மண் தின்னும் மண்

This entry is part [part not set] of 16 in the series 20011104_Issue

கோகுல கிருஷ்ணன்


மலர்ந்து புல்லாக
மாறி நிற்கிறது மண்.
மண் தின்று
அசை போடுகின்றன மாடுகள்.
மாடுகளின் மடியில்
மண் கறந்து குடிக்கின்றனர் மனிதர்கள்.
மனிதர்களைச் சிதைத்து,
மண் தின்று
மறுபடியும் மலர்கிறது மண்.

Series Navigation