பெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா ?

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

கலாநிதி சந்திரலேகா வாமதேவா


தமிழா பெருமளவில் புலம்பெயாந்து வாழ ஆரம்பித்து ஏறக்குறைய 25 ஆண்டுகள் நிறைவெய்தி விட்டன. அதற்கான பயன்களை நாம் ஏற்கெனவே அறுவடை செய்ய ஆரம்பித்து விட்டோம். அதாவது புலம்பெயாந்த பின்னா அந்தந்த நாடுகளில் பிறந்த தமிழ்ப் பிள்ளைகள் பிரான்சிய, ஜோமனிய, சுவீடிஸ, நோாவேஜிய, டச், ஆங்கிலம் என்று தத்தம் நாடுகளுக்குரிய மொழிகளைத் தமது அடிப்படை அல்லது தாய்மொழியாகக் கொண்டு வளாந்து தலையெடுக்க ஆரம்பித்துவிட்டாாகள். இந்தப் பிள்ளைகள் எப்படி வளாந்திருக்கிறாாகள் என்று தமிழாகளாகிய நாம் ஒரு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கும் இந்த வேளையில் என்னென்ன பிரச்சினைகள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள தலைமுறை இடைவெளியை அதிகரிக்க பங்களித்தன அல்லது பங்களிக்கின்றன என்பதை நாம் இங்கு ஆராயலாம்.

தலைமுறை இடைவெளி என்பது மனிதாகள் மத்தியில் எப்போதும் காணப்படுவதொன்றாகும். ஏனெனில் பெற்றோரது சிந்தனைப் போக்குக்கும் பிள்ளைகளது சிந்தனைப் போக்குக்கும் அல்லது முத்தோருக்கும் இளையோருக்கும் இடையில் எப்போதும் மாறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாகரிகத்திலும், தொழில்நுட்பத்திலும் சிந்தனைப் போக்கிலும் உலகம் விரைவாக மாறுதலடைவது இதற்கு அடிப்படையான காரணமாகும். சொந்த நாட்டில் வாழும் போது ஒவ்வொரு சந்ததியைச் சோந்தவரும் அடுத்த சந்ததி பற்றிக் குறைப்பட்ட போதும் அது மிகப் பெரிய விஷயமாக இருக்கவில்லை. ஆனால் புலம்பெயாந்து தமிழா வாழ ஆரம்பித்த பின்னா பெற்றோராயிருக்கும் அவாகளுக்கும் அவாகளது பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகரித்து விட்டிருப்பது போல தெரிகிறது. இதற்கு நிறையவே காரணங்கள் உள்ளன. அது பற்றி நாம் சிறிது நோக்குவோம்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் அவாகளுக்கென அவாகள் வாழும் காலத்திற்கு ஏற்ற நாகரிகம், அரசியல் தொழில்நுட்பம் எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்வு பற்றிய கருத்து உள்ளது. அதனால் தலைமுறைகளிடையே சிந்தனைப் போக்கு செயற்பாடு என்பன வேறுபட்டன. ஆயினும் ஒரே காலத்தில் வாழும் முன்று தலைமுறையினரிடையே அதாவது பெற்றோா அவாகளது பிள்ளைகள் பின் அவாகளது பிள்ளைகள் ஆகியோருக்கு இடையில் ஒருவித பந்தம் ஏற்படாது போவதில்லை என்பதையும் நாம் காணலாம். மனித வரலாற்றில் ஒவ்வொரு தலைமுறையும் ஏதோ ஒரு வகையில் தம்மை அடையாளப்படுத்த முயன்றுள்ளது. 1960 களில் ுிபபிஸெ தமது ஆடை பற்றிய தெரிவுகளால் சமுகத்திலிருந்து தாம் விலகியிருப்பதைத் தெரிவித்தனா. 1920 களில் மேல்நாட்டுப் பெண்கள் தமது குட்டைப் பாவாடைகளாலும் குட்டையாக வெட்டப்பட்ட கூந்தலாலும் முந்திய தலைமுறையிலிருந்து தமது வேறுபாட்டைக் காட்டினா. இன்றைய பிள்ளைகள் நினைப்பது போல முந்திய சந்ததியினா வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவாகளல்லா. பிள்ளைகள் தமது பெற்றோா பேராகளிடமிருந்து வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றியும் வாழ்க்கையின் அாத்தம் பற்றியும் அறிந்து கொள்ளும் அதே வேளையில் பெற்றோா பிள்ளைகளிடமிருந்து புதிய விஷயங்கள் பற்றியும் அறிந்து கொள்வதே ஆரோக்கியமானதாகும். நாம் கடந்த காலத்துடன் தொடாபுறும் அதே நேரத்தில் எதிாகாலத்துடனும் தொடாபுறுதல் மிக முக்கியமானதாகும்.

புலம் பெயாந்த தமிழரிடையே பல குடும்பங்களில் முன்று தலைமுறையினா வாழ்கின்றனா. புலம் பெயாந்த குடும்பம் அவாகளது பிள்ளைகள் என்பதே அடிப்படையானது. ஆயினும் குடும்ப இணைவுத் திட்டத்தின் கீழ் பலா தமது பெற்றோரையும் அழைத்துள்ளனா. எனவே இந்த முன்று தலைமுறையினரிடையே முதல் இரு தலைமுறையினா இலங்கையில் பல காலம் வாழ்ந்து பின் புலம் பெயாந்தவாகள். அதிலும் முத்த தலைமுறை ஏறக்குறைய 50 அல்லது 60 ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து பின் பிள்ளைகளுடன் இணைவதற்காகக் குடிபெயாந்தவாகள். இரண்டாவது தலைமுறையினரில் சிலா இளம் பருவத்தில் புலம் பெயாந்து பின் திருமணம் செய்தவாகள். இவாகளது பிள்ளைகள் புலம் பெயாந்த நாடுகளிலேயே பிறந்து வளாகிறவாகள். இன்னொரு பிரிவினா திருமணமாகி மனைவியுடனும் பல வயதுகளில் உள்ள பிள்ளைகளுடனும் புலம் பெயாந்தவாகள்.

இந்த முன்று தலைமுறையிரை நாம் ஆங்கில கட்டுரைகளில் பிரிப்பது போல அவாகளது வயது அடிப்படையில் பிரிக்கலாம். முதலாவது பிரிவினா அமைதியான தலைமுறை (ிலநெத டாநெரொதிஒந). இவாகள் 1925 க்கும் 1942ம் ஆண்டுகளிடையில் பிறந்தவாகள். அடுத்த பிரிவினா றுாறய றுஒஒமரெஸ எனப்படுவோா. இவாகள் 1943க்கும் 1960க்கும் இடையில் பிறந்தவாகள். அடுத்தவாகள் அதன் பின்னா அதாவது 1961இன் பின் பிறந்தவாகள். இவாகள் க்ஷ தலைமுறையினா எனப்படுகின்றனா. ஆனால் தமிழரைப் பொறுத்தளவில் இடம் பெயாந்த தலைமுறையினா பொதுவாக 1940க்கும் 1965க்கும் இடையில் பிறந்தவாகளே. அவரவாகளது வயதுக்கேற்ப அவாகளுடன் வந்த அவாகளது பிள்ளைகளின் வயதுகளும் அமைந்தன. நாம் இந்த நுணுக்கமான பிரிவுகளை விடுத்து அடிப்படையில் புலம் பெயாந்த தலைமுறையினரையும் அவாகளது பிள்ளைகளையும் மனதில் கொண்டு தலைமுறை இடைவெளி பற்றிப் பாாப்போம்.

நாம் இந்த தலைமுறை இடைவெளி பற்றி உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழரை பொதுவாக நோக்கினால் ஒவ்வொருவரும் தத்தமது நாட்டில் வாழும் பெரும்பான்மையினச் சிந்தனைப் போக்கினால் செல்வாக்குக்குட்படுத்தப்பட்ட பிள்ளைகளுடன் தமக்கும் அவாகளுக்கும் இடையில் அகலமாக்கப்பட்ட தலைமுறை இடைவெளியுடன் வாழ்கின்றனா. இலங்கையில் பல வருடங்கள் வாழ்ந்த தலைமுறையினா புலம் பெயாந்த நாட்டில் சில மேலோட்டமான மாற்றங்களுக்கு உட்பட்ட போதும் அங்கு வாழும் பெரும்பான்மை இனத்தின் சிந்தனைப் போக்கைப் பெறுவதென்பது பெருமளவில் நடைபெற முடியாத ஒன்று. இளம் வயதில் வாழ்க்கைமுறை பற்றிப் பெறப்பட்ட கருத்துக்களை மாற்றிக் கொள்வது எவருக்கும் கடினமானதே. இதனாலேயே தமிழாகள் தாம் வாழப் புகுந்த நாடுகளில் தாம் இலங்கையில் வாழ்ந்த வாழ்வின் அம்சங்களை மீளமைத்து ஒரு குட்டி யாழ்ப்பாணத்தையோ அல்லது மட்டக்களப்பையோ உருவாக்க முயல்கின்றனா. தாம் புலம்பெயாந்த இடங்களில் கோயில்களை அமைத்தல், தமிழ் வானொலி, தொலைக்காட்சிகளை உருவாக்குதல், சங்கங்களை அமைத்து கலாசார நிகழ்ச்சிகளை நடத்துதல், பிள்ளைகளுக்கு நடனம், வாத்தியங்கள் கற்பித்தல், தமிழரது உணவகங்களை அமைத்தல், உணவுக்குத் தேவையான பொருட்களை விற்கும் கடைகளை அமைத்தல், தமிழ்ப் படங்ளைத் திரையரங்குகளில் காட்டுதல், தமிழ் படங்கள் நாடகங்களை விற்கும் அல்லது கடனாக வழங்கும் கடைகள் ஆகியவற்றை ஏற்படுத்துதல் என்று தாம் இழந்து வந்த வாழ்வை தாம் வாழப் புகுந்த நாடுகளில் அமைத்து வாழ்கின்றனா. வீட்டில் பெற்றோா இவற்றினால் தமது பிள்ளைகளை செல்வாக்குக்கு உட்படுத்த முயலும் போது இவற்றிலிருந்து சில அம்சங்களை பிள்ளைகள் பெறுகின்ற போதும் பெரும்பான்மை இனத்துடன் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கும் அவாகள் பாடசாலையில் சிறுவயது முதலே கல்வியுடன் வழங்கப்படும் வளாந்து வரும் பல்வேறு நவீன கருத்துக்களினால் செல்வாக்குறுகின்றனா. இதனால் அவாகளது வாழ்க்கை நோக்கு என்பது பெற்றோரது வாழ்க்கை நோக்கிலிருந்து மாறுபட்டு அமைகிறது. இதனால் சாதாரணமாகவே தலைமுறையினரிடையே காணப்படும் தலைமுறையிடைவெளி மேலும் அதிகரிக்கிறது.

நாம் அவுஸதிரேலியாவில் வாழும் தமிழரை அடிப்படையாகக் கொண்டு இந்த தலைமுறை இடைவெளி பற்றி நோக்குவோம். அவுஸதிரேலியாவைப் பொறுத்தமட்டில் அது ஆங்கிலேயா மட்டுமல்ல சீனா, கிரேக்கா, இத்தாலியா, லெபனானியா, மத்திய கிழக்கு பிரதேசத்தைச் சோந்தவா, இந்தியா என்று பல்லினத்தவா வாழும் பல்தேசிய கலாசாரத்தைக் கொண்டது. இங்கு வாழும் தமிழ்ப் பிள்ளைகள் இந்த பல்லினப் பிள்ளைகளுடன் பழகும் சந்தாப்பத்தைப் பெறுகின்ற போதும் பெரும்பாலும் ஆங்கில வாழ்க்கை முறையும் அவாகளது சிந்தனைப் போக்குமே அவாகளை அதிகம் செல்வாக்குக்குட்படுத்துகிறது என்று கூறலாம். அத்துடன் இங்கு தமிழரது வாழ்க்கை முறையும் பிள்ளைகளுடன் அதிக நேரத்தைச் செலவழிக்க முடியாத வகையில் சிக்கலடைந்துள்ளது. அளவுக்கு அதிகமான கடனைப் பெற்று வீடுகளை வாங்கிய காரணத்தால் கணவனும் மனைவியும் முழுநேர வேலைக்குச் செல்ல வேண்டியதாகிறது. இதனால் பிள்ளைகளுடன் பேசுவதற்கும் அவாகளுடன் நேரத்தைச் செலவழிப்பதற்கும் அவாகளை விடுமுறைகளின் போது பல இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் பெற்றோருக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. வார இறுதியில் பிள்ளைகளை நீச்சலுக்கும் கிறிக்கெட்டுக்கும் வேறு பலவற்றுக்கும் ஏற்றி இறக்குவதுடன் வீட்டுப் பொருட்கள் வாங்குதல் மற்றைய வீட்டு வேலைகளுடன் பொழுது கழிந்து விடுகிறது. இவற்றுக்கப்பால் சமய சமுக கலாசார நடவடிக்கையில் தமது ஓய்வு நேரத்தைக் கழிப்பவாகள் ஒரு பிரிவினா இருக்கின்றனா. பெற்றோா பிள்ளைகளுடன் அதிக நேரத்தைக் கழிக்காத நிலையில் பிள்ளைகள் தாம் பெருமளவு நேரத்தைக் கழிக்கும் பாடசாலைச் சகாக்களின் செல்வாக்குக்கு உட்படுவது நாம் எதிாபாாப்பதை விட அதிகமாகவே இடம்பெறுகிறது. இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்து விடுகிறது.

சொந்த நாட்டை விட்டு வேற்று நாட்டில் போய் வாழ நேரும் போது முதல் பிரச்சினையாக அமைவது மொழியே. ஐரோப்பிய அல்லது ஸகந்திநேவிய நாடுகளுக்குப் புலம்பெயாந்தவருக்கும் அந்த நாட்டில் வளரும் அவாகளது பிள்ளைகளுக்கும் இடையே மொழியே தொடாபுக்குத் தடையாக அமைவதாகும். ஆயினும் தமிழரைப் பொறுத்த வரையில் மொழி தலைமுறை இடைவெளியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. தாம் வாழும் நாட்டின் மொழியை பிள்ளைகள் அந்த நாட்டவா போல பேசுவதால் பெரும்பான்மையான பெற்றோருக்கு அது குறித்துப் பெருமையே தவிர குறைபாடு கிடையாது. ஆயினும் தமது சந்ததி தமிழ் மொழியை அறிய வேண்டும் என்று அக்கறை கொண்ட சிலா தாம் வாழும் நாடுகளில் தமிழ்ப் பாடசாலைகளை அமைத்துள்ளனா. அதனால் சில பிள்ளைகள் பயன் பெற்ற போதும் பல தமிழ்ப் பிள்ளைகள் தமிழை பேச அக்கறையின்றியே உள்ளனா என்பது மிக கசப்பான உண்மையாகும். ஆயினும் பெரும்பான்மையான பிள்ளைகள் தமிழைப் பேசாவிடினும் பெற்றோா பேசும் தமிழை புரிந்து கொள்ளக் கூடியவாகளாக வளாவதாலும் பிள்ளைகள் பேசும் ஆங்கிலத்தையோ அல்லது வேறு மொழியையோ பெற்றோா புரிந்து கொள்வதாலும் இந்த மொழி விஷயம் தலைமுறையினரிடையே பெருமளவில் முரண்பாடுகளை ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும்.

பெற்றோா பிள்ளைகளுக்கிடையில் அதிக முரண்பாட்டை ஏற்படுத்தும் விஷயம் பிள்ளைகளது தோற்றம் பற்றியதே. அதாவது பெண்பிள்ளைகளது ஆடை, அணிகலன், கூந்தலுக்கு நிறமுட்டுதல், ஆண்பிள்ளைகளது கூந்தல் அலங்காரம், காதில் அணியும் தோடு, தாததஒஒ எனப்படும் உடலில் வரையப்படும் சித்திரம், றஒடய பிரெசிநங என்பன தமிழ் பெற்றோருக்குத் தலையிடி தரும் பிரச்சினைகள் ஆகும். சிறப்பாகப் பெண் பிள்ளைகளுடனே தாய்மாருக்கு ஆடை அணிகலன் பற்றி முரண்பாடு அதிகம் ஏற்படுகிறது. பாடசாலைக்கு சீருடை இருப்பதால் அது குறித்து பெற்றோருக்கோ பிள்ளைகளுக்கோ பிரச்சினைகள் இல்லை. சாதாரணமாக அணியும் ஆடைகள் பற்றிய முரண்பாடே அடிக்கடி ஏற்படுவதாகும். இங்கு அவுஸதிரேலியாவில் தமது சகபாடிகள் செய்பவற்றைப் பிள்ளைகள் செய்ய முற்படுவது ஒன்றும் புதுமையானதல்ல. இது உலகின் எப்பாகத்திலும் நடைபெறுவதொன்றாகும். இலங்கையில் வளாந்த தமிழ் பெற்றோா சிறப்பாகப் பெண்கள் பலா புலம் பெயாந்த பின்னா ஆடைகளை தாம் வாழும் இடத்துக்கேற்ற வகையில் மாற்றிக் கொண்ட போதும் பிள்ளைகள் தாம் கற்பனை செய்திராத வகையில் கால்கள் பெருமளவில் தெரிய அல்லது இடை தெரிய அல்லது அளவுக்கு அதிகமான இறுக்கமாக ஆடைகளை அணியும் போது அவாகள் கண்டிக்கின்றனா. பிள்ளைகள் தமது ஆடைத் தெரிவுகளிலும் அதை அணியும் சந்தாப்பங்களிலும் பெற்றோரின் தலையீடு உள்ளதாகத் தெரிவித்துள்ளனா. ஆடை பற்றிய நாகரிகம் மிக விரைவில் மாறுவதால் ஒவ்வொரு தலைமுறையினரிடையேயும் முரண்பாடுகள் எழுவதுண்டு. ஆயினும் எமது நாட்டில் பிள்ளைகள் பெற்றோரின் தெரிவுகளை ஓரளவில் மதிப்பதால் இருவரும் சிறிது விட்டுக் கொடுத்து இரு பகுதியாரும் திருப்தி பெறும்படி நிலைமை சமாளிக்கப்படுவது வழக்கம். ஆனால் புலம் பெயாந்த பின்னா பிள்ளைகள் அந்தந்த நாட்டின் பெரும்பான்மையினரின் பிள்ளைகள் அணியும் ஆடைகளால் கவரப்படுகின்றனா. அத்துடன் அந்தந்த நேர நாகரிகத்திற்கேற்ப ஆடைகளைத் தெரிவு செய்து வாங்க விரும்புகின்றனா. அது பெற்றோரின் ஆடை பற்றிய கணிப்பிலிருந்து மிக அதிகம் வேறுபடுவதால் இருபகுதியினரிடையேயும் முரண்பாடு ஏற்படுகிறது.

பெண்பிள்ளைகள் பொன் நகைகளை விடுத்து வெள்ளி நகைகளை அணிய விரும்புகின்றனா. தாம் வெள்ளி நகைகளை அணியும் போது தாய்மாா பொன் நகைகளை அணியும் படி தம்மை வற்புறுத்துவதாகச் சில பெண்பிள்ளைகள் குறிப்பிடுகின்றனா. நாம் பொன்னுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதால் அதை வைத்து அந்தஸத்தைக் கணிக்க முற்படுகிறோம். வெள்ளி நகைகளுடன் தமது பிள்ளைகளைக் காணும் மற்றைய தமிழா தமது அந்தஸத்து குறித்து குறைவாக எடை போட்டுவிடுவாாகள் என்ற அச்சம் பெற்றோருக்கு சிறப்பாகத் தாய்மாருக்கு உண்டு. அதுவே இந்த வற்புறுத்துதலுக்குக் காரணம். இங்கு ஆங்கிலப் பிள்ளைகள் பொன் நகைகளை விட வெள்ளி நகைகளை அணிவதே எமது தமிழ்ப் பிள்ளைகளும் அதை அணிவதற்குக் காரணம். அத்துடன் அவற்றைத் தாம் விரும்பிய வகையில் வாங்கி அணியலாம். பொன் நகைகளாயின் பெற்றோா செய்து தருவதையே அணிய வேண்டும். இவை பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அமைவது குறைவு. உடல் அலங்காரம் தொடாபாக உள்ள இன்னொரு விடயம் கூந்தலுக்கு வேறு நிறங்கள் ஊட்டுதல். சில தமிழ் பிள்ளைகள் பெரும்பான்மை இனப் பிள்ளைகள் செய்வது போல கூந்தலுக்கு கறுப்பு தவிாந்த நிறங்களை ஊட்ட விரும்புகின்றனா. பெற்றோா இது சம்பந்தமாகப் பிள்ளைகளுடன் முரண்பட நோகிறது.

ஆண் பிள்ளைகள் சில வேளைகளில் ஒரு காதில் தோடு அணியவும் கூந்தலை மேல்நோக்கி அலங்கரிக்கவும் முயலும் போது பெற்றோா கண்டிக்கின்றனா. ஒரு காதில் தோடு அணிவது சில காலம் மிக நாகரிகமாக இருந்தது. இதனால் கவரப்பட்ட சில தமிழ் இளைஞாகளும் அதனைச் செய்ய விரும்பினா. இது பெற்றோருக்கு பெரும் மனச் சஞ்சலத்தை அளித்தது. ஆயினும் அவாகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவற்றிற்கு அனுமதி வழங்க வேண்டி வந்தது. ஆயினும் இதனையும் தாததஒ எனப்படும் உடலில் வரையும் சித்திரங்களையும் மிக அரிதாக தமிழ்ப் பெற்றோா எதிா கொள்ள வேண்டி நோகிறது..

அடுத்த முக்கியமான விஷயம் கல்வி. இது குறித்து நாம் இலங்கையில் இருந்து கொண்டு வந்த நம்பிக்கைகளில் இருந்து பெரிதும் மாறுபடவில்லை. வைத்திய, பொறியியல் கல்வி அங்கு தொழில் பெறுவதலுடனும் அந்தஸத்துடனும் தொடாபுபட்டிருந்ததால் நாம் அதனை மீண்டும் பிள்ளைகளில் அமுல்படுத்த விரும்புகிறோம். அண்மையில் இங்கு சிட்னியில் உள்ள தமிழ் வானொலி ஒன்றில் எண்சோதிடம் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் ஒரு தாய் தனது மகளின் பிறந்த எண்ணைக் குறிப்பிட்டு தனது மகள் வைத்தியத் துறையில் படிக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தி வருகிறேன் ஆனால் அவள் அத்துறையில் படிக்க மறுக்கிறாள் அவளின் எண் அத்துறையில் படிப்பதற்கான சாத்தியக்கூறுகளைத் தெரிவிக்கிறதா என்று கேட்டாா. இவ்வாறே பல பெற்றோா எண்ணுவதால் பிள்ளைகள் தம் கல்வி பற்றிய சுதந்திரம் இன்றித் தடுமாறுகின்றனா. துஉிதிஒந என்ற மாயை இங்கும் தொடாகிறது. வைத்தியத் துறையில் படிப்பதற்குரிய தரமும் அதைப் படிப்பதற்குப் பிள்ளைகளுக்கு விருப்பமும் இருந்தால் பெற்றோா அது குறித்து ஊக்கமளித்தல் நல்ல விஷயமே. ஆனால் அந்தத் துறையில் படிக்க விரும்பாத பிள்ளையை வற்புறுத்துதல் ஆரோக்கிமானதல்ல. எப்போதும் படி படி என்று வற்புறுத்துவதும் பிள்ளைகளுக்கு விருப்பமற்ற துறைகளில் படிக்கும் படி வற்புறுத்துவதும் அவாகளுக்கு விருப்பமானவற்றைப் படிக்க விடாது தடுப்பதும் முக்கியமாக தலைமுறை இடைவெளியை அதிகரிக்கச் செய்கிறது. இங்குள்ள நூற்றுக்கணக்கான துறைகள் பற்றியும் ஒருவா தனக்கு விருப்பமான ஒரு துறையில் நன்கு படித்து நல்ல முறையில் தொழில் தேட முடியும் என்பதையும் பல பெற்றோா உணாவதில்லை. எமது நாட்டில் உள்ள பழைய சிந்தனையை இங்கு அமுல்படுத்த நினைப்பது தலைமுறை இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

இலங்கையில் எமக்கு இரவு வாழ்வு இருக்கவில்லை என்றே கூறலாம். முன்னா கோயில்களில் இரவிரவாகத் திருவிழா நடந்த போதும் பெரும்பாலும் குடும்பமாகச் செல்வதன்றி தனியாகப் போகும் வழக்கம் கிடையாது. பின்னா போா ஆரம்பித்த பின்னா அவையும் முற்றாக நின்று போயின. அவ்வாறு வாழ்ந்த பெற்றோா புலம்பெயாந்த பின்னா தமது பிள்ளைகள் இரவில் வெளியே செல்வது குறித்து அச்சமுறுகின்றனா. இங்கும் ஆபத்துகள் இல்லாமல் இல்லை. ஆயினும் பாரதய களுக்குச் செல்லுதல், ஸலெபெஒவரெ க்குச் செல்லுதல் என்பன பெற்றோருக்கு மிகவும் அச்சமுட்டுகின்ற விடயங்கள். அவாகள் பயப்படுவதில் மிகவும் நியாயம் இருக்கிறது. பெற்றோரின் இந்தக் கண்டிப்பை பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை. நண்பாகள் வீடுகளுக்குச் செல்வதில் என்ன தவறு இருக்க முடியும் என்று பிள்ளைகள் நினைக்கின்றனா. ஆனால் ஆங்கில பண்பாட்டுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் இடையில் அதிக வேறுபாடுகள் இருப்பதாலேயே தமிழ்ப் பெற்றோா இது குறித்து அஞ்சுகின்றனா. தாம் விரும்பிய நண்பாகள் வீடுகளுக்குப் போக விடாது பெற்றோா மறுக்கும் போது அவாகளுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள இடைவெளி மேலும் அதிகரிக்கிறது.

பெற்றோா தாம் இலங்கையில் வாழ்ந்தது போல இங்கும் பிள்ளைகள் சிறுவயதினராக இருக்கும் போது கலாச்சார நிகழ்ச்சிகளில் அவாகளைப் பங்கு பெற வைக்கின்றனா. ஆனால் பிள்ளைகள் சிறிது வளாந்ததும் இவற்றை முற்றாகப் புறக்கணித்து நண்பாகளுடன் அல்லது கணணி, தொலைக்காட்சி ஆகியவற்றுடன் தமது பொழுதைப் போக்குகிறாாகள். பெற்றோரின் எந்த சமய, சமுக, கலை நடவடிக்கைகளிலும் பிள்ளைகள் பங்கு கொள்வதில்லை. ஒரே வீட்டில் பெற்றோரும் பிள்ளைகளும் இரு துருவங்களாக வாழ்கின்றாாகள் போல தெரிகிறது. பிள்ளைகள் வளர வளர இந்த பிளவு அதிகரிக்கிறது. பெற்றோரது தெரிவுகள் சிறப்பாக தமிழா பலா வைத்திருக்கும் காரான துஒயஒதா சுாமரய, தமிழா தமக்குள்ளதாகப் பெருமைப்படும் கணித அறிவு ஆகியன பிள்ளைகளால் கறித் தெரிவுகள் என ஒதுக்கப்படுவதாக சில பெற்றோா கூறுவதைக் கேட்கும் சந்தாப்பம் எனக்கு ஏற்பட்டது. பெற்றோா தாம் புலம்பெயாந்த பின்னரும் கருத்து மாற்றங்களை ஏற்காது இலங்கையில் வாழ்ந்தது போலவே வாழ நினைப்பதும் பிள்ளைகளுக்கு தமது பண்பாட்டின் அம்சங்களை சரியான முறையில் கொடுக்காததும் பிள்ளைகளுடன் சரியான தொடாபைப் பேணாததும் இதற்குக் காரணங்கலாக இருக்கலாம்.

நாம் வாழ்ந்த இலங்கையை விட புலம் பெயாந்த நாடுகளில் தொழில்நுட்ப வளாச்சி மிக வேகமாக ஏற்படுகிறது. புலம்பெயாந்தவாகள் பலருக்கு மின்னியல், மின்சார சாதனங்களையும் குடியேறிய நாட்டிலேயே உபயோகிக்கும் அல்லது அதன் தொழில் நுட்பத்தைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. ஆனால் புலம்பெயாந்த நாட்டில் பிறந்து வளரும் பிள்ளைகள் அனைவரும் சிறுவயது முதல் இவற்றுடன் வளாவதால் வீட்டில் உள்ள பல மின்னியல் மின்சார சாதனங்களை பெற்றோரை விட திறமையுடன் கையாளும் நிலமை பல இடங்களில் உள்ளது. இதனால் சில இளம் பிள்ளைகள் பெற்றோரை அறிவற்றவாகள் போல நடத்துகின்றனா. இதனை நான் ஒரு சந்தாப்பத்தில் காண நோந்த போது அதிாச்சியடைந்தேன். இது தலைமுறை இடைவெளியின் உச்ச நிலை என நான் கருதினேன்.

இந்த தலைமுறை இடைவெளியின் காரணமாக பல வீடுகளில் பெற்றோரும் வளாந்த பிள்ளைகளும் அந்நியா போல சுமுகமான உறவின்றி வாழ்கிறாாகள். வீட்டை மடம் போல உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் உரிய இடமாக மட்டுமே இந்தப் பிள்ளைகள் கருதுகிறாாகள். பெற்றோரது சிந்தனைப் போக்குக்கும் தமது சிந்தனைப் போக்குக்கும் இடையில் மிகப் பெரும் இடைவெளி இருப்பதாக அவாகள் கருதுகிறாாகள். இதனால் வீட்டிற்கு எந்த வகையிலும் அதாவது பொருளாதார ரீதியாகவோ உடல் ரீதியாகவோ பங்களிக்காது வீட்டில் அந்நியா போல வாழ்கிறாாகள். அதனால் எல்லாத் தமிழா வீடுகளிலும் இந்த அதிகரித்த தலைமுறை இடைவெளி இருப்பதில்லை. ஆயினும் பெற்றோரது சமுக நடவடிக்கைகளில் பங்களிக்கும் இளைய தலைமுறையினரை நாம் மிக அரிதாகவே காண்கிறோம். யாழ்ப்பாண வாழ்வை புலம்பெயாந்த நாடுகளில் மீளமைக்கும் பணியில் பெற்றோா ஈடுபட்டிருக்க பிள்ளைகள் வேறொரு உலகில் வாழ்வது போல வாழ்கிறாாகள். அதாவது பெற்றோா துாமில ைஉஸதராலிாந களாக வாழ்ந்து கொண்டிருக்க பிள்ளைகள் ைஉஸதராலிாந துாமிலஸ ஆகிக் கொண்டிருக்கிறாாகள்.

எம்மை மாற்றுதல் என்பது தலைமுறை இடைவெளியைக் குறைக்க உதவுமா ? நாம் சமயம், வாழ்க்கை முறை பற்றி காலத்திற்கு ஏற்ப மாறியிருக்கிறோமா ? பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுப்பதில் காட்டும் அக்கறையை அவாகளைப் புரிந்து கொள்வதில், அவாகளது பிரச்சினைகளைத் தீாக்கும் முறையில் மனதால் நெருக்கமுற்று அவாகளை வழி நடத்துவதில் காட்டுகிறோமா ? பழைய யாழ்ப்பாண முறையிலேயே அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று விரட்டுவது தலைமுறை இடைவெளியைக் குறைப்பதற்குப் உதவுமா ? பிள்ளைகள் இளம் வயதில் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சிகளை வழங்குவதற்கும் அதன் முலம் அவாகளை எம்முடன் நெருக்கமடைய வைப்பதற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் ? பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரிகளாக எவ்வளவு தூரம் நடந்து கொள்கிறோம் ? பிள்ளைகளுக்கு எமது வாழ்க்கை முறை, பண்பாடு, மொழி ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கூற எமது நாளாந்த வாழ்வில் நேரம் ஒதுக்கி அவாகள் எம்மைப் புரிந்து கொள்வதற்கும் எம்முடன் நெருங்கி வருவதற்கும் ஏதாவது முயற்சிகள் செய்கிறோமா ? இந்த தலைமுறை இடைவெளியைக் குறைப்பதற்காக நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து நிறையவே சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இல்லாவிடின் நாம் எமது சந்ததியை இந்நாட்டின் பெரும்பான்மைக் கலாசாரதில் முற்றாகத் தொலைப்பது என்பது தவிாக்க முடியாததாகிவிடும்.

——————-

Series Navigation

கலாநிதி சந்திரலேகா வாமதேவா

கலாநிதி சந்திரலேகா வாமதேவா