அனந்த்
என்றும் மனம்தள ராதே! – உனக்கு
…என்னால் வரும்தொல்லை எண்ணிஓயா தே (என்றும்..)
கோடிப் பிறவியாய்ச் செய்த- பிழை
… கோபுரம் போலக் குமிந்தென்னை எய்த
ஆடிநான் சாய்வதில் என்ன – பெரும்
…அதிசயம் ஆகையால் அன்றுநீ சொன்ன
வார்த்தை நினைவினில் கொண்டு – உன்னை
… வந்தடைந் தால்நீயோ வாய்மூடிக் கொண்டு
சோர்ந்து கிடக்கின்றாய் இன்று – நான்
… செய்திட்ட பாவத்தைக் கண்(டு)ஐயோ என்று
அஞ்சி நடுங்கிட லாமோ ? – நீயும்
… அற்ப மனிதர்போல் ஆகிடப் போமோ ?
கொஞ்சம் மனத்தினைத் தேற்று – என்றன்
… குறைகளை உன்னிரு காதினில் ஏற்று
ஆனை முதலையும் கூட – முன்னம்
… ஆற்றிய பாவத்தைத் தூக்கிநீ போடப்
போன கதைநெஞ்சில் எண்ணு – ஒரு
… போக்கற்ற என்மேல் தயவினைப் பண்ணு
வாழ்வினில் துன்பத்தைக் கண்டு- உன்றன்
… வாசலில் நிற்பவர் கோடியாய் உண்டு
தாழ்ந்துன்னைச் சார்ந்திடும் போது – அவர்
… தாபம்தீர்க் காவிடில் வந்திடும் வாது!
போட்டி உனக்கெவ ருண்டு ? – உன்றன்
…புகழை நிலைநாட்ட என்துணை கொண்டு
காட்டுஉன் வீரத்தை இன்று – நீ
… கடவுள்என் றால்என்னைக் காப்பாற்றல் நன்று! (என்றும்..)
ananth@mcmaster.ca
- கோழிச் சண்டையும், சந்தைக் கடையும்
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]
- நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘
- உயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- தன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து
- உயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)
- இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்
- அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்
- யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்
- குறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு
- சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)
- கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?
- மடந்தையொடு எம்மிடை நட்பு
- காற்றாடி
- காதல் காதல் தான்
- ஆனாலும்…..
- சூழலைக் கெடுக்கும் ஊழலர்கள்
- முதல் சந்திப்பு
- என்னம்மா அவசரம் ?
- ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!
- சின்னச் சின்னதாய்…
- இது உன் கவிதை
- பைத்தியமானேன் வைத்தியமுண்டா
- மனம் தளராதே!
- காதலுடன் ஒரு சொற்றாடல்
- கரடி பொம்மை
- அரியும் சிவனும் ஒண்ணு
- என் கவிதைக்குக் காயமடி!
- ஒரு சொட்டு இரும்பு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு
- விடியும்! நாவல் – (6)
- கடிதங்கள்
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- பசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்
- சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2
- அரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்
- வசிட்டர் வாக்கு.
- ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்
- வாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)
- தேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல
- போராடாதே … பிச்சையெடு
- ஆசி
- பெண்ணே
- தவறிய செயல்கள்
- சார்புநிலைக் கோட்பாடு
- அரசியல்
- வெண் புறா
- என் ஜீவன் போகும்…