பெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

பால் ரேசெர்


பெரு வெடிப்பு (Big Bang)க்குப் பின்னர் தோன்றிய சூரியன்கள் (நட்சத்திரங்கள்) மாபெரும் அதிவெப்ப ராட்சச சூரியன்களாக இருந்தன. அதன் பின்னர் சிறிது காலத்துக்குப் பின்னர் பெரும் சூப்பர்நோவாக்களாக வெடித்துச் சிதறின. சூப்பர் நோவாக்களாக வெடித்துச் சிதறிய இந்த சூரியன்களே இன்று இருக்கும் சூரியன் மற்றும் பூமி போன்ற கிரகங்களின் அடிப்படை செங்கற்களாகவும் ஏன் உயிர் தோன்றவும் இன்றியமையாத அடிப்படை செங்கற்களாக இருக்கும் தனிமங்களை உருவாக்கித் தந்தன என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

நடப்பில் இருக்கும் தேற்றம், பேரண்டம், பெருவெடிப்பில் தோன்றுகிறது என்றும், இந்த பெருவெடிப்பு சிறு தூசியாக இருந்த பேரண்டம் ஒரு சிறு வினாடி துணுக்கில் வெப்பமும் கதிரியக்கமும் வீசும் பேரண்டமாக வெடித்து பெரிதாகியது என்றும் கூறுகிறது. அந்த வெப்பம் குறைந்து முதலாவது நட்சத்திரங்கள் தோன்ற 300 மில்லியன் வருடங்கள் ஆயின என்றும் இது கூறுகிறது.

ஆனால், இது நமது பூமியின் நட்சட்த்திரமான சூரியன், மற்றும் பேரண்டத்தில் இருக்கும் எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு வேறு கதை.

‘ஆரம்ப நட்சத்திரங்கள் எளிமையான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனவை ‘ என்று வோல்கர் ப்ராம் என்ற ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் வானவியல் இயற்பியல் மையத்தில் பணிபுரியும் வானவியலாளர் கூறுகிறார். ‘பேரண்டமே தெளிவானதும் போரடிப்பதுமாகவும் இருந்தது ‘ என்று கூறுகிறார். இந்த பேரண்டம் சிக்கலானதும் உயிர்ததும்பும் இயங்கிசை கொண்டதுமாக ஆகத் தேவையான அடிப்படைப் பொருட்கள் அப்போது இல்லை என்று கூறுகிறார்.

சூப்பர் கணினிகளைக் கொண்டு நட்சத்திர தோற்றம் வளர்ச்சி மற்றும் அழிவுக்கான மாதிரிகளை உருவாக்கிய ப்ராம் மற்றும் ஆப்ரஹாம் லோயப் ஆகியவர்கள், தங்களது கண்டுபிடிப்புகளை அமெரிக்க வானவியல் குழுமத்தில் சென்ற செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்கள்.

ஆரம்ப நட்சத்திரங்கள் மாபெரும் அளவினதாகவும், அதிவெப்பமும் குறைந்த ஆயுளும் உடையவையாகவும் இருந்தன. ஒரு சில மில்லியன் வருடங்களுக்குள் இவை உள்ளுக்குள் உடைந்து சூப்பர்நோவாக்களாகச் சிதறின என்று கூறுகின்றனர்.

இந்த நட்சத்திர வன்முறையே அதிக எடை கொண்ட தனிமங்களை உருவாக்கியது. இந்த தனிமங்கள் பேரண்டத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டன. என்று பிராம் கூறுகிறார். ஆக்ஸிஜன், கார்பன், இரும்பு ஆகிய தனிமங்கள் தோன்றி இவை அடுத்த தலைமுறை நட்சத்திரங்களின் அடிப்படையாக அமைந்தன.

அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் கார்பன், ஆக்ஸிஜன் ஆகியவைகள வளமையுடன் இருந்தாலும் அவற்றில் மிகக்குறைந்த அளவே இரும்பு இருந்தது. இந்த நட்சத்திரங்கள் முந்தைய தலைமுறை நட்சத்திரங்களை விட அதிக காலம் இருந்தன. ஆனால், எந்த விதமான கிரகங்களும் இல்லாமல் தனிமையில் நீண்டகாலம் வாழ்ந்தன.

‘இந்த நட்சத்திரங்கள் சூரியனைப் போலவே இருந்தன. ஆனால் மிகவும் தனிமையில் துணையின்றி இருந்தன. ‘ என்று பிராம் கூறுகிறார். கிரகங்கள் தோன்ற தேவையான அதிக எடை கொண்ட தனிமங்கள் தேவைப்படும் அளவுக்கு இல்லை என்று கூறுகிறார். ஆகவே இந்த தனிமையில் வாழ்ந்த நட்சத்திரங்கள் தனிமையிலேயே இறந்தன.

இவைகளும் சூப்பர் நோவாக்களாக வெடித்துச் சிதறின. இந்த சூப்பர் நோவாக்களும் இன்னும் அதிகமான அதிஎடை உலோகங்களை உருவாக்கின. ஆகவே இறுதியில் நீண்டகாலம் வாழும் நட்சத்திரங்கள் ஏராளமான கிரகங்களும் கொண்டவையாக தோன்றின. இன்று நமக்குத் தெரிந்த அளவில், பூமியில் எல்லா தேவையான உலோகங்களும், சரியான இடத்துக்கு வந்து உயிர் தோன்ற ஏதுவாக இருந்தது.

உயிர் வாழத் தேவையான ஜன்னல், பெரு வெடிப்புக்கு பின்னர் சுமார் 500 மில்லியனிலிருந்து 2 பில்லியன் வருடங்கள் கழித்து தோன்றியது என்று கூறுகிறார் லோயப்.

கிரகங்கள் தோன்ற சரியான சூழ்நிலை எது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று பிராம் கூறுகிறார்.

எந்த சூழ்நிலையில் கிரகங்கள் தோன்றுகின்றன என்பது இன்னும் ஒரு கேள்விக்குறி. தன் விடை இன்னும் எங்களுக்குத் தெரியாது என்று கூறுகிறார்.

ஆனால் எது தெளிவாக இருக்கிறது என்றால், முதன் முதலில் தோன்றிய நட்சத்திரங்கள் பிற்கால மற்றும் இன்றைய பேரண்டத்துக்கான் சூழ்நிலைக்கு மிகவும் காரணமாக இருக்கின்றன என்பது.

‘நாம் இன்று இருக்க நேரடியாக நமது சூரியன் தோன்றுவதற்கு முன் தோன்றி மறைந்த எத்தனையோ நட்சத்திரங்களுக்கு கடன் பட்டிருக்கிறோம் ‘ என்று கூறுகிறார்.

நமது சூரியக்குடும்பம் மட்டுமே இது நடந்த ஒரே இடம் அல்ல. ஏறத்தாழ நமக்குத் தெரிந்து 100 சூரியன்களைச் சுற்றி கிரகங்கள் இருக்கின்றன. இத்தனை கிரகங்களிலும் ஏராளமான அதிக எடை கொண்ட உலோகப் படிவங்கள் இருக்கின்றன.

**

Series Navigation

பால் ரேசெர்

பால் ரேசெர்