பெண்ணீயம் என்பது

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

குண்டலகேசி


பெண்ணீயம் என்பது அரசியல், சமூகம், பொருளாதாரத்தில் ஆணும், பெண்ணும்

சமம் என்பதை அடிப்படையாகக் கொண்டது.

பல்வேறு காலத்தில் உருவான அமெரிக்க பெண்ணீய வகைகள் இங்கு காணீர்.

ரேடிகல் பெண்ணீயம்

ரேடிகல் பெண்ணீயம் என்பது தந்தை வழி சமூகத்தில் சமூகத்தில் உரிமைகள்

ஆண், பெண் என்று பாலியல் அடிப்படையில் பிரித்திருப்பதை எதிர்க்கிறது.

எல்லா அடிமைத்தனங்களிலும் பெண் அடிமைத்தனமே மிக மோசமானது என்று நம்புவர்கள்.

ரேடிகல் பெண்ணீயம் தந்தை வழி சமூகத்தை எதிர்க்கிறதே தவிர ஆணையே

வெறுப்பது அல்ல. இவர்கள் மார்க்ஸீய பெண்ணீயத்தையும் எதிர்ப்பவர்கள்.

மார்க்சீயவாதிகளும் பெண்களை அடிமைப்படுத்தினார்கள் என்று சொல்பவர்கள்.

சமூக புரட்சிக்காக காத்திருந்து நடக்காமலே போனதால் 70களில் காணாமல் போனது.

மார்க்சீய பெண்ணீயம்

தனி உடமை/.சொத்துரிமைக்காக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள்.

பெண் விடுதலைக்கான இவர்களுடைய தீர்வு பொதுவுடமை.

அமேசான் பெண்ணீயம்

அமேசன் பெண்ணீயம் பெண்கள் உட ரீதியாக பலவீனமானவ்ர்கள் என்பதை

மறுப்பது. அமேசன் பெண்ணீயவாதிகள் பெண்கள் ராணுவத்திலிருந்து, கட்டட

வேலை வரை அனைத்து வேலைகளிலும் பெண் பங்கு பெறலாம் என்று

சொல்வார்கள்.

கலாச்சாரப் பெண்ணீயம்

கலாச்சார பெண்ணீயம் பெண்கள் உள்ள ரீதியாக உயர்வானவர்கள் என்பதை

அடிப்படையாகக் கொண்டது. பெண்கள் நாடாளும்போது இந்த உலகில்

போர்கள் இருக்காது, மனித நேயத்துக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்

என்று சொல்பவர்கள் இந்த ரகம்.

லிபரல் (தனிநபர்) பெண்ணீயம்

தனிநபர் பொறுப்பு, தனிநபர் உரிமை, சுதந்திரம், தனி உடமை ஆகிய தாரக மந்திரங்களின் அடிப்படையில்

உருவானது. தனி நபர் உரிமையில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்று சொல்லும் வகை.

பொருளாதார பெண்ணீயம்

பெண்களை பொருளாதார ரீதியல் முன்னேற்றுவதை குறிக்கோளோக கொண்டவர்கள்.

சமையல் , வீட்டை பராமரித்தல் போன்ற வேலைச் சுமைகளிலிருந்து விடுபடுவது இதன் மைய

கருத்து.

மாடரேட் (மிதவாத ) பெண்ணீயம்

ஆணீயத்தால் அதிகம் பாதிக்கப்படாதவர்கள். பெண்ணீயம் அவசியமா என்று கேட்கும் பெண்கள்.

நாங்கள் பெண்ணீய வாதி அல்ல என்று சொல்லிக்கொண்டே பெண்ணீய சிந்தனைகள்

உதிர்ப்பவர்கள் .

பாப் பெண்ணீயம்

இது ஆண்களை வெறுக்கும் அல்லது வெறுப்பதாக சொல்லிக்கொள்ளும் வகை.

Separatist (பிரிவு பெண்ணீயம்)

பெண்களையும் ஆண்களையும் தனி குழுக்களாக (நிரந்தரமாக அல்ல)

பிரிக்கும் வகையை சேர்ந்தது.

Eco- பெண்ணீயம்

தந்தை வழி சமூகங்கள் விலங்குகளையும், சுற்றுப்புற சூழலையும், பெண்களையும்

அடிமைப்படுத்தியதையும் ஒன்றாக கருதுவது. பூமியை தவறாக பயன்படுத்தாமல்

மரியாதையுடன் பயன்படுத்துவது பயன் தரும், என்பது போல பெண்களையும்

அடிமைப்படுத்தாமல் மதித்து நடத்தல்லை வலியுறித்தல்.இங்கு ஒத்துழப்புக்கு முதலிடம்.

—-

kundalakesi_s@yahoo.com

Series Navigation

குண்டலகேசி

குண்டலகேசி