This entry is in the series 20010513_Issue


மைதா மாவு –அரை ஆழாக்கு

பால் –அரை ஆழாக்கு

சர்க்கரை –கால் ஆழாக்கு

ஏலக்காய் –2

குங்குமப்பூ –1சிட்டிகை

மைதா மாவை, ஒரு சிட்டிகை உப்பு போட்டு, சிறிது நீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அப்பளமாக இட்டு நெய் அல்லது ரேடியோ ஆயிலில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். கால் ஆழாக்குத் தண்ணீர், ஏலக்காய், சர்க்கரை, குங்குமப்பூ இவற்றைக் காய்ச்சிய பாலில் சேர்த்து அடுப்பில் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இப்படிக் கொதிக்கும்போது பொரித்து எடுத்த பூரிகளை 3 அல்லது 4ஆக நொறுக்கிப் பாலில் போட்டு 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்துப் பிறகு இறக்கி வைக்கவும்.

Series Navigation