மறக்கமுடியவில்லை

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

வேதா


அழுகிறது இதயம்
ஆறுதல் சொல்லவில்லை நான்….

என் அழுகுரல் கேட்டு,
மரத்துக்கு மரம்
உச்சிக்கிளை கூடுகட்டி
குஞ்சுகளின் ஒப்பாரி……

சொட்டுச் சொட்டாய்
செத்துப்போகும், உனக்குள்
சிறைபட்ட என் பிம்பம்!!

சொல்லில் அடங்கா சோகம்
சொல்லியழும், என் நரம்பு நுனி….

விழிப்பார்வையின் வீச்சுக்குள்
விசிறி வீசிப் பார்க்கிறேன்,
காற்றின் ஒலிஅலையில்
குரலதிர்வைத் தேடுகிறேன்,

மறக்கமுடியவில்லை…..
என்
மனசெல்லாம் பூத்த மல்லிகையை!!

பழுத்த இலைகளுக்குப்
பச்சையம் இருக்காதே!
துன்பம் தூண்டியதோ ?
துளிரெல்லாம் உதிர்த்து,
துறவாய் நிற்கிறது….

வசந்த ருதுவெல்லாம்
விசித்து விசித்து, தன்
வாசனை தொலைக்கிறது!

உன்
பாராமுகமும், பேசாமொழியும் – என்னைப்
பைத்தியம் செய்கிறது!!

சின்ன விழியில் சிறுநதி,
என்னைச்
சேதாரம் செய்திடுமோ ?

அழுகிறது இதயம்
ஆறுதல் சொல்லவில்லை நான்….

piraati@hotmail.com

Series Navigation

author

வேதா

வேதா

Similar Posts