புத்தாண்டுப் பொலிவு

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

வே.ச. அனந்தநாராயணன்


1. பாடிடும் வண்டுடன் வானிலே – என்றும்
பறந்திடும் புள்ளினம் விலங்குகள்

நாடொறும் புதுமையைத் தந்துநம் – வாழ்வு
நலம்பெறச் செய்வதை எண்ணிடின்

கோடியாய்ப் பரந்துள ஆலைகள் – புகை
கொட்டிடப் பண்ணிநம் சூழ்நிலை

வாடிடச் செய்வதும் நியாயமோ – க்ஷதை
வருமொரு ஆண்டினில் உன்னுவோம்

2. யாருமே அறிந்ததோர் உண்மையே – ஒவ்வோர்
ஆண்டிலும் நாம்புரி செய்கையால்

பாரிதன் வெப்பமும் கூடுதல் – படிப்
படியெனப் புவிநிலை மாறிநம்

சீர்மிகு வாழ்முறை குலையுமுன் – அந்தத்
தீமையைத் தடுத்திட நாமொரு

போரினைப் புரிந்துஅதில் வெற்றியும் – காணப்
புதுமைநல் லாண்டினில் வேண்டுவோம்

3. தீருமே நம்வினை க்ஷன்றொடு – புதுத்
தெம்புடன் உலகினை நோக்குவோம்

யாருமே நம்தமிழ்க் குடியினர்க் – கிணை
யாவரோ ஒன்றுநாம் சேர்ந்திடில் ?

சீருடன் கூடிநற் சிறப்புடன் – புகழ்
சேரநாம் சித்திர பானுவின்

பேருடைப் புதுமைநல் ஆண்டினில் – வாழப்
பேரருள் வேண்டிஎம் வாழ்த்துகள்!

***

Series Navigation

வே.ச. அனந்தநாராயணன்

வே.ச. அனந்தநாராயணன்