பொிய பொிய ஆசைகள்!

This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue

வ.ந.கிாிதரன் –


உள்ளே உள்ளதெல்லாம்
பொிய பொிய ஆசை.
அள்ள அள்ளக் குறையாத
அளப்பாிய ஆசை.
வானத்தை வில்லாய்
வளைப்பதிலல்ல
ஆசை.
வானத்தை மீறிக்
கவியுமந்த
மோனத்தை பிரபஞ்ச
கானத்தை இசைப்பதில்
ஆசை.
மிதிபட்ட போதெல்லாம்
புத்துயிர்ப்பினைப்
போதிக்குமந்தப்
புல்லினை, அது தாங்கும்
துளியினை அறிவதில்
ஆசை.
விாியும் வெளியினை
எாியும் சுடாினை
புாிவததில்
ஆசை.
அறிவதில்
ஆசை.
கல்லினுள்
தேரை
சொல்லினினுள்
சீரை
வைத்த கவி யாரோ ?
அக்
கவி சுகிப்பதில்
ஆசை.

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்