திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பொங்கல்

This entry is in the series 20030112_Issue

விஜய் ஆனந்த் சி.


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்த மண்ணில்
இன்று உழவனின் உடல் உரமாகிறது
‘சோழநாடு சோறுடைத்து ‘ என்று பாடிய ஊர்களில்
உணவில்லாமல் உழவன் தேகம் சாய்கிறது
விருந்தோம்பலில் சிறந்து விளங்கிய தமிழன் வீட்டில்
தன் வயிற்றுக்குக் கூட உணவில்லா நிலை வந்தது
மூன்று போகம் விளைத்த உழவன் நிலத்தில்
ஒறு விளைச்சல் கூட வராமல் பொங்கல் வந்துவிட்டது!

மண்ணை பொன்னாக்கிய பொன்னி நதியை கன்னடன் கட்டிபோட்டுவிட்டான்
அவளை விடுவிக்க வீரப் புதல்வர்கள் இங்கில்லை
அக்காலத்து மன்னாதி மன்னர்கள் இன்றில்லை

நீர்த்தேக்கங்களை நிரப்பும் பருவமழையும் பொய்த்துவிட்டது
அதை பாடி அழைக்க புலவர்கள் இன்றில்லை
சோழமண்ணில் ஊரெல்லாம் இருக்கும் சிவனருள் பெற்ற அடியவரும் இல்லை

ஊரெல்லாம் தனக்கு கோயில்கட்டி
தவறாமல் விழா எடுத்தவனை
காப்பாற்ற ஈசனுக்கு கூட மனமில்லை

ஆயிரம் தொழில் இருந்தாலும் இதுதான் முதன்மை
உழவு இல்லையேல் இல்லை நம் வாழ்க்கை

ஒரு விளைச்சல் கூட பார்க்காமல்
ஒரு போகம் கூட விளையாமல்
அதற்காக பட்ட கடணை அடைக்காமல்
உண்ண உணவில்லாமல்
வாடித் தற்கொலை செய்யும் உழவர் இருக்கும் நிலையில்
தமிழனுக்கு வேண்டுமா இந்தப் பொங்கல் ?

vijayanandc@hotmail.com

Series Navigation

About விஜய் ஆனந்த் சி.

விஜய் ஆனந்த் சி.

View all 2 articles →

பொங்கல்

This entry is in the series 20030112_Issue

தேன்சிட்டு


விரலை மடக்கித் தட்ட,
குரல் கொடுக்கும் பொங்கல் பானை.
தொழுவத்து பக்கமிருந்து அசை போட்டு,
அண்ணாந்து பார்க்கும் வெள்ளைப் பசு!

ஊரெல்லாம் உறங்கிக் கிடக்க
கதிரவன் மெதுவாய் கண்திறந்த நேரம்
செம்மண் பூமியெங்கும்,
செவ்வானம் போலாகும்.
கரும்பும் மஞ்சளும் வீடுகளில் குவிந்திருக்க
வாசம் மட்டும் உலகமெல்லாம்..

வண்ணப் பொடிகள் கலந்து சேர்ந்து
விரல்களும் சுற்றித் திரிந்து,
கரும்புகள் காவல் காக்க,
புதுப்பானை அவதாரம்!
மகிழ்ச்சியால் துள்ளிய கன்று
தன் வாலைச் சுழற்றியே வீசும்!

அழகிய கிராம வீட்டில்
பாட்டி மட்டும் ஓவியமாய் தெரிய,
நெய்யரிசிப் பொங்கல்
பொங்கி விழுந்து தரை சேரும்.

உழவு மண்ணில் உருண்டு பார்த்து
இந்த ஒரு நாளேனும்
தொலைந்து போன முகவரியைத் தேடி
அலை பாயும் மனசு ….

***
-தேன்சிட்டு-
thenchittu@yahoo.com

Series Navigation

About தேன்சிட்டு

தேன்சிட்டு

View all 9 articles →