பல்பீர் கே புஞ்ச்
அழுவதா சிரிப்பதா ? வரலாற்றுச் சிறப்பு மிக்க தண்டி யாத்திரையின் 75 வருட விழாவின் காரணமாக மகாத்மா காந்திக்கு நாடு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி பல்கலைக்கழகப் பிரிவு பரிந்துரைக்கும் புத்தகம், காந்தியை ‘இந்து வகுப்புவாதத்துக்கு ‘ துணை சென்றவராக காட்டி அதன் மூலம் பிரிவினைக்கு வித்திட்டதாக குற்றம் சாட்டுகிறது. இந்த புத்தகத்தை எழுதியவர் ஜகூர் சித்திக்கி என்ற இடதுசாரி. இதுவே அவரது உள்நோக்கத்தை நன்கு வெளிப்படுத்துகிறது. காந்தியின் மதச்சார்பின்மை பற்றிய கொள்கைகள் ‘அறிவியற்பூர்வமற்றவை ‘ என்றும், அதனாலேயே முஸ்லீம் மக்களிடையே அது பிரபலமாகவில்லை என்றும் கூறுகிறார்.
முஸ்லீம்களிடையே இருக்கும் மாபெரும் பகுத்தறிவுச் சிந்தனைக்கும், அறிவியற்பூர்வமான வாழ்க்கை முறைக்கும் காந்தி ஈடு கொடுக்கவில்லை என்று கருத்தை இது முன்வைக்கிறது. இந்து சிந்தனை மரபில் ஊறிய கருத்தாக்கங்களால் தனது அரசியல் கொள்கைகளை உருவாக்கிய காந்தி, மதச்சார்பின்மையைச் சொதப்பி விட்டாராம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப்பச்சையாக ‘இந்து வகுப்புவாதி ‘ என்று கூறிவிடலாம் என்றால், காந்தியும் அதே போல எதிர்மறையாகக் கூறத்தக்கவரே என்பது இவர் கருத்து. பிரிவினைக்கு வித்திட்ட சக்திகளாய், கைகோர்த்து இணக்கமாக இருந்த முஸ்லீம் லீகையும் கம்யூனிஸ்ட் கட்சியையும், இதை விட எப்படி வசதியாகக் காப்பாற்றித்தர முடியும் ?
சந்தேகமே வேண்டாம். காந்தி தன் தனிப்பட்ட வாழ்க்கையில் தீவிரமான மதநம்பிக்கையுடைய இந்துவாகத்தான் இருந்தார். தனது மூத்த மகன் ஹிராலால் காந்தி முஸ்லீமாக மாறி அப்துல்லா என்ற பெயருடையவராக ஆனபோது அவரை தன் மகன் அல்ல என்றும் உதறிவிட்டார். காந்தி சாராம்சத்தில், இந்திய மண்ணில் கால் பதித்த நிரந்தர இந்தியர். ராமராஜ்யம் என்று அடிக்கடி பேசினாலும், அதனைச் சரியான வார்த்தைகளில் விளக்கியதே இல்லை. கிரிஸ்துவ மிஷனரிகளையும் அவர்களது தவறான நடத்தைகளையும் காந்தி வெளிப்படையாகவே விமர்சித்தார்.
ஆனால் அதே வேளையில், இந்துக்கள் குரானை ஓதவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.(முஸ்லீம்கள் ராமாயணத்தை படிக்க எந்தவிதமான அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும்). ஈஷ்வர்-அல்லா தேரோ நாம் என்று தனது ரகுபதி ராகவ ராஜா ராம் கீர்த்தனையும் அழுத்தி அல்லா பெயரை இணைத்துக்கொண்டார். பல முஸ்லீம்களுக்கே ஆச்சரியப்படும்படி, கிலாபத் கோரிக்கையை அதிக தீவிரத்துடன் ஆதரித்தார்.
(கேரளாவின்) மாப்பிள்ளை இன முஸ்லீம்கள் நிகழ்த்திய படுகொலைகளை மன்னித்துவிட்டார். ஸ்வாமி ஷ்ரத்தானந்த் அவர்களை அப்துல் ரஷித் கொலை செய்தபோது அதனை நியாயப்படுத்திப் பேசினார். ஹைதராபாத் கிளர்ச்சியின் போது இந்துக்களும் சீக்கியர்களும் கொடுங்கோலர் நிஜாமுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடியபோது காங்கிரஸ் ஆதரவு கிடையாது என்று அறிவித்தார். பசுக்களை காப்பாற்றுவது இந்திய நாட்டின் சுதந்திரத்தை விட முக்கியமானது என்று பேசினாலும், ஒரு போதும் பசுவதையை அவர் எதிர்த்தது கிடையாது. பாகிஸ்தானின் துருப்புகள் (1948)இல் காஷ்மீருக்குள் நுழைந்தபோது இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு 55 மில்லியன் ஸ்டெர்லிங்குகளை உடனே கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.
மேற்கு பஞ்சாபில் வகுப்புவாதத்தீ பற்றி எரிந்தபோது இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவுக்கு வரக்கூடாது என்று கூறினார். டெல்லியில் முஸ்லீம்கள் விட்டுச்சென்ற வீடுகளுக்குள் அகதிகள் நுழையக்கூடாது என்று அகதிகளைத் திட்டினார். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், இந்து சமூகத்தின் பாதுகாப்பையும் நலத்தையும் குலைக்கும் வேலை எல்லாவற்றையும் செய்தார். இந்து உணர்வை அழிக்க முயன்றார். இந்து உணர்வு வெளிப்படும்போதெல்லாம் தனது உணர்ச்சிப்பூர்வமான பிளாக் மெயிலிங் மூலமாக அதனை அழிக்க முயன்றார்.
இருப்பினும், இந்துக்கள் அவரை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கின்றார்கள். அரசியல்தலைவராக அவரை பார்க்காமல் ஒரு தெய்வத்தின் ஸ்தானத்தில் வைத்திருக்கின்றார்கள். காந்தி தனது இந்து ஆதரவு தளத்தைத்தக்க வைத்துக் கொள்ள எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை என்று உணர்ந்திருந்தார். ஆனால் இத்தனை திருப்தி படுத்தும் வேலைகளைச் செய்திருந்தாலும், முஸ்லீம்களில் 4 சதவீத ஆதரவைக்கூட அவர் பெற முடியவில்லை. அவர்கள் காங்கிரஸிலிருந்து விலகியே இருந்தார்கள். ஆனால், ஜின்னா ‘லட்கே லேங்கே பாகிஸ்தான் ‘ (போரிட்டுப் பெறுவோம் பாகிஸ்தான்) என்று அறைகூவியபோது அனைத்து முஸ்லீம்களும் ஒரே உடலாக அவர் பின்னால் ஒன்று திரண்டார்கள். தேசியவாதிகளும் (பகுத்தறிவுவாதிகளும்) இதனை முஸ்லீம் தீவிரவாதம் என்று பார்த்தால், சித்திக்கி இதற்குக் காரணம் காந்தியின் ‘அறிவியற்பூர்வமற்ற மதச்சார்பின்மை ‘யே என்று கூறுகிறார்.
‘அறிவியற்பூர்வமானது ‘ என்பதை பகுத்தறிவு என்று பொருள்கொண்டோமென்றால், இந்தியாவின் முஸ்லீம் சமூகம் மிகவும் கவலையை அளிக்கிறது. உத்தர பிரதேசத்திலும் மேற்கு வங்காளத்திலும் இருக்கும் முஸ்லீம்கள் போலியோ தடுப்பு மருந்துகளை போட்டுக்கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம். முஸ்லீம்களை போலியோ தடுப்பு மருந்துகள் போட்டுக்கொள்ள பிரச்சாரம் செய்ய, பொத்தாம் பொதுவாக ‘ஜாதி மதம் இனம் என்று போலியோ வித்தியாசம் பார்ப்பதில்லை ‘ என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் எந்த ஜாதியும் மதமும் இல்லை. ஒரே ஒரு மதம்தான் பிரச்னை. அமிதாப் பச்சனும், ஐஷ்வர்யா ராயும், சச்சின் தெண்டுல்கரும் தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்தாலும் பிரயோசனம் இல்லை என்பதால், அவர்களில் ஒருவராக அடையாளப்படுத்தி, ஷாருக்கான் அவர்களை ஈடுபடுத்தி, முஸ்லீம்களை போலியோ தடுப்பு மருந்து போடவைக்க முயற்சி செய்ய வேண்டியதாக இருக்கிறது. சாருக்கான், சல்மான் கான், ஜாவேத், சபானா ஆகியோர்களை முஸ்லீம்கள் கண்டுகொள்ளாமல் முஸ்லீம் மதகுருக்கள் சொல்வதைத்தான் முஸ்லீம்கள் கேட்கிறார்கள் என்பது வேறொரு விஷயம்.
அறிவியற்பூர்வமானது என்றால் மார்க்ஸிஸம் என்று பொருள்கொள்வோமென்றாலும் ஏமாற்றம்தான்(ஏனெனில் மார்க்ஸிஸம் அறிவியற்பூர்வமானது என்று மார்க்ஸிஸ்டுகள் சொல்லிக்கொள்கிறார்கள்). ஒரு சில முக்கியமான காம்ரேட்கள் முஸ்லீம்களாக இருந்தாலும், முஸ்லீம்கள் மத்தியில் மார்க்ஸிஸம் ஊடுருவவே முடியவில்லை. கம்யூனிஸ்டுகள் ஜின்னாவுக்கு ‘தேசங்களின் சுயநிர்ணய உரிமை ‘பற்றி எல்லாவிதமான கருத்துக்களை எல்லாம் எடுத்துக்கொடுத்து பாகிஸ்தான் உருவாவதற்கு அவ்வளவு உழைத்தாலும், இறுதியில் இன்று பாகிஸ்தானில் ஒட்டு மொத்தமாக கம்யூனிஸ்டுகள் அழித்தெறியப்பட்டதை எப்படி இந்த கம்யூனிஸ்டுகள் விளக்குவார்கள் ? கம்யூனிஸ்ட் கோட்டையான மேற்கு வங்காளத்தில், பல நூறு கோடிகள் மதரஸாக்களுக்கு வழங்கப்படுகின்றன. என்ன அறிவியற்பூர்வமான வேலை!இது ?
காந்தி , முஸ்லீம்களின் தீவிர செயல்களை ஊக்குவித்தார் என்பது உண்மைதான். ஆனால், அது அவர் அவர்களை திருப்திபடுத்த எடுத்த முயற்சிகள் மூலம் தான் முஸ்லிம் இயக்கங்கள் தீவிரம் அடைந்தனவே தவிர காந்தியின் இந்து மதச் சார்பான கருத்துகள் மூலம் அல்ல. அல்ல. காந்தி அரசியலில் நுழைவதற்கு முன்பிருந்தே, முஸ்லீம்கள் தீவிரமாக சர் சையது அகமது கான் அவர்களால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். சர் சையது அவர்கள், ‘காங்கிரஸ் இயக்கம் என்பது ஆயுதமற்ற உள்நாட்டுப் போர் ‘ என்று கூறினார். இந்துக்களால் தங்கள் நலனை காப்பாற்றிக்கொள்ள முஸ்லீம்கள் நலனுக்கு எதிரான ஒரு இயக்கமாகவே காங்கிரஸை சர் சையது பார்த்தார்.
சுரேந்திர நாத் பானர்ஜி அவர்கள், ‘முகமதிய சமூகம், சர் சையது அகமதுவின் தலைமையின் கீழ், தன்னைக் காங்கிரஸிலிருந்து பிரித்துக்கொண்டுள்ளது. தேசியவாத இயக்கத்துக்கு நேர் எதிரான திசையில் பாட்ரியாடிக் அசோசியேசன் என்ற பெயரில் வேலை செய்கிறார்கள். நமது விமர்சகர்கள் காங்கிரஸை இந்து காங்கிரஸ் என்று கூறுகிறார்கள். நமது எதிர்கட்சி பத்திரிக்கைகள் அப்படித்தான் நம்மை அழைக்கின்றன. நமது ஒவ்வொரு நரம்பையும் வளைத்துக்கொண்டு, நமது முகமதிய சகோதரர்களது ஒத்துழைப்பை நமது தேசப்பணிக்காகக் கோருகிறோம். நமது முகமதிய பிரதிநிதிகளுக்கு , மற்றவர்களுக்குக் கொடுக்காத பணத்தைக் கொடுத்து இடமும் கொடுத்து வரவு செலவையும் பொறுப்பெடுத்துக்கொள்கிறோம். கோகலே கூட தனது ஒரு கடிதத்தில், ‘எழுபது மில்லியன் முகமதியர்கள் தேச நோக்கங்களுக்கு ஏறத்தாழ எதிரிகளாகவே இருக்கிறார்கள் ‘ என்று எழுதினார் ‘ என்று எழுதுகிறார் ((The History and Culture of Indian People, RC Mazumdar, pp 315-316, Vol 10 [2]).
எல்லா முஸ்லீம் அமைப்புகளும் நிறுவனங்களும் தலைவர்களும் இந்திய தேசிய காங்கிரசுக்கு எதிராக கை கோர்த்தனர். அலஹாபாத், லக்னெள, மீரட், லாகூர், சென்னை ஆகிய இடங்களில் இருந்த முஸ்லீம் அமைப்புகள் காங்கிரசை கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றின. முகமதன் ஆப்சர்வர், விக்டோரியா பேப்பர், முஸ்லீம் ஹெரால்ட், ரஃபீக் -ஈ-ஹிந்த், இம்பீரியல் பேப்பர் ஆகியவை ஒரே குரலில் இந்திய தேசிய காங்கிரஸை எதிர்த்து எழுதின. சென்ட்ரல் முகமதன் அசொசியேஷன் ஆஃப் பெங்கால், முகமதன் லிட்டரரி சொசைட்டி ஆஃப் கல்கத்தா, அஞ்சுமான்-ஈ-இஸ்லாமியா ஆஃப் மெட்ராஸ், திண்டுக்கல் அஞ்சுமான், முகமதன் சென்ட்ரல் அசோசியேஷன் பஞ்சாப் ஆகிய அமைப்புகள் மிகவும் தீவிரமான வார்த்தைகளில் காங்கிரசையும் அதன் வேலைகளையும் அதன் நோக்கங்களையும் கண்டனம் செய்தன. சர் சையது அவர்களே யுனைட்டட் இந்தியா பேட்ரியாடிக் அசோசியேஷன், மொகமதன் ஆங்கிலோ ஓரியண்டல் டிபென்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றை உருவாக்கி காங்கிரசின் வெற்றியைக் குலைக்க உழைத்தார்(முன் குறிப்பிட்ட நூல், p 317).
காங்கிரஸின் ஆரம்பகால தலைவர்கள் (பெரும்பாலானவர்கள் பாரிஸ்டர்கள்) ஆங்கிலமோகம் கொண்டவர்கள். மிகவும் ஆழமாக தேசப்பற்று கொண்டவர்களாக இருந்தாலும், ஐரோப்பிய பார்வை கொண்டவர்கள். ‘நான் ஒரு இந்தியன் ‘ என்று ஒருவர் சொன்னாலும் அது ஆங்கிலத்தில் இருந்தால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியவர்கள். சர் சையது அவர்களும் இது போன்ற ஒரு தீவிரமான ஆங்கிலமோகம் கொண்டவர்தான். முஸ்லீம் சமூகத்தை மத்தியகால மதத்தீவிரவாதத்திலிருந்து வெளிக்கொணர விரும்பியவர். ஐரோப்பாவுக்குச் சென்ற முதல் இந்திய முஸ்லீமும் அவர்தான். ராஜா ராம் மோகன் ராய் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் அமைத்த முன்னேறும் வழியை முஸ்லீம்களும் பின்பற்ற வேண்டும் என்று கோரியவர். 1865இல் ‘சயண்டிஃபிக் சொசைட்டி ‘ என்ற அமைப்பை உருவாக்கி ஆங்கிலத்தில் இருக்கும் பல்வகைப்பட்ட புத்தகங்களை உருது மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்து முஸ்லீம்களிடையே வினியோகிக்க முயன்றார்.
இருப்பினும், இப்படிப்பட்ட ஆங்கிலமோகம் கொண்ட சர் சையது, ஐரோப்பிய மயமான இந்தியர்களால் நடத்தப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸை தீவிரமாக எதிர்த்தார். சர் சையது அவர்கள் முஸ்லீம் சமூகத்துக்குள் இருந்த மதப்பழமைவாதத்தின் இறுக்கத்தை குறைக்க உதவினாலும், முஸ்லீம் சமூகத்தின் அன்னியமாதலை முன்னெப்போதையும் விட அதிகமாக ஆக்கவே உதவினார். இதுதான் ‘அறிவியற்பூர்வமான மதச்சார்பின்மை ‘ ? இவர்தான் முதன் முதலில், இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் என்ற இரண்டு தேசங்கள் இருக்கின்றன என்று பேசினார். இவரது கொள்கைகள் டாக்காவில் 1906இல் முஸ்லீம் லீக் பிறக்கக் காரணமாக இருந்தது. இது காந்தி இந்தியாவில் காலடி எடுத்துவைத்த 1915 ஆண்டுக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முந்தையது. சுதந்திர நாட்டில் மற்றவர்களுக்குச் சமதையாக வாழ்வதற்கு முஸ்லீம்களுக்கு விருப்பமில்லாததால்தான் அவர்கள் காங்கிரஸை வெறுத்தார்கள். இஸ்லாமிய காலத்தில் இந்தியாவில் இருந்ததுபோன்ற ஒரு மேட்டிமைக்குடிகளாக முஸ்லீம்கள் வாழ்வதற்குத்தான் விரும்பினார்களே அன்றி, சமமானவர்களாக வாழ விரும்பவில்லை.
(பல்பீர் கே புஞ்ச் மானிலங்களவை உறுப்பினர். பா ஜ க-வின் சிந்தனை வட்டத்தில் மொறுப்பாளர். அவருடைய மின் அஞ்சல் முகவரி : bpunj@email.com)
—-
- பெரியபுராணம்- 38
- விஸ்வாமித்ராவுக்குப் பதில்
- சுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்
- நடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-8
- பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி
- பூரணம் எய்திய இந்தியாவின் முதல் பூதக் கனநீர் அணுமின் நிலையம் (540 MWe)
- ருசி
- எவர் மீட்பார் ?
- கீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- நிழல்களைத் தேடி..
- முந்தைய சூழல் ஒன்றுக்காய்
- மாமா ஞாபகங்களுக்காக
- பின் சீட்
- புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- எண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2
- மதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்
- வெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்
- அவளும் பெண்தானே
- மழுங்கடிக்கப்பட்ட விதைகள்
- ஆத்மா
- குழந்தைத் திருமணம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2)
- புதிய தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்