பூச்சிகளின் சுய மருத்துவம்

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான்


பூச்சிகள் சுகவீனம் அடைந்தால் என்ன செய்யும் ?

இதுதான் கேள்வி ? இதற்கு விடை தேடும் முன், ஒரு பூச்சி சராசரியாக எவ்வளவு நாட்கள் வாழும் என்பது தொிந்தால், நமக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கும். அதாவது எந்தவொரு பூச்சியும் சராசரியாக சில வாரங்களே வாழும். அதுவும் நம்மைப் போல, கருவாகி, உருவாகி உடனே பிறந்துவிடாது. பொதுவாக, பூச்சிகளின் வாழ்க்கையில், முட்டை (Egg), புழு (Larva), கூட்டுப்புழு (Pupa), நன் கு வளர்ந்த முழு பூச்சிகள் (Adult) என நான் கு நி லைகள் உண்டு. இதில், புழு மற்றும் நன் கு வளர்ந்த முழு பூச்சிகள் மட்டுமே இயங்கும் திறன் கொண்டவை. எனவே, இவை மட்டுமே சுகவீனம் அடைய வாய்ப்புண்டு. ஆனால் முட்டையைத் தவிர, மற்ற அனைத்து நி லைகளும் அதிகபட்சம் ஒரு வாரம் – பத்து நாட்கள்தான் !!! முட்டை பெரும்பாலும் மூன்று – நான் கு நாட்கள்தான் !!! ஆக ஒரு இருபது, முப்பது நாட்கள் வாழ்க்கையில், அப்படி என்ன வியாதி வந்துவிடும் – அதற்கு மருத்துவம் ஒரு கேடா, என்கி றீர்களா ?

பூச்சிகள் பெரும்பாலும் சுகவீனம் அடைவது, அவற்றின் உணவு நச்சாவதால் தான் (Food poisoning). அவையும் நம்மைப் போல, பூஞ்சை, புரோட்டாசோவா, பாக்டிரியா, வைரஸ் ஆகியவற்றாலும் சுகவீனம் அடையும். ஆனால் உணவு நச்சாவதுதான் பெரும்பான்மை!!! இதற்கு அவற்றின் உணவு பழக்க வழக்கங்களைத் தொிந்து கொள்ள வேண்டும். நம்மைப் போலவே, ஒரு சில பூச்சிகள் சைவம் (Herbivore); ஒரு சில பூச்சிகள் அசைவம் (Carnivore).

உணவு பழக்க வழக்கங்களுக்கேற்ப, பூச்சிகளின் வாய் அமைப்பும் வேறுபடும். பொதுவாக, உணவை மென்று தின்னும் (Biting and Chewing) பூச்சிகளுக்கு வாய் முழுமையாக இருக்கும். நம்மைப் போலவே, அவற்றிற்கும் தாடை (Mandible), இரண்டாம்நி லை தாடை (Maxillae or Secondary Mandible), மேலுதடு (Labrum), கீழுதடு (Labium), வெட்டும் பற்கள் (Molar teeth), அரைக்கும் பற்கள் (Grinding teeth) என அனைத்துமே உண்டு. வெட்டுக்கிளிகள் மற்றும் லோகஸ்ட்களுக்கு இவ்வகை வாய் அமைப்பு உண்டு.

ஒரு சில பூச்சிகள் துளைத்து உறிஞ்சும் (Piercing and Sucking) வாய் அமைப்புடன் இருக்கும். உதாரணம் கொசு (Mosquito). இவருக்கு தாடையும், இரண்டாம்நி லை தாடையும் உள்ளீடற்ற ஊசி போன்ற உறிஞ்சு குழல் களாக (Stylet) உருமாற்றம் அடைந்துள்ளன. இந்த உள்ளீடற்ற ஊசி போன்ற உறிஞ்சு குழல் களைச் சுற்றி, மேலுதடும் கீழுதடும் பாதுகாப்பு உறைகளாக (Protective sheaths) உருமாற்றம் அடைந்துள்ளன. இந்த உள்ளீடற்ற ஊசியைக்கொண்டுதான், நம் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சும். அது சரி, கொசுக்கள் நம் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சும்போது, இரத்தம் ஏன் உறைவதில்லை ? மேலும், கொசுக்கள் நம் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சும்வரை, நமக்கு ஏன் உறைப்பதில்லை ? ஏனெனில் கொசுக்கள் முதலில் நம் உடலுக்குள் மரத்துப்போகச் (Anaesthetic compound) செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும். எனவே, நம் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சும்வரை, நமக்கு உறைப்பதில்லை. மேலும், இரத்தம் உறையாமலிருக்க, ஒரு பிரத்யேக வேதிப்பொருளையும் (Anticoagulant) செலுத்திவிடும். இன்னொன்றையும் நீங்கள் தொிந்து கொள்ள வேண்டும். நம் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் எல்லாமே பெண்கொசுக்களே! ஆண்கொசுக்களுக்கு இவ்வகை வாய் அமைப்பும் இல்லை; இரத்தத்தின் தேவையுமில்லை. பெண்கொசுக்களுக்கு, நமது இரத்தத்திலுள்ள புரதம் போனால்தான், முட்டை வைக்க முடியும்.

இன்னும், ஒரு சில பூச்சிகளுக்கு வாய் உறிஞ்சு குழல் (Straw) போலிருக்கும். பொதுவாக, பட்டுப்பூச்சிகளுக்கு இவ்வகை (Siphoning mouthpart) வாய் அமைப்பு உண்டு. எப்போதாவது, பட்டுப்பூச்சியைப் பிடித்தால் , அதன் தலையைப் பாருங்கள். உறிஞ்சு குழலைச் சுருட்டி வைத்திருக்கும். ஆனால் இவருக்கு நாக்கு கால்களில் இருக்கும். பட்டுப்பூச்சிகளின் கால்களில் சர்க்கரை கரைசலை வைத்தால் , உடனே உறிஞ்சு குழலை நீட்டும். அதாவது, பட்டுப்பூச்சிகள் பூக்களில் உட்காரும் போது, பூக்களிலுள்ள பூந்தேன் கால்களில் பட்டால் உடனே உறிஞ்சு குழலை நீட்டும்.

ஈக்களுக்கும் (Housefly) பட்டுப்பூச்சிகளைப் போல உறிஞ்சுகுழல் வாய்தான்!!! ஆனால் உறிஞ்சுகுழலின் நுனியில் Sponge போன்ற வாய் அமைப்பு (Sponging mouthpart) உண்டு. எனவே, ஈக்கள் பெரும்பாலும் திரவ உணவையே விரும்பும். Sponge யை நீரில் வைத்தால் உறிஞ்சுமே, அதைப் போலவே, திரவ உணவை உறிஞ்சும். பிறகு எதற்கு சர்க்கரைக்கு வருகிறது ? அதை எப்படி தின்னும் ? Just simple. உமிழ் நீரில் கரைத்து உறிஞ்சிவிடும்.

இன்னும், ஒரு சில பூச்சிகளுக்கு அரிவாள் போன்று நீட்டிக்கொண்டு இருக்கும் வாய் அமைப்பு (Mandibulo Suctorial) உண்டு. இவை, பெரும்பாலும் அசைவ விரும்பிகள். இவை வேட்டையாடி, இரையைப் பிடித்துக்கொள்ளும். பிறகு, இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளையும், செரிமான நொதிகளையும் செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே இவை இரையின் உடலை ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிிடும்.

இவ்வகை விதவிதமான வாய்கள்தான், அவற்றை உணவு நச்சாவதிலிருந்து பாதுகாக்கிறது. ஆனாலும், சிலநேரங்களில் மாட்டிக்கொள்ளும். அதிலிருந்து எப்படி மீள்கிறது என்பதைப் பற்றியும், தங்களின் காலை விபத்தில் இழக்கும் ஒரு சில பூச்சிகள் மீண்டும் காலை பெறுவதைப் பற்றியும்…. அடுத்த வாரம்!!

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்