போலந்து தமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள்

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

அறிவிப்பும் வேண்டுகோளும்


போலந்து வார்ஸா பல்கலைக்கழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் கற்பிக்கப் படுகிறது. போலிஷ் மாணவர்கள் முதுகலைப் பட்டத்திற்காக தமிழ் பயில்கின்றனர். இது ஐந்து ஆண்டு படிப்பாகும்.

இந்தி மற்றும் சமஸ்கிருத முதுகலை மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள சில நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் இந்தியாவிற்குப் போக உதவுகின்றன.

அதுபோல் தமிழ் மாணவர்களும் தமிழகம் போகவும் அங்கு நடக்கும் கோடைகாலத் தமிழ் வகுப்புகளில் பங்கேற்கவும் விரும்புகின்றனர்.

ஐரோப்பாவில் தமிழ்க் கல்வி அருகி வரும் சூழலில் வார்ஸா பல்கலைக் கழகத்தில் தமிழ் படிக்கும் ஐரோப்பிய மாணவர்களை ஊக்கப் படுத்த , ஓரிரு மாணவர்களின் தமிழகப் பயணச் செலவை ஒவ்வொரு ஆண்டும் ஏற்கும் தமிழ்ப் பற்றுள்ள நிறுவனங்கள் வரவேற்கப் படுகின்றன.

இது தொடர்பாகக் கருத்துப் பரிமாற்றம் செய்ய விரும்புவோர் எழுதுக.

editor@thinnai.com

Series Navigation