மரபணு மாறிய.

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

பவளமணி பிரகாசம்


விஞ்ஞானம் கண்டது வளர்ச்சி
விவசாயத்திலோர் புது முயற்சி
விதை நெல் விளையாத பயிர்
மரபணு மாற்றி அபரித மகசூல்-
மனிதப்பயிரும் காணுது புரட்சி
கண்ணும் கூச புலரும் மலர்ச்சி
திமிறும் இளமை திறந்து கிடக்க
தேனூறும் மலரை பலகண் மொய்க்க
தொப்புள் வளையத்தில் சிக்க வைத்து
கிறுக்காய் ஆணினம் சுற்றிய பின்னர்
மரபணு மாறிய மரத்துப் போன
மங்கையர் அழகாய் சொல்வது
வேறென்ன ? ஒரு “பெப்பே!”!
வியக்காதே உலக சிற்றுருண்டையே!

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation