பொதுவாய் சில கேள்விகள்

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

எண்கோணம்


மலர்மன்னனுக்கும், நல்லடியாருக்கும் பொதுவாய் சில கேள்விகள் வைத்தேன். பதில்களின் அடிப்படையில் உண்மை எதுவென ஆராயலாம் என.

என்னுடைய கேள்விகள் இரு புறத்தாருக்கும் நடுவில் சமமாய் வைக்கப்பட்டது. நீதி மட்டுமல்ல, கேள்விகளும் இருவருக்கும் பொதுவில் வைப்பதுதான் உண்மை எது என அறிய நல்லவாய்ப்பு தரும்.

அடுத்தவர் கருத்தையொட்டி தனது பதில்களை அமைக்கவிரும்புவது புத்திசாலித்தனமாகுமேயன்றி, நேர்மையுள்ளதாய் இருக்காது. தன் மனத்தில் உள்ளது எது என்று தெளிவாய் எவருக்கும் காத்திராமல் பதிலளித்துவிட்ட மலர்மன்னனின் நேர்மையையும், தைரியத்தையும் பாராட்டுகிறேன்.

நல்லடியார் அவர்களுடைய பதில்களுக்காகக் காத்திருக்கிறேன். அவர் ஒருவேளை திண்ணையில் இங்கனம் ஒரு கேள்வி எழுந்ததை அறியாமல் இருக்கலாம்.


saakshin@gmail.com

Series Navigation