மனசாட்சி விற்பனைக்கு

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

பி. பகவதிசெல்வம்



சாலை விபத்தொன்றில்
இறுதி மூச்சும்
இன்னும் சில நிமிடங்களில்
இறங்கி விடலாம்
இறப்பிற்கான
கடைசி தருணங்களில்
ஏங்கி தவிக்கும்
ஓர் உயிர்
உதவலாம் என்றாலும்
உபத்திரம் நேருமோ
அச்சத்திலே
அகன்று விடும்
நமக்கெதற்கு
மனசாட்சி !

சராசரி மனிதனாக கூட
சக மனிதனிடம்
நேசம் மறுக்கும்
நமக்கெதற்கு இந்த
நாசமாய் போன
மனசாட்சி !

நம் இயலாமைகளுக்காக
வருந்த மறந்த நாம்
இயல்பாக வாழ்வதாய்
நம்மையே
ஏமாற்றி வாழும்
நமக்கெதற்கு
இந்த மானங்கெட்ட
மனசாட்சி !

பொய்யான புன்னகையும்
போலியான வார்த்தைகளும்
நம் பிழைப்பென
ஆண பின்
இருந்தென்ன
இறந்தென்ன
மனசாட்சி …!

Series Navigation