ப்ரியமுள்ள தொலைபேசிக்கு
வ. நாகராஜன்

அதிகாலைப் பனியில் நனையாதே அம்மாவிடம்
மீண்டும் சொல்ல வேண்டும்
தொலைதூர நண்பனின் பிறந்தநாளுக்கு
நள்ளிரவு வாழ்த்த வேண்டும்
முடிவில்லா விவாதத்தை பிரிய நண்பியிடம்
இன்றும் தொடர வேண்டும்
முத்தம் வேண்டி நாளைய மனைவியிடம்
செல்லச் சண்டையிட வேண்டும்
அலுவலக நினைவின்றி நிம்மதியாய் கண்ணயர
யாரிடமாவது பேச வேண்டும்
மீண்டும் மீண்டும் சொல்லாதே …
அனைத்துத் தடங்களும் உபயோகத்திலிருப்பதாக.