பொருள் மயக்கம்

0 minutes, 23 seconds Read
This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

வஹ்ஹாபி


ஏக இறைவனான அல்லாஹ்வின் பல பெயர்களுள் ஒன்றுதான் ‘வஹ்ஹாப்’ எனும் பெயர். வஹ்ஹாப் என்ற அரபுச் சொல்லுக்கு நிகரற்ற பெருங் கொடையான் என்பது தமிழ்ப் பொருள்.

‘மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து …’ என்ற தலைப்பில் வெளியான எனது திண்ணைக் கடிதத்தின் [சுட்டி-1] மூன்று இறைவசனங்களின் மூலம் ‘வஹ்ஹாப்’ என்பவன் ஏக இறைவன்தான், மனிதர்களில் எவருமல்லர் என்று சான்றுகளின் அடிப்படையில் தெளிவாக மெய்ப்பிக்கப் பட்டு விட்டது.

‘நான் ஏன் வஹ்ஹாபி?’ என்பதை எனது வலைப்பூவில் [சுட்டி-2] “வஹ்ஹாப்(நிகரற்றக் கொடையாளன்)ஐச் சார்ந்தவன் – வஹ்ஹாபி” என்று தெளிவாக அறிவித்து விட்டே எழுதத் தொடங்கினேன்.

“வஹ்ஹாப் என்றால் அல்லாஹ் என்று பொருள்” எனும் ‘மொழியாக்க’த்தோடு நான் எங்கு-எப்போது மூன்று கால்களோடு நின்றேன் என்று 08.06.2006இல் திண்ணையில் எழுதிய ஹமீது ஜா.பர் [சுட்டி-3] சுட்டிக் காட்ட முடிந்தால் அவருடைய எழுத்து நேர்மையைப் பாராட்டலாம்.

குலாம் ரஸூல் எப்படி ரஸூல் ஆக முடியாதோ அதேபோல் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாபோ, அவருடைய தந்தை அப்துல் வஹ்ஹாபோ, பண்டாரி (அப்துல்)வஹ்ஹாபோ அந்த நிகரற்ற ஒரேயொரு பெருங் கொடையாளனான வஹ்ஹாப் ஆக முடியவே முடியாது.

எனவே, மேலும் மயங்க வேண்டாம்; மயக்க நினைக்கவும் வேண்டாம்.

‘திண்ணை வாசகர்கள் எல்லாம் மாங்கா மடையன்கள்’ என்று ஹமீது ஜ.பர் [சுட்டி-4] சொன்னதுபோல் நான் ஒருபோதும் நினைக்க மாட்டேன்.

ஸலாமைப் பொருத்தவரை சாந்தி,சமாதானம் எல்லாம் சரிதான். ஆனால், ‘அஸ்லம’ ( أَسْـلـَمَ சரணடைந்தான்) என்ற கடந்தகால வினையிலிருந்து பெறப் படும் சொல்லே இஸ்லாம் ஆகும். சான்று:

“… (எனக்கு முற்றிலும் வழிப்பட்டவராகச்) சரணடையும் என்று (இபுராஹீமிடம் அவருடைய இறைவன்) கட்டளையிட்டபோது அவர், அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோனாக, இதோ, சரணடைந்து விட்டேன் என்று கூறினார்” [002:131] என்று தன் அருள் மறையில் வஹ்ஹாபு கூறுகிறான். இப்போது ஹமீது ஜா.பரின் ஊர்க்காரரான ‘பண்டாரி வகாபோ’, குலாம் ரஸூல் அடிக்கடி காட்டும் ‘பூச்சாண்டி வகாபோ’ வாசகர்களின் நினைவுக்கு வரார் என்று நம்புகிறேன்.

[நல்லவேளை, சாமீ (சீன்+அலி· ப்+மீம்+யே) என்ற அரபு வார்த்தைக்கு உயர்ந்தவன் என்று பொருள். இதுவும் இறைவனின் திருநாமங்களில் ஒன்று. அதனால் சாமீ என்றால் இறைவன் எனவே சாமீ என்று சொல்வதில் தவறில்லை என்று ·பத்வா கொடுக்காமலிருந்தார் நம் வஹாபி] என்பவை ஹமீது ஜா.பரின் அருஞ்சொல் அகராதிப் பக்கத்திலுள்ளவை. இந்தச் சாமீ எங்கிருந்து பெறப் பட்டது என்று அவர் குறிப்பிட்டால் நன்றியுடையவனாவேன்.
என்றாலும்,
அஸ்-ஸாமிஃ (السامع = செவியுறுபவன்) என்று அல்லாஹ்வைச் சிலவேளை நான் அழைப்பதுண்டு – மிக்குயர்ந்த டிக்’ஷனரியின். சான்றின் அடிப்படையில்:
“(நபியே,) கூறுவீராக! நீங்கள் (அவனை) அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(இன்னும் பல) அழகிய பெயர்கள் [சுட்டி-5] உள … ” [017:110].

இன்னும் மயக்கம் தெளியவில்லையெனில் … மீண்டும் திறக்கலாம், மிக்குயர்ந்த டிக்’ஷனரியை.
ஃஃஃ
சுட்டிகள்:
1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606024&format=html
2: http://wahhabipage.blogspot.com/2006/01/blog-post.html
3: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606092&format=html
4: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605263&format=html
5: http://hadith.al-islam.com/Display/Display.asp?hnum=3851&doc=5

to.wahhabi@gmail.com

Series Navigation

author

வஹ்ஹாபி

வஹ்ஹாபி

Similar Posts