‘பொியார் ? ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

மா.ச. மதிவாணன்.


அ. மார்க்ஸ் மற்றும் அ.மார்க்ஸ் நூல் வெளியீட்டு விழா குறித்து திண்ணையில் எழுதிய மஞ்சுளா நவநீதன் உள்ளிட்டோருக்கு தொிவிக்கப்படும் எமது கருத்து:

தந்தை பொியார் தேசியம், தேசாபிமானத்துக்கு எதிராகவும் தேசிய இனத்தின் பெயாிலான விடுதலை நாடுகளின் நிலைமை குறித்தும் கூறியதாகக் கூறி மிகச் சுருக்கமாகவும் தேர்ந்தெடுத்தும் அ. மார்க்ஸ் அவர்கள் சில மேற்கோள்களை வெளியிட்டுள்ளார்.

இந்த நூலில்

அ. மார்க்சு தன் கருத்தாக ‘பொியாரை (தமிழ்) தேசப் பிாிவினைவாதியாகச் சுட்டிக்காட்ட முயல்வோர், பொியார் இங்கு குறிப்பிடுவதெல்லாம் அகில இந்திய தேசியத்தைத் தான் எனச் சொல்லித் தப்பிக்க முயலலாம். ஆனாலும் பொியார் அவர்களுக்கு இந்த வாய்ப்பை அளிக்கத் தயாராக இல்லை… ‘ என்று கூறி வே. ஆனைமுத்துவின் தொகுதிகளில் பக்கம் 383,384 ஆகியவற்றில் இருந்து கீழ்க்கண்ட மேற்கோளை எடுத்துக்காட்டியிருக்கிறார்.

‘ நான் இந்திய சாம்ராஜ்யம், இந்தியத் தேசாபிமானம் என்பதைப் பற்றி மாத்திரம் பேசுவதாக நினைத்துவிடாதீர்கள். உலகத்தில் உள்ள எல்லாத் தேசத்தின் அபிமானங்களையும் சுயராஜ்யங்களையும் தொிந்துதான் பேசுகிறேனேயொழிய கிணற்றுத் தவளையாய் இருந்தோ வயிற்றுச் சோற்று சுயநல தேசபக்தனாக இருந்தோ நான் பேசவரவில்லை.

எந்த தேசத்திலும் எப்படிப்பட்ட சுயராஜ்ஜியத்திலும் குடியரசு நாட்டிலும் ஏழை- பணக்காரன், முதலாளி, தொழிலாளி வித்தியாசம் இருந்துதான் வருகிறது. நம் நாட்டில் இவைகள் மாத்திரமல்லாமல் பார்ப்பான்-பறையன், மேல்சாதி-கீழ்சாதி ஆகிய அர்த்தமற்ற அயோக்கியத்தனமான வித்தியாசங்களும் அதிகப்ப்டியாக இருந்துவருகின்றன. இவைகளை அழிக்கவோ, ஒழிக்கவோ இன்றைய தேசாபிமானத்திலும் சுயராஜ்ஜியத்திலும் கடுகளாவாவது யோக்கியமான திட்டங்கள் இருக்கின்றனவா என்று உங்களைக்கேட்கிறேன் ‘

இந்த மேற்கோள் உள்ளிட்டவைகளைச் சுட்டிக்காட்டி பொியார் ஒரு எதிர்த்தேசியவாதியே என்கிறார்.

அ. மார்க்சு கூறுவது போல் அவர் குறிப்பிட்டுள்ள இந்த மேற்கோளில் தமிழ்த் தேசதுக்கு எதிரான கருத்து எதுவும் இருப்பதாக எமக்குத் தோன்றவில்லை. மாறாக உருவாகும் தமிழ்த் தேசம் எப்படிப்பட்ட அறிவார்ந்த சமூகமாக இருக்க வேண்டும் என்பதை ஆவேசத்துடன் வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது.

மானமும் அறிவுமின்றி இருந்த தமிழ்ச் சமூகத்தின் அறிவு விடுதலைக்காக போராட வந்த பொியார் தன் வாழ்நாள் முழுவதும் பேசிய பேச்சுகளும் எழுதிய எழுத்துகளும் தன்மையில் ஒரு ‘பொதுபோக்கை ‘ கொண்டிருப்பதாக அறிகிறோம்.

‘கடுமையான சாடல் ‘ … அ.மார்க்ஸ் போன்றவர்கள் வாிகளில் சொல்வதானால் பிரச்சனைகளை ‘முழு நிர்வாணமாக்கிப் ‘ பார்த்தவர் பொியார்.

தமிழ்ச் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்திய – வெளிப்படுத்திய ‘தந்தை பொியார் ‘ ஒடுக்குமுறைகளின் அனைத்து உள்ளடக்கங்களையும் ‘நிர்வாணமாக்கித்தான் ‘ பார்த்தார்.

அந்த ‘நிர்வாணத்தனமான ‘ அல்லது ‘நியாயமான கோபத்தின் ‘ ‘குமுறலின் ‘ வெளிப்பாட்டில் இந்த இனம் மானமும் அறிவுபெற்றதாக திகழவேண்டும் என்று தந்தையின் நிலையிலிருந்து வெடித்து வெளிப்படுத்திய ‘கணைகளில் ‘ ‘இரண்டொரு வாிகளை ‘ மட்டும் வைத்துக் கொண்டு அல்லது ‘இரண்டொரு மேற்கோள்களை ‘ மட்டும் வைத்துக்கொண்டு அவரை எதிர்த்தேசியவாதி என்றெல்லாம் இறுதிவரையறை செய்வது கொள்வது நியாயமல்ல.

அவரது பேச்சுகளும் எழுத்துகளும் மிகக் கடுமையானவை.

உதாரணமாக ‘சூத்திரன் ‘ என்று இந்துமதம் சொல்கிறது என்பதை விட உன்னை ‘தேவடியா மகன் ‘ என்று இந்துமதம் சொல்கிறது என்று அப்பட்டமான கொச்சை மொழி என்று கூட வைத்துக்கொள்ளுங்கள் அதைத்தான் பயன்படுத்தினார்.

ஏன் பயன்படுத்தினார் ?

மானமும் அறிவும் பெற்ற சமூகமாக இந்த சமூகம் விளங்கவேண்டும் என்பதற்காக…

சாி பொியாாின் இந்த பேச்சுகள்..அறிக்கைகள்..எல்லாம் தனித்தவையா ? தனிநபர் பிரச்சாரமா ? இன்று ‘உதிாி ‘களாக இருப்பவர்களைப் போல் ‘உதிர்த்துச் ‘ சென்றவையா ?

இல்லையே….

அவர் ஒரு இயக்கத்தின் நிறுவனர்; போியக்கத்தின் நிறுவனர்.

சமூக ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட இந்துமதவாத இயக்கங்களும் தமிழ்ச் சமூகத்தின் மீதான ஆதிக்கத்தனத்தை காங்கிரசு என்ற பெயரால் கட்டிக்காத்த பேராயக்கட்சிகளும் தமிழ்நாட்டில் முகவாியைத் தொலைக்கவைத்த ஒரு போியக்கத்தின் நிறுவனர் அவர்- இந்த இயக்கத்தொண்டர்களின் தந்தை;(பொியாரை நாம் புனிதமானவராக கருதுகிறோம் என்று எண்ண வேண்டாம்)

அந்த இயக்கத்தின் கிளைகளே(அவற்றின் விளைவுகள் பற்றிய விவாதம் வேறு…)தமிழ்நாட்டு அரசியலில் அசைக்க முடியாத அங்கங்களாக இருக்கின்றன.

பொியார் தொடக்க காலத்தில் இந்திய தேசிய காங்கிரசில் பணிபுாிந்துள்ளார்;

‘சாதி, மதம், வகுப்பு ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டுள்ள பேதங்களையும், சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் இருந்துவரும் உயர்வு, தாழ்வுகளையும் அகற்றி மக்கள் யாவரும் ஒரே சமூகமாகவும், சகோதரத்துவமாகவும் சமமாக வாழும்படி செய்தல் ‘ என்பதற்காக 1925-ல் சுயமாியாதை இயக்கத்தை தந்தை பொியார் தோற்றுவித்தார்.

நீதிக்கட்சியுடன் (தென் இந்திய நல உாிமைச்சங்கம்) விமர்சனத்துடனான தோழமை நடவடிக்கைகளை மேற்கொண்டார்;

தமிழ்ச் சமூகத்தின் மீதான இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தனிநாட்டு முழக்கத்தை முன் வைக்கிறார்…

தென் இந்திய நல உாிமைச்சங்கத்தை திராவிடர் கழகமாக்கினார்…. இவை எல்லாம் பொியாாின் இயக்க நடவடிக்கைகள்.

இங்கிலாந்து நாட்டில் தனித்தமிழ்நாட்டுக் கோாிக்கைக்காக வாதாட (அன்றைய சென்னை மாகாணத்தை தந்தை பொியாரும் அவரது திராவிடர் கழகமும் திராவிட நாடு என்றழைத்தனர்..பின்னாளில் மொழிவழி மாநிலப் பிாிவினைக்குப் பிறகு தனித்தமிழ்நாடு கோாிக்கையாகிறது) சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தை அனுப்பிவைத்த போதும் பன்னீர்செல்வம் மறைந்தபோதும் பொியார் நடத்திய குடியரசின் பக்கங்களைப் புரட்டினால் அவரது செயல்பாட்டின் இலக்கு எது என்பது தெளிவாக விளங்கும்.

‘திராவிடர் கழகத்தை ‘ என்ற ‘இயக்கத்தை ‘ ‘அமைப்பை ‘ அ.மார்க்சு கூறுவது போல் ‘பற்றற்ற ‘ பொியார் உருவாக்கியது எதற்காக ?

தேசாபிமானங்களுக்கு எதிராகப் பேசவா ?

1938 டிசம்பர் 29, 30-ல் சென்னையில் நடைபெற்ற 14-வது நீதிக்கட்சி மாநாட்டில் அக்கட்சித் தலைவராக தந்தை பொியார் தேர்வு செய்யப்பட்டார். 1940 ஆகஸ்ட் 4-ம் தேதி திருவாரூாில் நடைபெற்ற 15-வது நீதிக்கட்சி மாநாட்டில் அதாவது தந்தை பொியார் தலைமையிலான நீதிக்கட்சியின் மாநாட்டில் , ‘திராவிடர்களுடைய கலை, நாகாீகம், பொருளாதாரம் ஆகீயவைகள் முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திாியின் நேரடிப் பார்வையின்கீழ் ஒரு தனிநாடாகப் பிாிக்கப்பட வேண்டும் ‘ என்று தீர்மானம் நிறைவேற்ப்பட்டது.

1944 ஆகஸ்ட் 27-ல் சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், தென்னிந்திய நல உாிமைச் சங்கம் என்பது ‘திராடவிடர் கழக ‘மாக (DRAVIDIAN ASSOCIATION) மாற்றப்பட்டது.

‘திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், பிாிட்டிஷ் செக்ாிட்டாி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிாிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை முதற் கொள்கையாக கொண்டிருக்கிறது ‘ என்பது திராவிடர் கழகத்தின் நோக்கமாக

அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் ‘சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எவ்விதமான தேர்தலுக்கும் கட்சி அங்கத்தினர்கள் நிற்கக்கூடாது ‘ என்றும் அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்படி வரையறை செய்யப்பட்ட கொள்கையோடும் செயல்திட்டத்தோடும் ஒரு ‘விடுதலை ‘ இயக்கத்தை பொியார் உருவாக்கினார்.

இந்த திராவிடர் கழக உருவாக்கத்துக்குப் பிறகு அவர் நடத்திய முக்கிய போராட்டங்கள் நாட்டு விடுதலை, சமூக விடுதலை ஆகியவற்றுக்காக நடத்தப்பட்டுள்ளன.

‘எதிர்த்தேசியவாதி ‘ என்று அ. மார்க்சு கூறும் ‘பொியாாின் ‘ திராவிடர் கழகத்தின் சில போர்க்களங்கள்:

1947 ஜூலை முதல் நாள் ‘திராவிட நாடு ‘ பிாிவினை நாளாக திராவிடர் கழகம் அறிவித்தது.

அதேபோல் இந்திய விடுதலை நாள் (ஆகஸ்ட்-15) தமிழ்நாட்டுக்கு துக்க நாள் என்று கூறி துக்க நாளாக கடைபிடித்தது.

* 1948 ஜூன் 20-ல் இந்தி கட்டாயமாக்கப்பட்டதை திராவிடர் கழகம் எதிர்த்தது.

* 1928-ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வகுப்புவாாி பிரதிநிதித்துவம் செல்லாது என 1950 செப்டம்பர் 2-ல் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியதால் 1951 பிப்ரவாியில் இந்திய அரசியல் சட்டத்தின் 15 (4) பிாிவு திருத்தப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது சாசன திருத்தம் இதுவே.

* 1952-ல் முதல்வராக இருந்த ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை எதிர்த்துப் போராடி அத்திட்டத்தை ரத்து செய்ய வைத்தது திராவிடர் கழகம். 1953 மே 27-ல் வினாயகன் சிலை உடைப்பு போராட்டத்தை பொியார் நடத்தினார்.

* 1954-ல் பொியார் ஆதரவுடன் காங்கிரசின் சார்பில் காமராசர் தமிழ்நாட்டு முதல்வரானார்.

* 1955 ஜூலை 17-ல் திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய கமிட்டியில் ‘இந்திய தேசிய கொடி எாிப்பு ‘ போராட்டம் அறிவிக்கப்பட்டது.

* 1956-ல் இராமன் பட எாிப்பு கிளர்ச்சியை (ஆகஸ்ட்-1இல்) திராவிடர் கழகம் நடத்தியது.

* 1956-ல் மொழிவாாி மாநிலம் பிாிக்கப்பட்டபோது ‘திராவிட நாடு ‘ பிாிவினை என்பதை ‘தமிழ்நாடு ‘ விடுதலையாக மாற்றுவதாக பொியார் அறிவித்தார்.

* 1957-ல் சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தை எாிப்பதாக திராவிடர் கழகம் அறிவித்தது.

* 1957 நவம்பர் 26-ல் இந்திய அரசியல் சட்டத்தை திராவிடர் கழகத்தினர் தீ வைத்து கொளுத்தினர்.

* தமிழர் வரலாற்றில் சாதி ஒழிப்புக்காக ஆயிரக்கணக்கானோர் சிறை சென்று சிறைக்குள்ளேயும் சிறைக்கு வெளியேயும் உயிாிழந்தோர் பலர். இத்தகைய போர்க்களத்தின் தந்தை ‘எதிர்த்தேசியவாதி ‘ ‘பற்றற்ற ‘ ஈ.வே.ரா.பொியார் தான்.

(ஆனூர் செகதீசன், விடுதலை க. ராசேந்திரன் ஆகியோர் ‘பொியார் திராவிடர் கழகமாக ‘ செயல்பட்ட காலத்தில் நவம்பர் 26 ஆம் நாளை சாதி ஒழிப்பு மாவீரர் மாநாடாக சில ஆண்டுகளுக்கு நடத்தினர்; சென்னையில் தற்போது நடைபெறும் ‘தந்தை பொியார் திராவிடர் கழகத்தின் ‘ தொடக்க விழா மாநாட்டின் ஒரு பகுதியான திறந்தவெளி மாநாட்டு அரங்கிற்கு சாதி ஒழிப்புப் போாில் சிறையிலேயே உயிாிழந்த இரண்டு மாவீரர்கள் பெயரைத்தான் சூட்டியுள்ளதையும் நினைவுபடுத்துகிறோம்)

* ‘சுதந்திரத் தமிழ்நாடு ‘ பிாிவினையே சாதி ஒழிப்புக்கு ஒரே வழி என்று கூறி 1960 ஜூன் 6-ல் தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப்படத்துக்கு பொியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் தீ வைத்தனர்.

* 1964-ல் ‘நில உச்சவரம்புச் சட்டம் ‘ செல்லாது என்று உச்சநீதி மன்றம் அறிவித்ததைக் கண்டித்து ‘சுப்ாீம் கோர்ட் கண்டன ‘ நாளை திராவிடர் கழகம் (1964, ஏப்ரல்-1-ல்) கடைபிடித்தது.

* 1965 ஏப்ரல் 3,9 தேதிகளில் கம்பராமாயண எாிப்புப் போராட்டத்தையும் 1966-ல் தில்லியில் காமராசர் இல்லத்துக்கு பார்ப்பனர்களால் தீ வைக்கப்பட்டபோது 1966 நவம்பர் 26-ம் நாளை ‘காமராசர் பாதுகாப்பு நாளாக ‘வும் கொண்டாட பொியார் அழைப்பு விடுத்தார்.

* 1968-ம் ஆண்டு ‘தில்லி ஆதிக்கக் கண்டன நாளை ‘ திராவிடர் கழகம் நடத்தியது.

* 1969 நவம்பர் 16-ம் தேதி ‘கர்ப்பக்கிரக நுழைவு கிளர்ச்சி ‘ நடத்த திராவிடர் கழக மத்தியக் குழு தீர்மானம் நிறைவேற்றியது.

* 1970 சனவாி 23-ல் ‘இராமன் பொம்மையை ‘ செருப்பால் அடிக்கும் போராட்டத்தையும் திராவிடர் கழகம் நடத்தியது.

* 26.1.1974-ல் ‘கர்ப்பக் கிரக நுழைவு கிளர்ச்சி ‘ நடத்தப்படும் என திராவிடர் கழகம் அறிவித்தது.

திராவிடர் கழகத் தலைவர் தந்தை பொியார் மறைந்ததால் அது நிறுத்தி வைக்கப்பட்டது.

(இதற்குப் பின்னர் பொியார் இயக்கத்தின் செயல்பாடுகள் இங்கு குறிப்பிடப்படவில்லை)

இப்படி ‘எதிர்த்தேசியவாதி ‘யாக சித்தாிக்கப்படும் தந்தை பொியார் தனது தலைமையில் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் தமிழாின் சமூக விடுதலை, நாட்டு விடுதலையைத் தான் வெளிப்படுத்துகின்றன…

‘திராவிட நாடு கிடைத்த பிறகு திராவிடர் கழகம் கலைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் கடைசி மூட நம்பிக்கைக்காரன் இந்நாட்டில் இருக்கும் வரை சுயமாியாதைக்காரனுக்கு வேலை இருக்கிறது ‘ என்றும் பொியார் அறிவித்து வந்தார்.

இப்படி ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தின் நிறுவனராக தனது தமிழர் சமூக, அரசியல் விடுதலைப் பணிகள் இரண்டையும் இணைத்தே பொியார் நடத்திவந்தார்.

பொியாரை நீங்கள் விமர்சனத்துக்குள்ளாக்கும்போது அல்லது நிர்வாணமாக்கும் போது பொியாாின் இந்த அரசியல் இயக்க உள்ளவாங்கலை அவிழ்த்துவிட்டுவிட்டு பார்ப்பது சாியானதாகத் தோன்றவில்லை.

இன்றைய தமிழ்நாட்டுச் சூழலில் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களாக –

இந்திய அரசுக்குள்ளாக தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுாிமைக்கு குரல் கொடுப்பதாகக் கூறும் பழ. நெடுமாறன், தியாகு, சுப. வீரபாண்டியன், மணியரசன் ஆகியோரது இயக்கங்களுக்கும் இன்றைய பொியார் இயக்கத்தினராக பிரகடனப்படுத்தியுள்ள * தந்தை பொியார் திராவிடர் கழகத்தினருக்கும் இடையேயான முரண்பாடு ‘தமிழ்த் தேசிய ‘ தளத்தில் நீடித்துக்கொண்டு இருக்கிறது.

பொியார் இயக்கத்தினர் தமிழ்ச் சமூகத்தின் விடுதலையின் மூலமே தனித்த அரசு கட்டமைக்க முடியும் என்றும் தன்னுாிமைக் குழுவினர் தனித்த அரசு அமைவதின் மூலமே சமூக விடுதலை சாத்தியம் என்று தங்கள் மேடைகளிலும் சமூக விடுதலையின் மூலமே தனித்த அரசு சாத்தியம் என்று சில நேரங்களில் பொியார் இயக்க மேடைகளிலும்

முழக்கமிடுகின்றனர்.

இந்த அரசியல் உள்வாங்கலை அ. மார்க்ஸ் போன்றவர்கள் சமகாலத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

ஒரு இயக்கத்தின் நிறுவனரான பொியாரை ‘தனித்த ‘ மனிதராக பார்ப்பதும் அவரது சிந்தனைகளின் மேற்கோள்களை ‘வெட்டிப்பார்த்து ‘ தனக்குத் ‘தேர்வான சித்தாந்தத்தோடு ஒட்டிப்பார்த்து ‘ மகிழ்வது மார்க்சின் ‘தனித்த ‘ மன மகிழ்வுச் செயல்பாடாக இருக்கலாம்.

அதுவே இறுதி என்றும் ‘பொியார் எதிர்த்தேசியவாதிதான் ‘ என்றும் அடித்துச் சொல்வது அனுமதிக்கப்படமுடியாதது.

————–

(* தந்தை பொியார் திராவிடர் கழகம்: தமிழ்நாட்டில் பொியார் உருவாக்கிய திராவிடர் கழகத்தின் பொதுச்செயலராக கி. வீரமணி செயல்பட்டுவருகிறார்.

திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய வே. ஆனைமுத்து மார்க்சிய பொியாாிய பொதுவுடைமைக் கட்சியையும், கோவை இராமகிருஷ்ணன் திராவிடர்கழகம் பெயாிலும், ஆனூர் ஜெகதீசன் தலைமையில் பொியார் திராவிடர் கழகம் என்ற பெயாிலும் பிாிந்து திராவிடர் இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செயல்பட்டனர்.

பின்னர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு திராவிடர் கழகம் என்று அமைப்புப் பெயரை மாற்றினார்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை சத்தியமங்கலம் வீரப்பன் மற்றும் தனித் தமிழ்நாடு கோரும் தமிழ்த்தேசிய மீட்புப் படை, தமிழ்நாடு விடுதலைப் படை ஆகிய அமைப்புகாள் 108 நாட்கள் பிணைக்கைதியாக வைத்த பொழுது அரசு சார்பில் ராஜ்குமார் உள்ளிட்டோரை மீட்பதற்காக அரசு தூதராக சென்ற காரணத்துக்காக திராவிடர் கழகத்தின் தமிழ்நாட்டு அமைப்புச் செயலராக இருந்த கொளத்தூர் தா.செ. மணியை கட்சியிலிருந்து வீரமணி நீக்கினார்.

சிறிதுகாலம் தொண்டர்களுடன் தனித்து இயங்கிய கொளத்தூர் தா.செ. மணி, கோவை. ராமகிருஷ்ணனின் தமிழ்நாடு திராவிடர் கழகம், விடுதலை க. ராசேந்திரன், ஆனூர் செகதீசன் ஆகியோாின் பொியார் திராவிடர் கழகம் மூன்றும் தற்போது இணைந்து தந்தை பொியார் திராவிடர் கழகம் என்ற பெயாில் புதிய அமைப்பாக உருவாகியுள்ளது).

குறிப்பு: மஞ்சுளா நவநீதன் குறிப்பிடுவது போல் அருண்மொழி அல்ல..திராவிடர் கழகத்தின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரும் தமிழ்நாடு அறிந்த பொியாாியப் பெண்ணியவாதியுமான வழக்கறிஞர் சேலம். அ. அருள்மொழிதான் அவர்…

மா.ச. மதிவாணன்.

maranmathi@hotmail.com

Series Navigation