலும் கவரப்பட்டு திருப்புகழ் வகுப்பில் சேரத்தீர்மானித்தேன்.

சேர்வதெல்லாம் ஒன்றுமில்லை. போய் உட்கார்வது தான் சேர்வது. தம்புச்செட்டித்தெரு காளியம்மன் கோயில் கந்தனின்[ ‘வடகதிர்காமன் ‘ என்று மாமாவால் உரக்க அழைக்கப் படுகிறவனின்] சன்னிதியில் எங்களுடையது பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் பெண்கள் வகுப்பு. மாமா[ரமணி] தான் வேறு. அது எங்கள் கவனத்துக்கு வந்ததேயில்லை. வகுப்புக்கு வந்த பெண்ணைக் ?கையைப்பிடித்து இழுத்து அப்புறம் கல்யாணமும் செய்துகொண்டதாக அவருக்கு அவப்பெயர். அவர் செய்த ஒரே உருப்படியான காரியம் அது என்று என் பத்தாவது வயதுக்கே தெரிந்து விட்டது.

மாமா பாரி அண்ட் கோவில் வேலை பார்த்து வாய் நிறைய வெற்றிலை சீவலும் , ‘ராம்பவான் ‘ சிற்றுண்டியும், பெரிய குங்குமம் துலங்கும் நீற்றுப் பட்டையுமாய் [குடுமிகூட] சம்பாதிப்பதை செலவழிப்பதிலேயே குறியாயிருப்பார். அவர் துர் செலவுகள் விபூதிப்பொட்டலமாகவும் தயிர்சாதமாகவும் வாய்த்தன. அள்ளிக் கொடுப்பார்.

பிராகாரத்தில் ?ால்ரா சத்தத்தோடு உரக்கப் பாடுகையில் ‘பாப் ‘ என்று கத்தி சபையில் மெளனம் கொண்டு வந்து செய்திகள் சொல்வார்.

இடையில் சாம்பசிவக்குருக்கள் முதுகில் படாரென்று ஒரு அடி வைத்து ‘கூன் போடாதேடி ‘ என்று சொல்லிக்கொண்டே போயிருப்பார்.[என்னைத்தான்]

திருப்புகழில் என்னை ஈர்த்தது தமிழ் என்று பலகாலம் அறியாதிருந்தேன். படி விழாக்களிலும் உஞ்ச விருத்திகளிலும் பைத்தியக்கார ஆ ?பத்திரிகளிலும் பாவாடை தாவணியோடு பாடியது தயிர்சாதத்துக்காக என்று திடமாக நம்பியிருந்தேன்.

என் ஓடுகாலிக்கால் ஊன்றின தினங்களில் அருணகிரியை வியந்திருக்கிறேன், அவர் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப் பட்டாரில்லை என்றாலும்.

அருணகிரியிடம் ஒரே பாடுபொருள். ஒரே முறைப்பாடு தான். அவர் பாடலின் முதல் பகுதி சிற்றின்பக் கசண்டு திகட்டிய புலம்பல், இடையில் ஒரு பரந்த விடுபாடு. முருகனை வரச்சொல்லி அருள் தரச்சொல்லி அதே மூச்சில் அனுபவ அனுபூதி வெளிச்சத்தைச் சொல்லி விடுவார். இறுதிப் பகுதி வரலாறு, புராணம் ஒட்டிய ஒரு செய்தியோடு இயற்கை வியத்தல் கூடி முருகன் புகழில் முடியும்.

அவருக்குத்தமிழ் வார்த்தைகள் கிடைக்காமல் போய் வடமொழியை அண்டவில்லை அவர். அந்த காலகட்டத்துப் புரிதலுக்கு ஏற்றாற்போல் எதுகை மோனைக்கும் இறுக்கத்துக்கும் உதவுகிற வகையில் தான் மணிப்பிரவாளத்தை உபயோகப் படுத்தினார்.

அருணகிரி அண்மைகாலத்தவர் ஆனதால் அருமை தெரியவில்லை. அதிகம் அவரை இலக்கியக் கர்த்தாக்கள் எடுத்துப் பேசவில்லை.

அவர் காலத்தில் துறவு கொஞ்சம் கவர்ச்சிகரமாக்கப் பட்டிருந்திருக்கிறது.ம ?ாவீரரின் நிர்வாணம் வியக்கப்பட்டது. பட்டினத்தாரும் போகங்களை வெறுத்துப் பேசினார். அப்படியே தானும் சொல்லிப் பார்க்கலாம் என்ற எண்ணம் வலுத்திருக்கலாம்.

அல்லது அவருடைய சுயவரலாற்றுக் கூற்றின்படி அவர் சிற்றின்பத்தின் நாட்டம் நோயில் முடிந்து விரக்தியின் காரணமாகவும் நிராசை பேசியிருக்கலாம். புலம்பலில் ஆரம்பிக்கும் பாடல்கள் மத்தியில் ஒளிக்கீற்றுடன் அடுக்கி அடுக்கி அலையிடும் செறிந்த இசையில் கொந்தளிக்கக்கூடிய எழுச்சி வரிகளாலே முடிவு பெறும். முழு வாசகனுக்கு மட்டுமே திருப்புகழ் வெட்ட வெளிச்சமாகும்.

பக்தி இலக்கியங்களை எல்லாம் பக்தியில்லாமல் படிப்பது என் வழக்கம் ஆதியிலிருந்தே. அப்படிப் பார்க்கும்போது அருணகிரியில் பெரிய முரண் என் கண்ணில் படும். ‘மங்கைமார் கொங்கைசேர் அங்க மோகங்களால் வம்பிலே துன்புறாமே ‘ என்று தனக்கு பிரார்த்தனை செய்து கொள்கிறார். ‘ஒன்று அம்பொன்று விழி கன்று அங்கம்குழைய உந்தியென்கின்ற மடு விழுவேனை ‘ என்று தன்னை நொந்து கொள்கிறார்.

இவர் ‘பகலிரவெனாது கலவிதனில் மூழ்கி ‘ அழிந்தது நி ?மென்றால் இவருடைய முருகன் மட்டும் ‘இன்பான தேனிரச மார்முலை விடாத கர மணிமார்பன் ‘ ஆகலாமா ?

‘பெண்கள் நட்பைப் புணர்ந்து பிணியுழன்று சுற்றித்திரிந்து ‘ வாடுகிற அருணகிரி முருகனை ‘சுந்தர ஞான மென் குற மாது தன் திரு மார்பிலணைவோனே! ‘ என்று அழைக்கலாமா ? ‘மாது மணக்கும் மார்பா ‘ என்று வியக்கலாமா ? ‘

மருகன் மட்டுமில்லை மாமன் மார்பிலும் பெண் வாசனை தான்.திருமகள் புழங்குகிற இரு புயங்களை வி ?ணுவுக்குச் சொல்கிறார். ‘திருமகளுலாவு இருபுய முராரி ‘ என்று.

அவருடைய முருகன் ‘கொடிச்சி குங்கும முலை முக ‘ட்டில் அழுந்தி ‘வள்ளியை வந்தித்தணைத்து ‘ அவளைச் ‘செங்கரங்குவித்துக்கும்பிட ‘லாமாம். இவர் மட்டும் ‘வாதினை யடர்ந்த வேல் விழி ‘எங்கே குத்திவிடுமோ, தொப்புள் என்கிற மடு எங்கே வீழ்த்தி விடுமோ என்று பயந்து ஓட ஓட இவரைத் துரத்திக்கொண்டு ‘ஏவினை நேர் விழி மாதர் ‘ அதாவது பில்லி சூனியக்காரிகள் இவரைப் பிடித்து அனுபவித்து இவருக்கு ‘வாதமொடு சூலை கண்டமாலை குலைநோவு சந்து மாவலி குன்மமொடு காசம் வாயுவுடனே பரந்த தாமரைகள் ‘ இன்ன பிற பாதக வியாதிகளைப் பரிசளித்துவிட்டார்களாம். படுவேகமாக வியாதிவரிசைகளைச்சொல்ல அருணகிரியை விட்டால் ஆளில்லை. என்கவலையெல்லாம் தேவயானை வள்ளியோடு ஓயாத சர ?த்தில் இருக்கும் முருகனுக்கு வியாதி லி ?ட்டில் ஆரம்பகட்டமாவது வந்து வைத்தால் அருணகிரிக்கு வருத்தமாகுமே என்பது தான்.

அடுத்து நம் கவிஞரின் மனப் பள்ளம் மரணம் குறித்து. இப்படியா மரண ப்யம் வைத்திருப்பது ? இவர் மரணம் குறித்த பல கற்பனைகளுடன் வரிகளை அடுக்கிக்கொண்டே போவது வேடிக்கையாயிருக்கும். ‘அந்த மறலியொடு கந்த! மனிதன் நமதன்பனென மொழிய வரவேணும் ‘ என்பார். ‘இவன் நம்மாளு, பார்த்துக்க ‘ என்று யமனிடம் வந்து இவருடைய முருகன் சொல்ல வேண்டுமாம். அப்படியே ஆயி அழ, அப்பா அழ, மாமா மாமி, தாத்தா பாட்டி, பெண்டு பிள்ளை எல்லாம் அழ ‘ தான் மலம் ஒழுக யமனால் இழுபட்டுச் செல்வதை முன்கூட்டிக் கற்பனை செய்து மீண்டும் மீண்டும் எழுதுவார். அப்போதெல்லாம் மயிலின் முதுகிலேறி முருகன் இவரைக் காப்பாற்றவேண்டுமென்பார்.

முருகனைச் சேர்த்துத் தானே காப்பாற்றுமளவுக்கு உச்சகட்ட உள்ளொளியை நம் கவிஞர் குவித்து வைத்திருந்ததைப் பல இடத்தில் காட்டுகிறார்.

உனை எனதுளறியும் அன்பு, புத்தியில் உறைபவர், ஆசைப்பாடைத்தவிர், ஞானங்கள் பொறிகள் கூடல், அறிவை அறிவாலறியும் நிறைவு, வான் இந்து கதிரிலாத நாடு, கல்லா மனத்துடன் நில்லா மனத்தவக் கண்ணாடி, இச்சையுணர்வின்றி இச்சையெனவந்த , நீ வேறெனாதிருக்க நான் வேறெனாதிருக்க, முத்தரித யாக மலமதனில் விளையா நின்ற சுயபடிகமாவின்ப பத்மம்,நாள் போய் விடாமல் ஆறாறு மீதில், நூலடங்க ஓத வாழ்வு, சிந்தையுமவழ்ந்தவிந்து உரை ஒழித்து என் செயலழிந்தழிந்தழிய மெய்ச் சிந்தைவர, ஓவியத்திலந்தமருள், முழுதுமலாப் பொருள் தரு, …. இப்படியெல்லாம் இயல்பாகப் பெரிய வி ?யங்களைச்சொல்லிவிடுவார்.

மயிலையும் மலையையும் முருகன் அழகையும் கொண்டாடுவது சில கோடி யிடங்களில். அவருடைய பாடலில் மாங்கனி உடைந்து தேங்கிய வயலில் மாண்பு நெல் விளையும். மதியும் கதிரும் தடவும்படி வங்கள் உயரும். கொழுங்காவின் மலர்ப் பொழிலில் கரும்பாலை இசை புணர்க்கும். கோடாமல் ஆரவார அலையெறி காவேரியாறு பாயும் வயலியில் கோனாடு சூழும்.

பயங்கரமான தமிழ்ப் பற்று மனிதருக்கு. ‘கனத்த செந்தமிழால் நினையே தினம் நினைக்க ‘ என்பார். முந்து தமிழ், ஓது முத்தமிழ், தண்டமிழ், செந்தமிழ் என்று உருகிப் போவார்.

பதின் வயதுகளில் ‘என் காதல் மாலை முடி ஆறுமுகவா ‘ என்கிற வரியையும் பின்னாள் தனிமைகளில் ‘தனியவர் கூரும் தனி கெட நாளும் தனி மயிலேறும் பெருமாளே! ‘ வரியையும் பாடி வந்திருக்கிறேன்.

தூக்கங்களிஉல் எழுந்து திருப்புகழில் இடறுவதுண்டு.

கடைசியில் இந்து விசுவாசிகளுக்காக ஒரு வார்த்தை. ‘மினலனைய இடை மாது இடமருவு குருநாதன் ‘ என்பது போன்ற வரிகளில் ஆண்டவன் குறத்தி உறவில் ஈடுபட்டிருப்பதாகச் சித்தரிப்பதில் சூட்சுமம் இருக்கிறது. இந்து மதத்தின் கடவுளரே பூடகங்கள். சில கோட்பாடுகளின் குறியீடுகள். அப்படி விரோதிகளை அழிக்கிற சேனாபதி முருகன். அவன் மனைவி மாரும் குறியீடுகள். சம்ப்ரதாயமும் அசம்ப்ரதாயமுமான மனைவிமார். [convention and non convention in warfare]

நிறைய பாடல்களில் வள்ளியைப் பரிந்து பாடுவதும் தன்னையே வள்ளிபோல பாவித்துக் காப்பாற்றக் கெஞ்சுவதும் [விதியதாகவே, விறல்மாறனைந்து- திருப்புகழ்] அருணகிரி அசம்ப்ரதாய முறையில் ஆன்மீகத்தேடல் கொண்டதையே குறிப்பதாகும். இதெல்லாம் நான் ஆன்மீக மேடைகளில் சொல்லும்[அலட்டும் ?] வி ?யங்கள்.

நி ?த்துக்குள் பூடகமும் பூடகத்தில் வாழ்வியலும் மாற்றி மாற்றி வெளிச்சம் காட்டுவது நம் மதத்துக்கும் இலக்கியத்துக்கும் ஒத்த குணங்கள். அதனால் தான் தத்துவப்பாடல் என்று திருப்புகழை அடையாளம் கண்டவர் போல இரு மடங்கினர் அதை முழு போர்னோ என்று சொல்பவராயினர்.

எனினும் பின்வரும் புதுக் கவிதையை எழுதியது அருணகிரி என்று நூறு சத்தியம் செய்ய வேண்டியதிருக்கும்.

‘என்னால் பிறக்கவும் என்னாலிறக்கவும்

என்னால் துதிக்கவும் ….

என்னாலழைக்கவும் என்னால் நடக்கவும்

என்னால் இருக்கவும் ….

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்

என்னால் சலிக்கவும் ….

என்னலெரிக்கவும் என்னால் நினைக்கவும்

என்னால் தரிக்கவும் ….

இங்கு நான் யார் ? ‘

—-மாலதி[விருட்சத்தில் பிரசுரமானது)

malathi_n@sify.com

Series Navigation

மாலதி

மாலதி