பெரியபுராணம் – 7

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

பா.சத்தியமோகன்


76.

குவிந்த நெற்குவைகள் அரசுக்கு றில் ஒருபங்கு செலுத்தின அறங்கள்செய்தன
தெய்வத்தைப்போற்றி தென்புலத்தாரையும் விருந்தினரையும் ஓம்பின
சுற்றத்தார் சொந்தங்கள் குடிகள் ஓங்கின
மலைபோன்ற மாடங்கள் மலர்ந்துள்ளன

77.

உழவர் கரும்பைக்காய்ச்சுவதால் எழும்லைப்புகை-
மங்கையர் தம் கூந்தலை உலர்த்த ஊட்டிய அகில் தூபமோ!
பெரும் வேள்விச் சாலையினின்று எழும் புகையோ!
அதனால் வானில் பரந்தொழுந்த முகிலோ !எனச் சூழ்ந்தது
மாலத்தையும் சோலைகளையும்.

78.

எங்கும் தென்னை செருத்தி மணமுடைய நரந்த மரம்
எங்கும் அரசு, கடம்பு, பச்சிலை மரம், குளிர் மலர் குராமரம்
எங்கும் வலிய அடிப்பாகமுடைய பனை , சந்தனம், குளிர் மலரையுடைய நாகம்
எங்கும் நீள் இலை உடைய வஞ்சி, காஞ்சி, நிறைமலர் உடைய கோங்கு மரம்.

79.

எங்கும் மாமரங்கள் எங்கும் பாடல் மரங்கள்
எங்கும் மலர்கள் மிக்க சுரபுன்னை மரங்கள் ஞாழல் மரங்கள்
எங்கும் சாதிப்பூக்கள் முல்லை அனிச்சம் குருக்கத்தி சரளம்
எங்கும் மகிழ மரங்கள் சண்பக மரங்கள் விரியும் தாழைகள் கமுகு புன்னை.

80.

மங்கல வினைகள் எங்கும் மணஞ்செய்வதால் ரவாரம் எங்கும்
மங்கையர் தாமரை முகங்கள் எங்கும்
அவர்கள் மழலைச் சொல்லால் பண்ணிசை எங்கும்
பொங்கும் ஒளி அணிகலன்கள் எங்கும்! புதுமலர் பந்தல்கள் எங்கும்
செங்கயல் நிறைந்த வயல்கள் எங்கும்! திருமகள் வாழும் இடங்கள் எங்கும்.

81.

மேகமும் களிறும் எங்கும் ; வேதம் ஓதுதலும் பயிலுதலும் எங்கும்
யாகமும் அங்கும் எங்கும்; இன்பமும் மகிழ்வும் எங்கும்
யோகமும் தவமும் எங்கும்; ஊஞ்சலும் அவை டும் தெருவும் எங்கும்
போகமும் பொலிவும் எங்கும் ; புண்ணிய முனிவர் எங்கும்.

82.

குறிஞ்சித் திணைக்கு ஏற்ற பண் தரு வீணைகள் எங்கும்
பாதங்களில் ஊட்டிய செம்பஞ்சுக் குழம்பு வகை அணிகலன்
மற்றும் அதன் சுவடு எங்கும்
வண்டுகள் ஒலிக்கும் கூந்தல்கள் எங்கும்
இசை முழங்கும் வேய்ங்குழல்கள் எங்கும்
வேதமறைகள் அடியார்தம் இருப்பிடம் எங்கும்
த்தியும் பலாமரங்களும் பூஞ்சோலைகள் எங்கும்.

83.

யானைக் கன்றுகள் எங்கும்
மலர்களின் உள்ளிடங்களில் வண்டுகள் குடையும் எங்கும்
பாடல்கள் பாடும் அழகிய மனைகள் எங்கும்
பெண்கள் டும் அம்மானை எங்கும்
நீண்ட கொடிகள் எங்கும் நதிகளால் சேர்ந்த சேமநதி எங்கும்
இதழ்கள் செறிந்த மாலைகள் எங்கும்
காதலர் காதலி வரிசைகள் எங்கும்.

84.

கோவில் விழாக்களில் வீதிகளில் விழாவின் ர்ப்பும்
விருப்பமாய்ச் செய்த விருந்தோம்பலின் ர்ப்பும்
தத்தம் நெறிதவறா சாதியினரும் பிள்ளைகளும்
பகை மறந்து பறவைகளும் விலங்குகளும் கூடியே
இறையின் ஐந்தெழுத்தை ஒதும்
பிறவிப்பிணி அதனால் அஞ்சும்.

85.

நற்றமிழ் வழங்கும் எல்லைக்குள்
நாம் பேசும் திருநாடானது
பெருந்தோள் வலிமையால் வையம் காக்கும்
கொற்றவன் அநபாய சோழன் குடை நிழலில் குளிர்வதென்றால்
இன்னும் மற்ற பெருமைகளை வரம்பு கட்டி விளம்பதாகுமோ.

4.
திரு நகரச் சிறப்பு

86.

புகழ்நாடு பலவற்றிலும் பழமையுடையது
நிலைபெறும் திருமகள் வணங்கியது
வன்னி இலையும் கங்கையாறும் பிறை பொதிச் சந்திரனும் தங்கிய
சிவந்த சடைத் தியாகராயர் எழுந்தருளியது திருவாரூர் எனும் திருநகர்.

87.

வேதஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் டல் மணி முழவு ஓசையும்
கீதவோசையுமாய்க் கிளர்வுற்றதே

88.

பலவகைப்பட்ட இசைகளின் பரந்த ஒலியுடன்
செல்வம் நிறைத்தெருக்களிலே தேரின் ஒலி
செழுமையான யானையின் குதிரையின் ஒலி
எல்லையின்றி எழுந்ததே எங்கணும்.

89.

மாடம், செங்குன்று, நிலாமுற்றம், மண்டபம்
கூடம் ,சாலைகள், கோபுரம், திண்ணை, பலகணி
நீண்டசாளரம் கிய எங்கும்
டும் மங்கையரின் அழகிய சிலம்பு ர்க்கும்

90.

சிவனும் அவனடியாரும் அல்லாரை
பதியிலார் எனப்பெயரிடும்
அரிய மாளிகைகளில் ஒன்று
இறைவனின் ஒருபாகமாம் உமையம்மையின் தோழிகளுள் ஒருவரான கமலினியார்
அவதரித்த பேறு பெற்றதெனில் உரைகளுக்கு என்ன அளவு !

— திருஅருளால் தொடரும்.

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation