மருந்து
சித்தார்த் வெங்கட்

யான் பெரியோன்
என்னினும் சிறியதிவ் வையம்
வையத்துலோர் யாவரும் அஃதே
பதர்களிடை நெல்மணி நான்
கடவுள் என்பது மாயை
என்செயல் யாவிற்கும் யானே ஆசான்
எனப்பல எண்ணங்கள் என்னுள் தோன்றி
அகந்தை சிறையெனை ஆட்கொளும்போது
கடல் பார்த்தல் நன்று.
***
siddhu_venkat@yahoo.com