மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

முல்லை அமுதன்


மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்

சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் 1933ல் பிரந்த இவரின் கவிஆளுமை எம்மை எல்லாம் விழிப்புற செய்தவர் கவிஞர். தா. இராமலிங்கம் அவாகள்.

இவரின் கவிதைகள் எளிமையானவை.

இவரின் கவிதையின் தெளிவை சிறப்புற நமது வாசிப்புக்கு
புதுமெய்க் கவிதைகள் (1964)
காணிக்கை (1965)
நூல்கள மூலம் கிடைக்கிறது.

1960ல் இருந்து கவிதைகள் எழுத தொடங்கிய கவிஞர் அலை சமர் போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளில் சில திரு. அ. யேசுராசா, திரு. பத்மநாபஐயர் போன்றோர் தொகுத்த ‘மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

நீண்டநாட்களாகவே இருந்துவிட்ட கவிஞர்பற்றி நண்பர் யேசுராஜாவிடமும், ராதையனிடமும் கேட்டிருந்தும் அப்போது பதில் கிடைக்கவில்லை. கவிஞரின் ஆழ்ந்த மௌனம் எமக்கு அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை.

பாடசாலை அதிபராக இருந்த இவரின் சமூக நோக்கு, ஆழ்ந்த புலமை, மனித நேயம் இவற்றிக்கும் மேலாக தமிழ்த் தேசியம் மேலான அதித அக்கறை இவரின் கவிதைகளில் தெரிந்தாலும் நிறைய இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற ஏக்கம் எம்மிடம் உண்டு. தனக்கான கவிவாரிசை உருவாக்கியிருக்கலாம் தான்.

‘ஞாபகமறதி’ நோயினால் தன்னைமறந்தநிலையில் வாழ்திருக்கிறார் என்பதை அவரது மகன் மூலம் அறிந்த போது வேதனையாக இருந்தது. இன்றைய இளைய கவி ஆர்வலர்கள் கவிஞரின் கவிதைகளை தேடிப் படித்தல் வேண்டும்.

25.08.2008ல் அமரத்துவமடைந்த கவிஞரின் உடலம் கிளிநொச்சி (தமிழ் ஈழம்) மண்ணில் 26.08.2008 தகனம் செய்யப்பட்டுள்ளது.

மரணம் நிஜம் எனினும் வாழ்தலுக்கான உறுதிப்பாடு இல்லாத சூழலிள் அவரின் மரணம் பல செய்திகளை சொல்லிச் செல்கிறது. அவர் எழுதிய முழுக் கவிதைகளையும் தொகுத்து வெளியிடுவது தான் இலக்கிய உலகம் அவருக்குசெய்யும் சமர்ப்பணமாகும்.
முல்லை அமுதன்
லன்டன்


mullaiamuthan_03@hotmail.co.uk

Series Navigation

முல்லை அமுதன்

முல்லை அமுதன்