பெரியபுராணம் -122 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

பா.சத்தியமோகன்


3509.

மயக்கம் அடைந்திட்ட

தனது நண்பர் நம்பி ஆரூரர் உய்யும் பொருட்டு

தமது திருவாக்காகிய

இனிமையும் உண்மையும் இன்பமும் பொருந்திய

அமுதத்தை அருளிய சிவபெருமானிடம்

“வருத்தம் உண்டாக்கிய கலக்கத்தை நீக்கினீர்

உமது திருவடித் தொண்டரான என்னை

அச்சம் போக்கி இப்படி அல்லவா தொண்டு கொள்ள
வேண்டும்”

என்று மகிழ்ந்து துதித்தார் நம்பி ஆரூரர்.

3510.

அடியாரிடம் கருணை பெருகிய இறைவர்

மீண்டும் சென்றார்

அவரைப் பின் தொடர்ந்து

சிறிது தொலைவு சென்று வணங்கிவிட்டு

நம்பி ஆரூரர் மயக்கத்துடன் மீண்டார்

திரும்பினார்

முன்பு

உடன் செல்லாதவர்களும் பின் செல்ல

பொன் போல விளங்குகிற

புரிந்த சடை உடைய இறைவர்

பரவையாரின்

புனித திருமாளிகையில் போய்ச் சேர்ந்தார்.

3511.

பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியுடைய பரவையார்

மறையவராய் வந்த இறைவர் போன பின் –

“முதிய மறை முனிவர் கோலத்துடன் வந்தவர்

அருளுடைய இறைவரே ஆகும்

முதல்வரே ஆகும்!” என்ற

அதிசயம் பலவும் உண்டானதை உணர்ந்தார்

அறிவில்லாமல் அஞ்சினேன் கெட்டேன்

எம் பெருமானாகிய சிவபெருமான் முன்பு

மறுத்து

எதிர்மொழி பேசிவிட்டேனே!!” எனவும்
வருந்தினார் –

3512.

கண் உறக்கம் வரவில்லை

கொடிய விதமாக வருந்திச் செயலிழந்தார்

இங்கு

இன்று

தேவர்களின் தலைவனாகிய சிவபெருமான்

தனது தோழர் நம்பி ஆரூரருக்காக

அர்ச்சகர் கோலம் தாங்கி வந்தவரை

நான் இன்னார் எனத் தெரியாத பாவியேன் என

ஒள்ளிய விளக்கமுடைய வாயிலை நோக்கியபடியே

தோழிகளுடன் உள்ளம் அழிந்து வருந்தினார்

3513.

மணம் கமழும்

கொன்றைமலர் சூடிய சடை கொண்ட

விமலராகிய இறைவர்

பார்த்ததும் தன்னை அறிவுறுத்தும் கோலத்தோடு

அளவிலாத பூதகணநாதர்களோடு

நெருங்கிய தேவர்களோடு

யோகர்களும் முனிவர்களும் சூழ

குற்றமிலாத சிறப்புடைய

பரவையாரின் மாளிகையில் புகுந்தார்.

3514.

பார்த்ததும் தன்னை அறிவுறுத்தும் கோலத்தோடு

அளவிலாத பூதகணநாதர்களோடு

நெருங்கிய தேவர்களோடு

யோகர்களும் முனிவர்களும் சூழ

குற்றமிலாத சிறப்புடைய

பரவையாரின் மாளிகையில் புகுந்தார்.

3514.

பூதகணத்தலைவர்கள் உள்பட

பலவகைப்பட்ட கணநாதர்களும்

தேவர்களும் முனிவர்களும்

சித்தர்களும் இயக்கர்களும் நிறைந்துவிட்டதால்

பேரரருளானாகிய சிவபெருமான் எழுந்தருளிய அந்த
மாளிகை

சிறப்புமிக்க தென்திசைக்கயிலை மலையைத்

தன்னிடம் கொண்ட

வெள்ளித் திருமலை போல விளங்கியது.

3515.

ஐயராகிய சிவபெருமான்

அங்கு எழுந்தருளியபோது

அகில லோகத்தில் உள்ளவர்களும் கூடி

நெருங்கிச்

சூழ எதிர்கொண்டதைக்கண்டு வரவேற்றதும்

பரவையார்

தமது உடலில் நடுக்கமும் எய்தினார்

அதனை மிஞ்சும் மகிழ்ச்சியும் பொங்கியது

அவரது செம்மையான திருவடி முன்பு

விரைந்து சென்று வணங்கி வீழ்ந்தார்.

3516.

திருமாலுக்கும் நான்முகனுக்கும்

அறிவதற்கு அரிய சிவபெருமான்

ஆயிழையாகிய பரவையாரை நோக்கி

“தோழன் என்ற உரிமையால்

நம்பி ஆரூரன் ஏவியதால்

மீளவும் யாம் உன்னிடம் வந்தோம்

மணமுடைய கூந்தல் கொண்ட பெண்ணே

முன்பு போல மறுத்துவிடாதே

உன்னைப்பிரிந்து வருந்தும் நம்பி

உன்னிடம் வரப்பெற வேண்டும்” என்றார்

(ஆயிழை- பெண்)

3517.

அகன்ற

பெரிய கண்களையுடைய பரவையார்

சிவபெருமான் முன் மிகவும் அஞ்சினார்

வருந்திய உள்ளத்தோடு

மலர் போன்ற கரங்களைக்

கூந்தல் மேல் கூப்பி

“முன்பு நான் செய்த தவத்தின் பயன்போல

இப்போது எழுந்தருளிய தாங்கள்தானா

முன்பு

அரிய மறை முனிவரான

அருச்சகர் கோலமுடன் வந்தீர்”

3518.

துளித்துளியாக துளிர்த்த கண்ணீர் வழிய

தொழுது

இவ்விதமாக விண்ணப்பம் செய்தார்

“ஒளி வளர்வதற்கு இடமான பாதம் வருத்தமுற

ஒரு இரவு முழுதும்

மாறாமல் நிலை பெற்ற அன்புடைய அடியாருக்காக

அங்கும் இங்கும் உழன்றீர் அலைந்தீர்

இத்தனை எளியவராக எழுந்தருள்வீரானால்

சம்மதிக்காமல் என்ன செய்வேன்”

3519.

“நங்கையே

நின் உயர்ந்த தன்மைக்கு ஏற்றவாறு சொன்னாய் “என்று

மங்கையை ஒரு பாகத்தில் கொண்ட

வள்ளலாரான சிவபெருமான் விரைந்து சென்றார்

பிறைச்சந்திரன் போன்ற நெற்றியுடைய பரவையார்

இறைவரின் பின்னாலேயே சிறிது சென்றார்

வணங்கினார் திரும்பினார்

எங்களை ஆட்கொள்ளும்

நம்பி ஆரூரரின் தூதரான இறைவர்

பரவையாரிடம் விடைபெற்று

சுந்தரரிடம் மீண்டும் சென்றார்.

3520.

ஆதியும் திருமாலும் தேடி அடைந்தும்

அருள் செய்யாத இறைவர்

தாமே தூதராக சென்று

தொண்டரை ஆளும் அருட்செயலைப் பார்த்து

அனுபூதியில் சிறந்து விளங்கும்

சிவகண நாதர்களும் புகழுடைய வீரர்களும்

அந்த வீதியில்

ஆடினர் பாடினர்

மகிழ்ச்சியுடன் நெருங்கி –

3521.

அத்தகையவர் —

முன்னாக

பின்னாக

பக்கங்கள் எங்கிலுமாக

சார்ந்து வந்தனர்

மின்னல் ஒத்த இடை உடைய பரவையாரிடம்

தம் அன்பராகிய சுந்தரரைச்சேர்க்கும் விரைவுடனும்

தம் தலையில் ததும்பும் கங்கையுடனும் சேர்ந்தார்

திருவாரூரை ஆள்கின்ற தியாகராசர்.

3522.

அன்பராகிய நம்பி ஆருரர்

“ என்னிடம் என் உயிர் சேர்க்கிறேன் என

பொறுப்பு ஏற்றுச்சென்ற சிவபெருமான்

இனியும் என்ன செய்து திரும்பப்போகிறாரோ ! ”

என்ற வருத்தம் கொண்டார்

பொன்போன்ற முந்நூலாகிய

பூநூல் மார்புடைய இறைவர் சென்றதால்

பொலிவு பெற்ற வீதியையே பார்த்தபடி

தம் கண்களை

இமைக்காமல் இருந்தார்

3523.

சுந்தரராகிய நம்பிஆருரர்

அந்நிலையில் இருக்கும்போது

மன்மதனின் அம்புகள் விழப்பெற்றார்

அப்போது

உயிரைத்தந்தருளும் தமது பெருமான் வரப்பெற்றார்

அவரது திரு உருவம் முன்பு சென்றார்

மூவுலகங்களும் செல்ல்க்கூடிய அவரது திருவடிகளை

தலையில் வைத்துக்கொண்டு

என்ன சொல்வதன்றே தெரியாமல் ஆனார்

3524.

“ எம்பெருமானே

என் உயிரைக் காவல் செய்யாமல்

இடர் செய்யும்

கொம்பு போன்ற பரவையாரிடமிருந்து

இந்தமுறை

என்ன குறை கொண்டு வந்தீர் ?”

என்று வினவியதும் –

சிவபெருமான் –

“ தாழ்ந்த கூந்தலை உடைய பரவைக்கு

புலவியால் ஏற்பட்ட சினத்தைத் தணித்தோம்

நம்பியே!

இனி

நீ சென்று அவளை அடைக”

என அருளிட –

3525.

நந்தி என்ற பெயருடைய எம் இறைவர்

இவ்விதம் நலம் பொழிந்தார்

நன்மை ஏற்ற உள்ளத்தில் ஆர்வம் வந்தது

மகிழ்ச்சி வந்தது

உடனே –

“ பந்தமும் வீடுபேறும் அருள் செய்தீர்

என் தந்தையே

எனக்கு இனி என்ன துன்பம் உள்ளது ! ” என்றார்

3526.

என்று கூறியபடியே

தமது திருவடியில்

வீழ்ந்து வணங்குகிற நம்பி ஆரூரரின் அன்புக்கு

எளியவராகி வந்த இறைவர்

“நீ

அந்த பரவையிடம் சென்று சேர்க” என்று அருள் செய்தார்

வெற்றியும் மேன்மையும் உடைய காளை மீது எழுந்தருளி

பொன் விளங்கும் திருவாசல் உடைய

தமது பூங்கோயிலுள் புகுந்தார் இறைவர் –

உலகம் வாழ.

3527.

தம் இறைவருடன் சிறிது தூரம் பின் சென்று

தாழ்ந்து வணங்கி பிறகு

அருளால் விடைபெற்று

“எம்பெருமானின் எல்லாம் வல்ல இயல்புதான் என்னே”

என்று பொருந்திய மகிழ்ச்சியுடன்

மணம் கமழும் கூந்தலுடைய பரவையாரின்

செம்பொன் மாளிகை வாசல் நோக்கி

நம்பி ஆரூரர்

காதலுடன் விரும்பிச் சென்றார்

அப்போது –

3528.

முன்னமே உறக்கத்திலிருந்து விழித்து எழுந்தார்

பரிவாரங்கள் பக்கத்தில் சூழ

ஒளியுடைய

அழகான தெய்வமலர் மழையை தேவர்கள் பொழிய

மணம் வீசும் இனிய குளிர்நீர்த்திவலைகளுடன்

தென்றலும் எதிர்கொண்டு

சேவகம் செய்ய முன்னே வர —

3529.

மாலை குளிர்ந்த கலவைச்சாந்து

கஸ்தூரி கலந்த சந்தனம்

மிக அழகிய

பச்சைக்கற்பூரம், குங்குமம் ஆகியன உள்ள திருமேனியில்

அணிய வேண்டிய ஆடைகளையும்

தகுதியுடைய மற்றவற்றையும் தாங்கி

பரிவாரங்கள் முன்னே செல்ல —

3530

இவ்விதமாக சுந்தரர் வந்து சேர்ந்தார்

அப்போது

பொருந்திய விருப்பத்தோடு

மை வளரும் நீண்ட கண்களோடும் பரவையார்

மாளிகை அடைந்தார்

அலங்காரத்துக்குரிய சிறப்புடைய அணிகள் பலவும்
செய்து

நெய் நிறைந்த விளக்குகளையும் தூபங்களையும்

நீர் நிறைந்த குடங்களையும் வரிசையாக அமைத்து

அதன் பிறகு –

3531.

மலர்கள் பொலிந்த மணமுடைய அழகிய மாலைகளும்

மணிகள் இழைத்த மாலைகளும் புனைந்து

விருப்பம் தரும் சுண்ணம் வீசி

வாசனை வீசும் சந்தனத்தால் மெழுகி

சுற்றிலுமுள்ள தொழியர்கள் வாழ்த்திட தூய மலர்கள்
சூழ்ந்த வீதியில்

பெருமணிகள் பதித்த வாசம் முன்பு

சுந்தரரை வரவேற்க காத்திருந்தார் பரவையார்.

3532.

வண்டுகள் மொய்க்கும் கூந்தலுடைய பரவையார் முன்

வன் தொண்டரான சுந்தரர் வந்து கூடினார்

கண்டபோது

உள்ளத்தில் எழுந்த காதல் வெள்ளம் கரை காணாமல்

நாணமும் அச்சமும் மிகுதியாய்ப் பெருக அவரை
வணங்கினார்

குளிர் தளிர் போன்ற பரவையாரின் செவ்விய
கைகளைப் பற்றியபடி

மாளிகையுள் புகுந்தார் பெருமையுடைய சுந்தரர்.

3533.

சுந்தரரும் பரவையாரும் தம்பிரானாகிய இறைவர்தம்
மீது இடையில் செயல்பட்ட
திரு அருட்கருணை வெள்ளத்தை

அதன் திற்ச்த்தைப் போற்றினர் சிந்தை செய்து

இன்ப வெள்ளத்தில் அழுந்தி ஒன்றி நிலை அடைந்து

ஒருவருள் ஒருவர் பொருந்தும் நிலைமையில் இருவரும் ஒன்று
கூடி

உயிர் ஒன்றாய் ஆகினர்.

3534.

வேதமூலம் வெளிப்படும் பூங்கோயில் பொருந்தி

புற்றினை இடமாகக் கொண்டு ஆளும்

கங்fகை நீர் அணிந்த வேணியாரை

நிரந்தரமாகப் பணிந்து போற்றினார் துதித்தார்

உலகத்தினை அழகாக்கும் செஞ்சொல்பதிகக மாலைகள்
சாத்தினார்

தாமரைமலர் மாலை பூண்ட

மணியாரம் அணிந்த மார்புடைய சுந்தரர்

மகிழ்வுடன் வீற்றிருந்த அந்நாளில் –

(வேணி- சடை)

3535.

“நம்பி ஆரூரர் ஆகிய சுந்தரர்

நெஞ்சில் சிறிதும் நடுக்கம் இல்லாமல் நின்று

தம்பிரானாகிய சிவபெருமானை

ஒரு பெண்ணிடம் தூது விட்டார்”

எனும் இவ்வுலகினரின் பழி வார்த்தையை

ஏயர்கோன் கலிகாமர் கேள்வியுற்றார்

மனம் வெம்பினார் அஞ்சினார்

சொல்லத் துவங்கினார்.

3536.

“இறைவரை

நாயகனை

அவரது அடியார் ஏவும் காரியம் மிகவும் நன்று!

மிகவும் பொருத்தம்!” என்றும்

“இச்செயலை

துணிந்து செய்பவனும் ஒரு தொண்டனாம்

இது என்ன பாவம்

நான் பேய்க்குணம் மிக்கவனாய் இருப்பதால்

இதனைச் செவியானால் கேட்டபின்பும்

என் உயிர் பிரியாமல் இருக்கிறது”” என்றும்

வருந்திக் கூறினார் ஏயர்கோன் கலிகாமர்.

3537.

“ஒரு பெண்ணிடம் சேரும் காதலுக்காக

ஒருவன் ஏவிட

அதற்காக

நிலத்தின் மீது பாதத்தாமரைகள் நோகுமாறு

தேர் ஓடும் வீதியின் வழியே ஓரு இரவு முழுதும்

போவதும் வருவதுமாகி

ஒப்பில்லாத இறைவர் உழல்வாராம்” என்று கூறி –

3538.

“இறைவர் தான்

அடியார்களின் துன்பத்தைக் கண்டு

பொறுத்துகொல்ள முடியாதவராக வந்துவிட்டார்”
எனில்

இந்திரனும் திருமாலும் நான்முகனும்

நேரில் உணரவும் இயலாத

தேவர் தலைவராகிய சிவபெருமான்

ஒப்புக்கொண்டிருந்தாலும்

ஏவிய பணியை செய்வது தகுமா

இந்தப் பாவச் செயலுக்காக

மனம் நடுங்காதவனை

என் முன்பு காணும் நாள் எந்நாளோ ! “எனக்கூறி

3539.

“ஒரு பெண்ணுக்காக

தம்மை ஆளும் சிவபெருமானையே

இரவிலே தூதாக அனுப்பி அங்கே இருந்தவனை

என் எதிரே கண்டால்

என்னதான் ஆகிவிடும்” என்று

வெடிப்பது போன்று

விம்மிய உள்ளம் கொண்டவரானார்.

— இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்