This entry is in the series 20031010_Issue

மோகனா.


திருமணம் முடித்து,
புது மஞ்சள் வாசத்துடன்,
புகுந்த வீட்டில்..
புதுத் தாலி, புது மக்கள் எனப் புதிராய்
எதுவும் புரியாமலே புழுங்கி விட்டு,
நம் வீடு, நம் மக்கள் என நாடி வந்தால்,
வாசலிலேயே வரவேற்ற தந்தை,
குசலம் விசாரித்த அத்தை,
தள்ளி நின்று சிரித்த தங்கை,
உன் வீட்டில சவுக்கியமா ? என்ற அன்னை,
தட்டியில் எட்டி நின்ற நாய் குட்டி,
என எல்லாம் புதிதாய்,
மறுவீடாய் மாறுதலுடன் தாய் வீடு..!!

******

MohanaLakshmi.T@in.efunds.com

Series Navigation